A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Monday, 22 July 2013
தொழில் தொடங்கலாம் வாங்க!
தொழில் தொடங்கலாம், வாங்க! |
தொழில்
|
சே வை தொழில்களுக்கான காலம் இது. எந்தப் பொருளும் தங்கள் வாசலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதே பலருடைய விருப்பமாக இருக்கிறது. யாருக்கு என்ன தேவை என்பது புரிந்து செயல்பட்டால், நமக்கு ஐடியா இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு தொழிலிலும் புகுந்து விளையாடலாம்... வருமானம் பார்க்கலாம். அவற்றில் ஒன்றுதான் ‘ஸ்டேஷனரி சப்ளை’ தொழில்.
இதை ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். படிப்புத் தகுதி என்பதில் அளவுகோல் ஏதும் இல்லை. இது நடமாடுகிற பிஸினஸ் என்பதால், இதற்குப் பெரிய அளவில் மூலதனமோ, கடை, அட்வான்ஸ், ஊழியர்கள், ஆபீஸ் செட்-அப் என எதுவும் தேவைப்படாது.
ஒரு டூ-வீலர், மொபைல் போன், கொஞ்சம் முதலீடு, கொஞ்சம் ஐடியா... முக்கியமாக, கடின உழைப்பு! இவை இருந்தால் போதும். தினமும் ரூபாய் 300 முதல் 500 வரை சம்பாதிக்கலாம்.
சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் ஏதாவது ஒருவகையில் எப்போதுமே தேவைப்பட்டுக் கொண்டிருக்கும் அலுவலக உபயோகப் பொருட்களை சப்ளை செய்வது இன்று லாபகரமான தொழிலாக இருக்கிறது. மொத்த விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதுதான் உங்கள் வருவாயின் வாசல் கதவுகள்.
வாய்ப்புகள் என்ன... எங்கு வாங்கலாம்?
சென்னையைப் பொறுத்தவரை மொத்தவிலை கடைகள் பாரீஸ் கார்னர்... திருச்சி என்றால் அல்லிமால் தெரு, மதுரை என்றால் கீழ ஆவணிமூல வீதி என்று ஊருக்கு ஊர் ஸ்டேஷனரி மொத்த விலை கடைகளின் சங்கமம் இருக்கும். எந்தெந்த கடைகளில் என்னென்ன விதமான பொருட்கள், எவ்விதமான விலைகளில் கிடைக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக இது போன்ற வியாபாரத்தில் கடன் தரமாட்டார்கள். பணம் கொடுத்து வாங்கினால் விலையிலும் சலுகை கிடைக்கும். ஒருவரிடமே ஆறு மாதம் தொடர்ந்து பொருட்கள் வாங்கும் பட்சத்தில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
மொத்த விலை கடைகளில் சுமார் ஒரு டஜன் என்ற அளவில் வாங்கினால் மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கும். குறைவான எண்ணிக்கையில் வாங்கும்போது, சில்லரை விலையில்தான் கிடைக்கும்.
மார்க்கெட்டிங் செய்வது எப்படி?
ஒன்று, ஆர்டர் எடுத்து சப்ளை செய்வது. இன்னொன்று நேரடியாகக் கடைகளுக்குச் சென்று விற்பது.
அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் குண்டூசி முதல் ஃபேக்ஸ் பேப்பர்கள் வரையான ஸ்டேஷனரி பொருட்களுக்கு மாதா மாதம் தேவை இருந்துகொண்டே இருக்கும். அந்த நிறுவன மேலாளரை அணுகி, கடையில் வாங்கும் விலையைவிட கொஞ்சம் குறைந்த் விலைக்குப் பொருட்களை விற்கலாம். இந்த ஆர்டர்கள் மாதாமாதம் கிடைக்கும். ‘போன் செய்தால், உங்களுக்குத் தேவையானதை அரைமணி நேரத்தில் சப்ளை செய்ய முடியும்’ என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்தால், அவர் தொடர்ந்து ஆர்டர் தர ஆரம்பித்து விடுவார்.
அடுத்தது, கடைகளில் நேரடியாகச் சென்று அன்றைய தேவைகளுக்குப் பொருட்களை சப்ளை செய்வது. நாளுக்கு நாள் பெருகிவரும் ஃபேன்ஸி ஸ்டோர்கள், ஸ்டேஷனரி கடைகள், மளிகைக் கடைகள், ஸ்வீட் ஸ்டால்களுக்கும் கூட ரப்பர் பேண்ட், ஸ்டேப்ளர் மெஷின், அதற்கான பின்கள், சிறிய பேடுகள், செல்லோடேப் என ஸ்டேஷனரிப் பொருட்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும். இப்படி நீளும் பட்டியலில் வாடிக்கையாளர்கள் நிறைய, நிறையவே இருப்பார்கள்.
வாங்கும் விலைக்கும், நீங்கள் விற்கும் விலைக்கும் உள்ள தகவல்களில் தெளிவான ஞானத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு எப்படி கடன் கிடைக்காதோ அதேபோல, நீங்களும் கடனுக்குக் கொடுக்கக் கூடாது. இல்லையேல், கைமுதல் வாடிக்கையாளர்களிடம் சிக்கிவிடும். சப்ளை செய்த தொகைக்கு செக் வாங்கினாலும் அன்றைய தேதியிட்ட செக்காகவே வாங்க வேண்டும். எனவே, எடுத்த எடுப்பில் அகலக்கால் வைக்காமல், நல்ல வாடிக்கையாளர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு சின்னதாகவே ஆரம்பிக்கலாம்.
முதலில் உங்களது பகுதியில் உள்ள அலுவலகம், கடைகள், தெரிந்தவர்கள், நண்பர்கள் எனத் தொடங்குங்கள்.
