நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புறமக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையைபூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.
நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
கொண்டைக்கோழி,
குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்
நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப்பேராசிரியர் பீர் முகமதுவிடம், நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும். கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சிலவேதிப்பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும். கம்பெனித்தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும். அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்றகோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும். தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்லவீட்டுக்கு வீடு வளர்க்கலாம். புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம். அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம்.அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும். இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்குவந்து தெரிஞ்சுக்கலாம்" என்று அழைப்பு வைத்தார்.
ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம்விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன்வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாகஇயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால்தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாகமேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பதுவழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்லபார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில்நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும்.நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின்ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால்வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள்ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்புமூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச்உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டிமற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்றவேண்டியது அவசியம். அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்றவேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரைமுதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விடவேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாககுஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள்பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்குதகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்றமுட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம்உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு அடைகாப்பானில்அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம், பிறகுஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும். குஞ்சு பருவ தீவனத்தைகொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். நியோ மைசின்,டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில்ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம்.இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன்கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும்கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடுபோன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம்பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்றநோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும்கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும்விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரியஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவேகோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது,எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சிகுன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டுகிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப்பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகிளறிவிட வேண்டும்.