A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Friday, 12 September 2014
தொழில் ஆத்திசூடி - உன் சுயம் அறி; உள் பயம் முறி!
''காட்டில் இருந்தாலும் சிங்கம் மந்தையில்
சேருவதில்லை: மண்ணில் கிடந்தாலும் தங்கம் மக்கிப்
போவதில்லை''
இந்த வாக்கியங்கள் என்ன சொல்கின்றன? காட்டில்
இருக்கும் சிங்கம் எந்த மந்தையோடும் சேர்ந்து தன் தனித்துவத்தை
இழப்பதில்லை. அது தன் அடையாளத்தைத் தனியே காட்டுவதில் முனைப்புடன்தான்
இருக்கிறது. அதேபோல் மண்ணுக்குள் புதைந்திருக்கும் தங்கம் மக்கிப்போகாமல்,
தன் தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்வதில்லை. அதாவது, பூமியின்
செரிமானத்திறன் தங்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. சிங்கமும், தங்கமும்
எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் சுயத்தை இழப்பதில்லை.
சுயத்தை ஒருவர் இழக்காமல் இருப்பதன் முதல்படி, அவர்
தன் சுயத்தின் நிஜ பலத்தை அறிவது. தன் சுயத்தை அறிவதும் அதைப்
பேணிகாப்பதும் ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான மூலதனம்.
தொழில்முனைவோரின் வாழ்க்கைப் பாதை இந்த சுயம் அறிதல்
மற்றும் அதைப் பேணிகாத்தல் என்பதில் முழுமூச்சாக பயணம் செய்ய வேண்டும்.
அது அவர் சார்ந்த தொழில் துறையில் அவரை தனித்துவமான வெற்றிக்கு அழைத்துச்
செல்லும். இன்று தொழில் முனைவோர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை...
1. குறிப்பிட்ட தொழிலில் காதல் ஏற்பட்டு, அது தன் சிந்தனையோட்டத்துடன் தொடர்புடையது என அதில் இறங்கி, வெற்றிவாகை சூடியவர்கள்.
2. பரம்பரையாகச் செய்துவரும் தொழிலை குழந்தைப் பருவம் முதலே கற்று அந்தத் தொழிலை மென்மேலும் மெருகேற்றுபவர்கள்.
3. ஒரு குறிப்பிட்ட தொழிலின் தொழிலாளியாக இருந்து
அதைக் கற்று, சுயமாகச் செய்ய ஆரம்பித்து, 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்தத்
தொழிலில் விஸ்வரூபம் எடுப்பவர்கள்.
4. தன் குடும்பத் தொழிலில் ஈடுபட்டு, ஆனால் தனக்கு
இந்தத் தொழில் பிடிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே தொழில் செய்து அதில்
தேக்கநிலையிலே இருப்பவர்கள்.
5. 'சார், முதலீடு எனக்கு பிரச்னை இல்லை. புதுசா என்ன
தொழில் செய்யலாம், சொல்லுங்க!’ என்று மூன்று வருடத்திற்கு ஒருமுறை
வெவ்வேறு தொழில் செய்பவர்கள்.
6. 'எனக்கு கடன் ஜாஸ்தி ஆயிடுச்சி! நான் தொழில் செய்து
கடன் அடைக்கப்போறேன் என்று கிளம்பி, சில ஆண்டுகளுக்குள் மீண்டும்
சம்பளத்துக்கே வேலைக்குச் செல்பவர்கள்.
7. 'சார், இந்தத் தொழில் சூப்பராப் போகுதாமே! நானும் அதுல ஒரு கடை ஆரம்பிக்கிறேன்’ என்று இலக்கு இல்லாமல் செல்பவர்கள்.
இத்தனை வகை தொழில்முனைவோர்களில் முதல் மூன்று வகையினர்
பெரும் தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். ஏனெனில், இவர்கள் அடிக்கும்
காற்றில் பறக்கும் காய்ந்த சருகைப்போல தங்கள் சிந்தனையை அலையவிடுவதில்லை.
மாறாக, இவர்கள் புயலுக்கும் தாக்குப்பிடிக்கும் ஆலமரமாக தங்கள் சிந்தனையை
நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் தன் தொழிலின் அன்றன்றைய
மாறுபாடுகளைப் பொறுத்து எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஏனெனில்,
நிகழ்காலப் போராட்டங்களில் இவர்கள் லயிப்பதில்லை. அந்தத் தொழிலின்
எதிர்காலத்தையே இவர்கள் நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் தன் சுயம்
சொல்வதைக் கேட்கிறார்கள்.