இதில் சீசன் என்று எதுவும் கிடையாது. மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் துவங்கும் மாதமான மே, ஜூன் வரையான காலங்களில் சற்று கூடுதல் விற்பனை இருக்கும். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் கூடுதல் முதலீட்டுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கடைகள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, பொருட்களின் தேவையும் மாறுபடும். உதாரணமாக, பள்ளி, அல்லது கல்லூரி அருகில் இருக்கும் கடைகளில் குழந்தைகள் பயன்படுத்தும், எழுதும் பொருட்கள் அதிகமாக விற்கும்.
ஓரளவு பெரிய ஆர்டர் தரும் ரெகுலர் வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லுமுன், இந்தப் பொருட்கள் போதுமா..? என்று போன் செய்துவிட்டால், அவரும் தயாராக இருப்பார். அல்லது தன் தேவைகளை அப்போதே சொல்லி, அதையும் வாங்கத் தயாராவார். இதுபோன்ற செயல்கள் உங்கள் தொழிலைப் பெருக்க உதவும்.
மார்க்கெட்டில் வந்திருக்கும் புதிய பொருட்கள், அதன் பயன்பாடு போன்ற விஷயங்களோடு தெரிவியுங்கள். இது உங்களைப் பற்றிய மதிப்பையும் வியாபாரத்தையும் அதிகரிக்க உதவும்.
ஸ்டேஷனரி தேவைகள் என்றாலே சட்டென உங்கள் பெயரும், செல் நம்பரும் நினைவுக்கு வருமளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எவ்வளவு கிடைக்கும்?
யாருமே உடனே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்று யோசிக்கும் பொருளான செல்லோடேப், ஒரு இன்ச் முதல் பல அளவுகளில் இருக்கின்றன. சாதாரணமாக இரண்டு இன்ச் டேப்தான் அதிகம் விற்பனை யாகும். இதன் விலை ரூபாய் 15 தான். சில்லரையில் இதனை விற்கும்போது ரூபாய் 20 வரை விற்கலாம்.
ரப்பர் பேண்ட் கிராம் கணக்கில் கிடைக்கும். எண்பது கிராம் பத்து ரூபாய்க்கு வாங்கலாம். இதை விற்கும்போது பதின்மூன்று ரூபாய்க்கு விற்கலாம். சிலசமயம் அதனை வாங்கி நீங்களே பிரித்து இருபது கிராம் பாக்கெட்டுகளாகப் போட்டு நான்கு ரூபாய் என விற்றால் அறுபது சதவிகிதம் வரை கிடைக்கும்.
ஸ்டேப்ளர் மெஷின், ஜெம் க்ளிப், குண்டூசி போன்ற வகைகளில் இருபத்தைந்து முதல் முப்பது சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும். இதுவே கம்பெனி அயிட்டங்கள் என்றால் லாப சதவிகி தம் குறைவுதான். பால் பாயின்ட் பேனா, இங்க் பேனாக்கள், ஐம்பது காசு முதல் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. இதில் குறைந்த விலை பேனாக்களில் லாபம் நூறு சதவிகிதம்வரை கிடைக்கும். இதுவே ரெனால்ட்ஸ், ஹீரோ போன்ற கம்பெனி பேனாக்களில் லாபம் குறைவுதான். ஆனால், நிறைய விற்பனையாகும்.
ஸ்டேஷனரி பொருட்களைப் பொறுத்தவரை, இந்திய தயாரிப்புகள் தவிர சீன தயாரிப்புகளும் இருக்கின்றன. பென்சில், பேனா ஸ்கேல், இங்க் ரிமூவர், லெட் பென்சில், ரப்பர், ஷார்ப்னர் போன்ற தயாரிப்புகளில் அவைதான் மக்களையும் பள்ளி குழந்தைகளையும் அதிகமாகக் கவர்கின்றன. விலையும் குறைவு. வித்தியாசமான வடிவமைப்போடு வரும் பொருட்களைக் கவனித்து வாங்கி உங்களது வாடிக்கை யாளரை அதிகம் வாங்கத் தூண்டிவிட வேண்டும்.
இத்தொழிலில் இறங்கிய கொஞ்ச நாட்களிலே, ஃபாஸ்ட் மூவிங் பொருள் எது, அதிக லாபம் தருவது எது, எந்த வாடிக்கை யாளருக்கு எது அதிகம் தேவைப்படும், எப்போதெல்லாம் தேவைப்படும் என்ற அனைத்தும் கற்றுத் தேர்ந்துவிடுவீர்கள். அதில்லாமல் கஸ்டமர்களை பார்க்க பார்க்க அவர்களே உங்களுக்கு பல ஐடியாக்களை சொல்லி வியாபாரத்தை விஸ்தரித்து விடுவார்கள்.
உள்ளூர் மட்டுமல்லாது முன்பின் அறிமுகமில்லாத ஊரிலும்கூட துணிந்து இறங்க முடியும். நம்பிக்கையோடு செயல்பட்டால் 2,000 முதல் 3,000 ரூபாய் முதலீட்டை ரொட்டேஷனிலேயே வைத்து மாதம் மூன்றாயிரம் ரூபாய் வரைகூட வருமானம் பார்க்க முடியும். வருகிற வருமானத்தையும் முதலோடு சேர்த்துக் கொண்டே வந்தால் வியாபாரம் பல்கிப் பெருகும்!
ஜமாயுங்கள்!
|
Subscribe to:
Post Comments (Atom)
I'm vegetable merchant trader I can take loan old contact 9840587547.. Email- Jeyaprakash792@gmail.com
ReplyDelete