A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Saturday, 30 August 2014
Pakku Mattai Plate | Business Ideas in Tamilnadu | பாக்கு மட்டை தட்டு தொழில்
இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.
இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.
மூலப்பொருள்!
பாக்கு மட்டைதான் இந்த தொழிலுக்குத் தேவையான அதிமுக்கிய மூலப்பொருள். பாக்கு மட்டைகள் கேரளா, ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைக்கும் மட்டைகள் அதிக நீளம் கொண்டவை என்பதால் பெரும் பாலானவர்கள் அங்கு கிடைக்கும் பாக்கு மட்டையைத்தான் அதிகம் வாங்குகின்றனர்.
விநாயகா பிளேட்ஸ்,Salem
--------
நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.
தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.
5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்
1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines ----- ரூ .90,000
3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000
*மின்சாரம் ஒரு ஹெச்.பி. (வீட்டு சர்வீஸ்) போதும் .
ஒரு மணி நேரத்தில் ஒரு மெசின் மூலம் 60 தட்டுகளை தயாரிக்கலாம்
*நாங்கள் உங்களுக்கு ஒரு மட்டை ரூ.2 என்ற விலையில் தருவோம் .
*ஒரு மட்டையில் 2 முதல் 3 ப்ளேட் வரை தயாரிக்கலாம்.
ப்ளேட்டின் அளவு பொறுத்து அதனை விலை கொடுத்து திரும்ப வாங்கிகொள்கிறோம் .
மேலும் விவரங்களுக்கு -
தொடர்பு கொள்க.
விநாயகா பிளேட்ஸ்,Salem
சிறப்பம்சங்கள்
*இலவச ட்ரைனிங்
*ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ்
*அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை தயாரித்து தரப்படும் .
Pakku Mattai Plate Making Video
பாக்கு மட்டை தயாரிப்பு வீடியோ கீழே
பாக்கு மட்டை தயாரிப்பு வீடியோ கீழே
|
|
V
தயாரிக்கும் முறை!
தடுக்கப்படும். பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு
ரெடி!
முதலீடு!
இந்த தொழில் செய்வதற்கு 75,000 முதல் 2,50,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
மானியம்!
இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 2.28 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மானியத் தொகை யானது இந்த தொழிலுக்கு வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத் திற்குப் பிறகு வரவு வைக்கப்படும்.
இயந்திரம்!
ஒரு யூனிட்டுக்கு ஐந்து விதமான இயந்திரங்கள் தேவை. இந்த ஐந்து விதமான இயந்திரத்திலிருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுகளில் பாக்கு மட்டை பிளேட் தயாரிக்க முடியும். மேனுவல், ஹைட்ராலிக் மற்றும் ஆட்டோமேட்டிக் என இயந்திரங் கள் பலவிதங்களில் இருக்கின்றன. இதில் மேனுவல் இயந்திரம் எனில் 75,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும். ஹைட்ராலிக் இயந்திரம் 90,000 ரூபாய் முதல் 1,25,000 ரூபாயும், ஆட்டோமேட்டிக் இயந்திரம் எனில் 2.50 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் வரை ஆகும். ஒரு யூனிட் இயந்திரத்தை கொண்டு ஐந்து விதமான அளவுகளில் பிளேட்டு களைத் தயாரிக்கலாம்.
வேலையாட்கள்!
இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவை. பெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.
தயாரிக்கப்படும் அளவுகள்!
12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.
சந்தை வாய்ப்பு!
பிளாஸ்டிக் பொருட்களினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டை பிளேட்டுகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை இருப்பதும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் தடைகளும் இந்த தொழிலுக்கு சாதகமான விஷயங்கள்.
ஃபேன்ஸி ஸ்டோர்கள், கேட்டரிங் நடத்துபவர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மட்டு மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறைய வாய்ப்புண்டு. சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைக்கும் நாடுகளில் வருங்காலத்தில் இந்த பிளேட்டு களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
சாதகங்கள்!
* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில் வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும், பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
* மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.
பாதகங்கள்!
மழைக் காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல் திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
விற்பனைக்கான விலை!
12 இஞ்ச் பிளேட் ஒன்று 2.20 ரூபாய்க்கும், 10 இஞ்ச் 1.50 ரூபாய்க்கும், 8 இஞ்ச் 1.25 ரூபாய்க்கும், 6 இஞ்ச் 75 பைசாவுக்கும், 4 இஞ்ச் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யலாம்.
நல்ல எதிர்காலம் இருக்கும் இந்த தொழிலில் இப்போதே இறங்குவதுதான் நல்லது.
அதிக டிமாண்ட் இருக்கும் தொழில்!
''அதிக டிமாண்ட் இருக்கும் இந்த தொழிலில் நம்பி இறங்கலாம்'' என்கிறார் கோயம்புத்தூர், கணபதி பிளேட்ஸ் உரிமையாளர் கிரிராஜன்.
''பாக்கு மரத்திலிருந்து கிடைக்கும் மட்டை, முன்பு எந்தவித பயன்பாட்டிற்கும் தேவைப்படாமல் இருந்தது. ஆனால், இன்றோ மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலை சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த பட்ச முதலீடாக 75,000 ரூபாயைக் கொண்டு ஆரம்பிக்கலாம். மூலப்பொருள் தவிர வேறு எந்தவிதமான பொருட்களும் தேவைப்படாத தொழில் இது. மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும். 2,500 சதுரடியில் இடம் இருந்தால் போதும். இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்து விடலாம்.
பாக்கு மட்டையை சுத்தம் செய்ய ஆறு அடி உயரம், அகலம் கொண்ட தண்ணீர்த் தொட்டி தேவை. பெரும்பாலும் உணவு பரிமாறவே இந்த பிளேட்டுகள் பயன்படுத்தப்படுவதால் பூஞ்சை வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். சில இடங்களில் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே இந்த பிளேட்டுகளை விலைக்கு வாங்கிக் கொள்ளவும் செய்கின்றன. நல்ல டிமாண்ட் இருக்கும் தொழில் என்பதால் நம்பி இறங்கலாம்'' என்றார்.
|
விநாயகா பிளேட்ஸ்,Salem
நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.
தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.
5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்
1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines ----- ரூ .90,000
3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000
*மின்சாரம் ஒரு ஹெச்.பி. (வீட்டு சர்வீஸ்) போதும் .
ஒவ்வொரு யூனிட் பொருத்தும் அதன் உற்பத்தி திறன் மாறுபடும்
மேலும் விவரங்களுக்கு -
தொடர்பு கொள்க.
விநாயகா பிளேட்ஸ்,Salem
சிறப்பம்சங்கள்
*இலவச ட்ரைனிங்
*ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ்
*அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை தயாரித்து தரப்படும் .
தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.
5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்
1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines ----- ரூ .90,000
3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000
*மின்சாரம் ஒரு ஹெச்.பி. (வீட்டு சர்வீஸ்) போதும் .
ஒவ்வொரு யூனிட் பொருத்தும் அதன் உற்பத்தி திறன் மாறுபடும்
மேலும் விவரங்களுக்கு -
தொடர்பு கொள்க.
விநாயகா பிளேட்ஸ்,Salem
சிறப்பம்சங்கள்
*இலவச ட்ரைனிங்
*ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ்
*அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை தயாரித்து தரப்படும் .
Subscribe to:
Posts (Atom)