தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில் |
பச்சக்கென்று ஒரு வருமான வாய்ப்பு! |
A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
தொழில் |
சணல் பைகள்... ஜூட் வருமானம்! |
மா வட்ட தொழில் மையத்தில் செங்கல் சூளை ஆரம்பிக்க பதிவு செய்து, பஞ்சாயத்தில் தொழில் தொடங்க அனுமதி (லைசென்ஸ்) பெற வேண்டும். கடன் பெறுவதற்காக, செங்கல் சூளை தொழில் தொடங்குவதற்கு ஆகும் செலவுகள், தொழிலில் கிடைக்கும் லாபம் குறித்த ஒரு மினி ப்ராஜெக்டை, அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சொத்து ஜாமீனாக கடன் பெற விரும்பும் தொகையைப் போல இருமடங்கிலான, அரசு மதிப்பீட்டிலான நம்முடைய சொத்துக்களை காட்டவேண்டும். அடுத்து, செங்கல் சூளை ஆரம்பிக்க தேவையான சொந்த இடத்தையோ, அல்லது குறிப்பிட்ட வருடத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கும் இடத்தையோ அதிகாரிகள் பார்வையிட்டு கடன் தருகிறார்கள்.
கடன் தொகையை 3 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்குள் அரசு நிர்ணயிக்கிற வட்டி விகிதத்தில் திரும்பச் செலுத்தவேண்டும். இந்தத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கடந்த காலங்களில், முதன் முதலில் தொழில் தொடங்குபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகையை மானியமாக அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் இப்போது, இந்தத் தொழிலில் மானியத் தள்ளுபடி தரப்படுவதில்லை! சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் வரை கடனாக பெறலாம். குடிசைத் தொழில் ஆதலால், இந்த தொழிலுக்கு அரசாங்கம் விற்பனை வரி விலக்கு தருகிறது.
|
தொழில் |
தேவை என்னும் தேவதை! |
உங்கள் பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். சம்பளத்துக்கு வேலை செய்கிற உணர்வே அவர்களுக்கு வரக்கூடாது. ‘இது தங்கள் பிஸினஸ். தாங்களே முதலாளி...’ என்ற எண்ணத்துடன் அவர்கள் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றும் போதுதான் நேரங்காலம் பார்க்காமல் களைப்பின்றி, உற்சாகமாக, சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார்கள். நிர்வாகத்தில் நடக்கும் அநாவசியச் செலவுகள், தவறுகள், லாபத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.
இப்படிப்பட்ட உழைப்பாளியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் இன்றைய தேவையே, அவரைப் போன்ற கடுமையான, உரிமையான உழைப்பாளி கள்தான். அவரைக் கண்டுபிடித்ததுதான் உங்கள் சக்ஸஸ்! அந்த ஊழியர் தரும் புதிய ஐடியாக்களை அமல்படுத்திப் பாருங்கள். அவரது பணிவும் இன்வால்வ்மென்ட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறதா..? என்பதை மட்டும் நீங்கள் கண்காணித்து வந்தால் போதும்.
மார்க்கெட்டிங் பாகத்தில், தேவைதான் அந்தத் தொழிலை நடத்துகிறவருக்கு தேவதை. தேவை என்னும் தேவதையின் கடைக்கண் பார்வை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு பிஸினஸ் வளர்ச்சியும் இருக்கும். எனவே, உங்கள் யோசனை களையும் சிந்தனைகளையும் அந்தப் பாதையில் திருப்பும்போது தொழில் வளர்ச்சி கிடுகிடுவென இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும். எனக்கு நன்றாக டீ போடத் தெரிந்த ஒருவர் தேவை. ருசியை விரும்புகிற என் அலுவலகத்துக்கு அப்படி ஒருவரைத் தேடுகிறேன். இது பரவலாகும்போது அந்தத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு பெரிய லாபம் காத்திருப்பதாக அர்த்தம். எனக்குத் தெரிந்து இன்று தேவை அதிகமுள்ள ஏரியா, ஷூ தயாரிப்பு.
ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், வியாபாரத்தில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ‘அவர் நல்லவர்... நாணயமானவர்’ என்ற சிலரது வாய் வார்த்தைகள் அவருக்கே தெரியாமல் அவரது பிஸினஸை வளர்த்துவிடும் என்பது என் அனுபவ உண்மை.
|
தொழில் |
பிஸினஸ் என் காதலி! |
பிள்ளையார், என் பிஸினஸ் குரு!
மு ரளி ஒரு விநாயகர் ரசிகர். சின்னதும் பெரியதுமாக அவரது அறை முழுக்க 2,500 சிலைகள் வரை சேர்த்து வைத்திருக்கிறார். ‘விநாயகரோட குணம் ஒவ்வொரு பிஸினஸ் மேனுக்கும் இருந்தால் எங்கேயோ போய் விடலாம்!’ என்று ஜாலியாகச் சொன்ன முரளி, அதுபற்றி விளக்கவும் ஆரம்பித்தார்.
அவரைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. நூறடிக்கு ஒரு கோயில்ல இவரைப் பார்க்க முடியும். ‘பார்ட்டிக்கு செக் கொடுத்திருக்கேன். பார்த்துக்கோப்பா!’னு வேண்டுதலை வெச்சுட்டுப் போய்ட்டே இருக்கலாம். இந்தச் சுலபமான சந்திப்புதான் பிஸினஸ் மேனுக்குத் தேவைப்படற பலம்.
வியாபாரிக்கு ஞாபக சக்தி ரொம்ப அவசியம். அது விநாயகருக்கு உண்டு. அவர் அவதாரமான யானையின் நினைவு சக்திக்கு ஈடு இணை ஏது..? அவர் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்.
பொறுமை முக்கியம். நாலு வயசுப் பையன் ‘உட்காரு!’னு உத்தரவு போட்டாலும் யானை உடனே கீழ்ப்படியும். பத்துப் பேரைத் தூக்கிப் போட்டு பந்தாடற சக்தி உள்ள யானைக்கு இருக்கிற அந்தப் பொறுமை, சகிப்புத் தன்மை... வியாபாரிக்கு அவசியம்.
கம்பீரம்தான் முதலாளிக்கு அழகு. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிறந்த பிஸினஸ்மேன் தனியா தெரிவார். ஒரு நடையிலே, அந்த ஸ்டைலிலே அது வெளிப்பட்டு விடும். விநாயகர் (யானை)கிட்டே அந்த ஸ்டைலைப் பார்க்க முடியும்.
பாசம். கூட இருக்கிறவங்களை அணுசரிச்சு, அரவணைச்சுப் போற அந்த அன்பு, விநாயகர் கண்ணைப் பார்த்தீங்கன்னா தெரியும். சின்னக் கண்ணிலே அம்மாவோட பாசத்தைச் சொல்ற அற்புதம் அவர்கிட்டேதான் இருக்கு!’’ - தன் குரு பற்றி சிலாகித்துச் சொல்கிறார் முரளி.
|