இப்படிப்பட்ட சுயத்தை அறிவதற்கு, முதலில் உங்களின்
தனிப்பட்ட பலம், பலவீனம் அறியவேண்டும். இது உங்கள் மனதுக்கு நீங்கள்
நேர்மையானவராக இருந்தால், இதை அறிக்கையிட்டு ஒரு பேப்பரில் எழுதுங்கள்.
பின் நீங்கள் உங்கள் துறை சார்ந்த மற்றும் நீங்கள் ஈடுபடப்போகும் துறை
சார்பான தகவல்களைத் தேடித் தேடி படியுங்கள். உங்களைச் சுற்றி 'ஆமாம்
சாமி’களை வைத்துக்கொள்ளாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு பிடித்தமில்லாத ஒரு
தொழிலை, அடுத்தவர் பேச்சைக் கேட்டு செய்யாதீர்கள். உங்களுக்கு பிராய்லர்
கோழி பிடிக்கும். அதன் கறி பிடிக்கும். ஆனால், ஈமு கோழி வளர்ப்புதான்
பெஸ்ட் என்று உங்கள் ஊரே உங்களைச் சுற்றி நின்று கும்மியடித்தாலும்,
உங்கள் உள்மனதை ஒருமுறை நேர்மையுடன் கேளுங்கள், 'நான் ஈமு கறி
சாப்பிடுகிறேனா? என் உறவினர் யாராவது ஈமு கறி சாப்பிடுகிறார்களா?’ இதன்
பதில் என்னவோ, உங்கள் உள் மனம் என்ன பதில் சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள்.
புது தொழிலை பற்றி சிந்திக்கும்போது, சிங்கமாக நீங்கள் எந்த மந்தையோடும்
சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது
உங்களை மந்தையோடு சேர்த்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.
தொழில் செய்யும் பலருக்கு சுயம் அறிவது பல நேரங்களில்
நடக்கவே செய்கிறது. தான் என்னவெல்லாம் நினைக்கிறோம், என்னவெல்லாம் செய்ய
முடியும், தான் இருக்கும் தொழில் துறையில் என்னவெல்லாம் வாய்ப்புகள் உள்ளன
என்பது பலருக்கும் தெரியவே செய்கிறது. பெரிதாக தொழிலில் சாதிக்கவேண்டும்
என்ற கனவு பலருக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால், தன் சுயம் அறிந்தபின்
இவர்களைச் செயல்பட விடாமல் தடுப்பது 'உள் பயம்’. இது நமது சுற்றம்,
நட்புகளின் போதனை, பயமுறுத்தல்கள் மற்றும் நமது அறியாமை இந்த மூன்றையும்
ஊட்டச் சத்தாகப் பெற்று நன்கு வளர வளர நாம் தொடங்கிய இடத்திலேயே நின்று
கொண்டிருப்போம், நம் சிந்தனை வளம் நன்றாக இருந்தாலும்கூட...
உங்கள் மனச்சிறையில் எப்போதும் 'சுயம்’, 'பயம்’ என்ற
இரண்டு சிங்கங்கள் சண்டை இட்டுக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் எந்த
சிங்கத்திற்கு அதிகமாக உணவளிக்கிறீர்களோ, அந்தச் சிங்கம் பெரும்பாலான
நேரங்களில் வெற்றி பெறுகிறது.
தன்
மனதில் எப்போதும் சுயம் என்ற சிங்கத்திற்கே அதிக உணவளித்து, உள் பயம் என்ற
சிங்கத்தைத் துவைத்து காயப் போட்டு, தான் நினைத்ததை எல்லாம் வெற்றிகரமாக
சாதித்துக் கொண்டதோடு அல்லாமல், தமிழகத்தின் கடலூரில் ஆரம்பித்த தனது
நிறுவனத்தை, இன்று சர்வதேச நிறுவனங்களோடு போட்டியிடும் நிறுவனமாக
நிலைநிறுத்தியிருக்கும் தொழிலதிபர் சி.கே.ஆர். என எல்லோராலும் செல்லமாக
அழைக்கப்படும் கெவின்கேர் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ரங்கநாதன். தன் சுயம்
அறிந்து, உள் பயம் முறித்த மனிதர்களுள் மிக முக்கியமானவர்.
