Friday, 20 June 2014

Pakku Mattai Plate Machine Price - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு

Pakku Mattai Plate Machine Price - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 


பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 

     



து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா.பிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.

இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில்  காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?

4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது
கடுமையாக உழைத்தேன்.

பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.

இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள விநாயக பிளாட்ஸ்  என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.



நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.


5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்

                1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
               2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines   ----- ரூ .90,000
           3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
          4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000

                     *மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும்


 ஒவ்வொரு யூனிட் பொருத்தும் அதன் உற்பத்தி திறன் மாறுபடும் 


சிறப்பம்சங்கள் 
                               *இலவச ட்ரைனிங் 
                               *ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ் 
                    *அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை                 தயாரித்து தரப்படும் .





25 comments:

  1. பாக்கு மட்டை தொழில் பற்றிய விவரம் தேவை. எனது அலைபேசி எண் 7708215150 - செங்குட்டுவன் - ஆத்தூர்- சேலம்.

    ReplyDelete
  2. Please give me a details
    By, R. DHANUSH KARTHICK from Theni(dt)
    cell:-9600771430

    ReplyDelete
  3. எனக்கு பாக்கு மட்டை தொழில் ஆர்வம் உண்டு ஆனால் என்னிடம் அந்த அளவிற்கு பணவசதி இல்லை நான் bcom படித்துள்ளேன் உங்களின் ஐடியா சொல்லுங்கள்

    ReplyDelete
  4. please send u r phone number sir?...

    ReplyDelete
  5. என் பெயர் சித்தன்DME நான் சேலம் மாவட்டம் சேலம் வட்டம் அஸ்தம்பட்டி பகுதி, எனக்கு இந்த யூனிட் 2 இயந்திரம் பற்றி முழு விபரங்கள் தேவை, எனவே உங்கள் Cell phone number வேனும் என்னுடைய நம்பர் 9865983931,7448363931

    ReplyDelete
  6. எனக்கு பாக்கு மட்டை தொழில் ஆர்வம் உண்டு pls call -9677686070

    ReplyDelete
  7. எனக்கும் ஆர்வம் உள்ளது உங்கள் ஆலோசனை தேவை...!!!

    ReplyDelete
  8. எனக்கும் ஆர்வம் உள்ளதுங்க ஆனால் அந்த அளவிற்கு பணவசதி இல்லை தங்கள் ஆலோசனை தேவை என் மொபைல் எண்
    9994486565 சந்திரசேகரன் தாராபுரம்

    ReplyDelete
  9. உங்கள் போன்ற நெம்பர் கிடைக்குமா என்ற நெம்பர் 7598998917

    ReplyDelete
  10. நான் பக்குமட்டை தொழில் செய்ய விரும்புகிறேன் ஆலோசனை தேவை...தர்மபுரி...7339653826

    ReplyDelete
  11. வணக்கம் சார் என் பெயர் முஸ்தபா நான் விழுப்புரம் மாவட்டம் சார்ந்தவன். நான் பாக்குமட்டை தட்டு சிறு தொழிலாக செய்யலாம் என நினைக்கிறேன்.தயவு செய்து project details machine price budjet அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. என் அழைப்பேசி எண்ணிற்கு 8678959599தகவல் அனுப்புங்கள்

    ReplyDelete
  13. நான் மதுரையில் இருக்கிறேன். மேலதிகத் தகவல்கள் வேண்டும். Mobile: 9976146464

    ReplyDelete
  14. Hi sir this is Dhandapani from Chennai I am interetsted with plate machine I want full details pls explain this is my no 8680094449

    ReplyDelete
  15. கேசவ மூர்த்தி பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் ஆர்வம் இருக்கி 7811848688

    ReplyDelete
  16. வசதியில்லை ஆர்வமுண்டு முடிந்தால் உதவுங்கள்
    ரவி சங்கர் கோவை 9944967783

    ReplyDelete
  17. K.prabakaran vellore பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் ஆர்வம் இருக்கி 9943659427

    ReplyDelete
  18. Prabakaran பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் ஆர்வம் இருக்கி 9943659527

    ReplyDelete
  19. என் பெயர் விஜயகுமார் விழுப்புரம் மாவட்டம் எனக்கு தொழில் செய்ய ஆர்வம் உண்டு முழு விபரம் தேவை 9087250150

    ReplyDelete
  20. என் பெயர் சக்திவேல் செங்கல்பட்டு மாவட்டம் எனக்கு தொழில் செய்ய ஆர்வம் உண்டு முழு விபரம் தேவை 9566770895

    ReplyDelete
  21. என் சங்கர் நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் நான் பாக்கு மட்டையில் தட்டு சிறு தொழில் செய்ய ஆசைப்படுகிறேன். அதை செய்ய மெஷின் டிட்டைல்ஸ் மற்றும் விலை பட்டியலை அனுப்பவும் என் அலைபேசி எண். 7200717205

    ReplyDelete
  22. பாக்கு மட்டை மட்டும் எனக்கு சப்ளை செய்ய டீலர் தேவை அலைபேசி எண். 9345056366

    ReplyDelete
  23. எனக்கும் ஆர்வம் உள்ளது உங்கள் ஆலோசனை தேவை...
    9080352927

    ReplyDelete
  24. I am very interested, please advise me and explain the this business. My number 9944349488. Thanks.

    ReplyDelete