1983-ல் 15,000 ரூபாய் முதலீட்டுடன் கடலூரில் ஒரு
சின்ன அறையில் தனது நிறுவனத்தை சி.கே.ஆர். ஆரம்பித்தார். அடித்தட்டு
மக்களின் தேவைக்காக சிக் ஷாம்பு சாஷே பாக்கெட்டுகளைத் தயாரித்தார்.
ஆரம்பத்தில் தன் தயாரிப்பைச் சந்தையில் நிலைநிறுத்த பெரும் சவால்களைச்
சந்தித்தார். ஆனால், மனம் தளரவில்லை. மக்களைக் கவர, மூன்று காலி சாஷே
பாக்கெட்டுகளைத் தந்தால் ஒரு சிக் ஷாம்பு பாக்கெட் இலவசம் என்று அந்தக்
காலக்கட்டத்தில் அவர் அறிவித்த ஒரு திட்டம் சிக் ஷாம்புவை சந்தையில் நன்கு
நிலைநிறுத்திய தோடு அல்லாமல் அவரது நிறுவனத்தையும் வளர்ச்சியில் அடுத்தக்
கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இத்திட்டம், அந்த நேரத்தில் மிகவும் புதுமையானது.
ஆனால், ஒரு புது தொழிலதிபரின் பார்வையில் மிகவும் அபாயகரமானதும்கூட.
ஒருவேளை இத்திட்டம் தோல்வி அடைந்தால் மிகப் பெரிய இழப்பை நிறுவனம்
சந்திக்க வேண்டும் என்று அவரை பலர் அன்று பயமுறுத்தியிருக்கலாம். ஆனால்,
அவர் தன் திட்டத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்தார். தன் உள்மனம்
சொன்னதைச் செய்தார். அன்று பெரும் வெற்றி அடைந்தார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் ஒரே
நிறுவனத்திற்குள் நிறைய பிராண்டுகளை உருவாக்கியவர் அவர்தான். இது சர்வதேச
தொழிலதிபர்களிடம் பொதுவாகக் காணப்படும் குணாதிசயம். கடலூரில் பிறந்த
சி.கே.ஆருக்கு இந்தக் குணாதிசயங்கள் இயற்கையிலேயே இருந்தது பெரிய விஷயம்.
ஏனெனில், ஒரு பொருளை உற்பத்தி செய்வதைவிட, அதை பிராண்டிங் செய்ய அதிகம்
செலவாகும். இதற்கு பயந்தே பலர் இதில் பின்தங்கி, தொழிலும் பின்தங்கி
விடுகிறார்கள். ஆனால், இந்தப் பயம் சி.கே.ஆரிடம் இல்லை.
தொழில் ஆரம்பிக்கும் பலருக்கு மூலதனம் திரட்டுவதில்
பெரும் பயம் இருக்கும். ஆனால் சி.கே.ஆர். இதை தனது மாற்றுச் சிந்தனைகள்
மூலம் எதிர்கொண்டார். மூலதனம் இல்லை என்று பயப்படாதீர்கள். உங்கள் மூளையே
உங்கள் முதலீடு என்று அவர் சொல்வது தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும்
ஒரு உற்சாக டானிக். தன் சுயம் அறிந்து, உள்பயத்தை அவர் முறித்ததன் விளைவு,
சாஷே பாக்கெட்டில் ஆரம்பித்த சி.கே.ஆர்., பிரீமியம் செக்மென்ட்
பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்து, அதிலும் பெரும் வெற்றி கண்டார். இன்று
இந்நிறுவனம் 1,200 கோடி ரூபாய்களுக்குமேல் டேர்னோவர் செய்கிறது.
Business Ideas in Tamil | Self Employment Ideas | Tamilnadu | Profitable Business | For Womens | Chennai
Suya Siru Tholil Thozhil Munaivor சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Tamil
Business Ideas in Tamil | Self Employment Ideas | Tamilnadu | Profitable Business | For Womens | Chennai
Business Ideas in Tamil | Tamilnadu
1) சுயதொழில் CD/DVDBusiness Ideas in Tamil | Tamilnadu
சுய தொழில்கள்
1.கம்ப்யூட்டர் சாம்பிராணி,
2.மெழுகுவர்த்தி,
3.வாஷிங் பவுடர்,
4.கிளீனிங் பவுடர்,
5.வாசனை சொட்டு நீலம்,
6.பினாயில்,
7.சோப் ஆயில்,
8.பால் குளியல் சோப்,
9.ஷாம்பு,
10.ஓம வாட்டர்,
11.பேனா மை
3.வாஷிங் பவுடர்,
4.கிளீனிங் பவுடர்,
5.வாசனை சொட்டு நீலம்,
6.பினாயில்,
7.சோப் ஆயில்,
8.பால் குளியல் சோப்,
9.ஷாம்பு,
10.ஓம வாட்டர்,
11.பேனா மை
-
"11-CD/DVD யின் விலை
ரூ. 900 மட்டுமே - தள்ளுபடிவிலையில்." + (ரூ.50 கொரியர் கட்டணம்தனி)
★★★★★★★★★★★★★
"தனி CD/DVD-யின்
விலை ரூ.200+50 மட்டுமே
இதில்
1)தொழில் அறிமுகம்,
2)செய்முறை விளக்கம்,
3)பயன்பாடு,
4)வெற்றியாளர்களின் பேட்டியுடன்
5)மூலப்பொருட்கள் கிடைக்கும் முகவரியும்,
6) இயந்திரம் கிடைக்கும் முகவரியும் இருக்கிறது.
நீங்கள் சுயதொழிலாகவும் செய்யலாம்...
(அல்லது)
உங்கள் வீட்டுத் தேவைகளுக்கு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்
*தொழிலை ஆரம்பிக்க ரூ.500 முதலீடே போதுமானது...
CD/DVD தேவைப்படுவோர் ,தீபம் கிரேஷன்ஸ் .
270,பாப்பம்மாள் தெரு ,அம்மை நாயக்கனூர் ,நிலக்கோட்டை தாலுக்கா ,திண்டுக்கல் மாவட்டம் ,
9524675234
270,பாப்பம்மாள் தெரு ,அம்மை நாயக்கனூர் ,நிலக்கோட்டை தாலுக்கா ,திண்டுக்கல் மாவட்டம் ,
9524675234
என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்'
ஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம் விலை ரூ .13,000
ஊதுபத்தி தொழில் தொடங்க அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும்.
*SINGLE PEDAL MODEL VIDEO
|
|
|
V
AGARBATTI MAKING MACHINE ,NO POWER REQUIRED,NO SKILL REQUIRED,VERY EASY TO MAINTAIN,VERY AFFORDABLE PRICE Machine With Table .
SINGLE PHASE CURRENT -------- வீட்டு கரண்ட் போதுமானது
*SINGLE PEDAL MANUAL RS 13,000 ONLY .
*DOUBLE PEDAL MODEL MANUAL RS 15,500 ONLY.
*SEMI AUTOMATIC MODEL RS 65,000 ONLY.
*FULLY AUTOMATIC RS 75,000 ONLY.
*SEMI AUTOMATIC MODEL VIDEO
SINGLE PHASE CURRENT -------- வீட்டு கரண்ட் போதுமானது
*அகர்பத்தி மெஷின் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை
*அகர்பத்தி தொழில் செய்ய தேவையான வழிகாட்டுதலுக்கு
தொடர்புக்கு
*FULLY AUTOMATIC MODEL VIDEO
*SEMI AUTOMATIC MODEL RS 65,000 ONLY.
*FULLY AUTOMATIC RS 75,000 ONLY.
*SEMI AUTOMATIC MODEL VIDEO
|
|
|
V
SINGLE PHASE CURRENT -------- வீட்டு கரண்ட் போதுமானது
*அகர்பத்தி மெஷின் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை
*அகர்பத்தி உற்பத்தி செய்ய உரிய பயிற்சி மற்றும் மூல
பொருட்கள் விற்பனை
*அகர்பத்தி தொழில் செய்ய தேவையான வழிகாட்டுதலுக்கு
தொடர்புக்கு
|
|
|
V
*PRODUCTION CAPACITY OF 8000 TO 30000 STICKS PER SHIFT,
*RAW AGARBATTI FROM 3MM TO 6 MM THICKNESS AND LENGTH 6 INCH TO 14 INCH
*MASALA AGARBATTI CAN ALL SO BE MADE BY THIS MACHINE,
*ROUND AND SQUARE(POLISHED EVEN STICK LESS THAN 2MM DIA )STICKS CAN BE USED
*HARDENED STRUCTURE WITH SS ROCKET AND NOZZLE
*MACHINE FULLY MADE IN INDIA
பிசினஸ் தந்திரங்கள்!
பிசினஸ் தந்திரங்கள்!
டேர்னரவுண்டு சூழ்நிலை!
ஸ்ட்ராடஜி 18கம்பெனிகள் ஜெயித்த கதை
ஒரு தொழில் உருவாகி, வளர்ந்து, சீரான நிலையை அடைந்து, கடைசியில் தேக்கநிலையை அடையும்போது என்னென்ன யுக்திகளைப் பயன்படுத்தி ஜெயிக்கலாம் என்பது பற்றி கடந்த இதழ்களில் உதாரணங்களுடன் பார்த்தோம். இனி, குறிப்பிட்ட இரு சுழ்நிலைகளில் தொழில்கள் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கும், இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்த இரு சூழ்நிலைகளில் முதலாவதாக டேர்னரவுண்டு சூழ்நிலைப் பற்றி முதலில் எடுத்துக்கொள்வோம்.
ஒரு டேர்னரவுண்டு சூழ்நிலையில் செயலாற்றுவது என்பது
ஒரு நோயாளியை ஐ.சி.யூ. வார்டில் வைத்து கவனிப்பதற்கு ஒப்பானது.
மருத்துவமனையில் ஐ.சி.யூ. வார்டு என்பது கிட்டத்தட்ட வாழ்க்கையின் கடைசிப்
படிக்கட்டு என்றே சொல்லலாம். நோயாளியின் செயல்படாத உடல் உறுப்புகளை
செயல்பட வைப்பதுதான் இங்கு முதல் மற்றும் முக்கியமான வேலையாக இருக்கும்.
சீரான இயக்கத்தை நிலைநிறுத்துவது, பழையபடி ஆரோக்கியமான உடல்நிலைக்குத்
திரும்புவது எல்லாம் அதற்கு அடுத்ததுதான். அதாவது, பொது மருத்துவ அறைக்கு
கொண்டுவந்த பிறகுதான் சீரான இயக்கத்திற்கான மருத்துவச் சிகிச்சை தொடங்கும்.
இப்படியான ஒரு சூழ்நிலையைத் தொழிலிலும் நாம் சந்திக்க
வேண்டியிருக்கும். ஒரு காலகட்டத்தில் சந்தையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை
வைத்திருந்துவிட்டு, பிற்பாடு தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் அந்த
நிறுவனம் தனது சந்தையை இழக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிலைமையில் என்ன
செய்து அந்த நிறுவனத்தை மீட்டெடுப்பது என்பதை எடுத்துச் சொல்ல ஒரு சிறந்த
உதாரணம், இந்தியன் வங்கி.
இந்தியன் வங்கி, வங்கித் துறையில் நூறாண்டு அனுபவம்
கொண்டது. வங்கித் தொழிலில் குறிப்பிட்ட அளவு சந்தையும் இந்த வங்கியிடம்
உள்ளது. சந்தையில் நம்பிக்கை பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால்,
1997-2000 ஆண்டுகளில் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைமைக்கே சென்றது இந்த
வங்கி. மோசமான வங்கி என்றும் பெயரெடுத்தது. இத்தனைக்கும் 1980-க்குப்
பிறகு நல்ல லாபத்துடன் செயல்பட்டு வந்தது. வங்கித் துறையில் பழுத்த
அனுபவம் கொண்ட இந்நிறுவனம், எத்தனை போட்டிகள் வந்தாலும் சாமாளிக்கக்கூடிய
நம்பிக்கையான சந்தையை தன் கைவசம் வைத்திருந்தது. ஆனால், சில தவறான
வழிகாட்டுதல், தவறான அணுகுமுறைகளால் மொத்தச் சந்தையையும் இழக்க
வேண்டியிருந்தது.
அந்த வருடங்களில் இந்தியன் வங்கியின் செயல்படாத சொத்து
மதிப்பு மட்டும் 43%. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி சொத்து முடங்கி
இருந்தது. தவறான கடன் கொள்கை, கடன் வாங்கியவர்கள் திருப்பிக்
கட்டாமல்விட்டது என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வங்கி திவாலாகும்
நிலைமையில் இருக்கிறது என்பதால், வாடிக்கையாளர்களிடத்திலும் பயம்
வந்துவிட்டது. சேமிப்புக் கணக்கில் உள்ள பணம், வைப்பு நிதிகளை எடுப்பதற்கு
வந்து நின்றனர்.
ஒரு கட்டத்தில் அரசு தலையிட்டு நான்கு நபர்களைக்கொண்ட
ஒரு குழுவை அமைத்து, வங்கியின் நிலைமை குறித்து அறிக்கை அளிக்கச் சொன்னது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், வங்கியைத் திவாலாகாமல் காப்பாற்ற கடனுதவி
அளித்து, புதிய தலைவரையும் நியமித்தது. 2000-ல் ரஞ்சனா குமார் பொறுப்பேற்ற
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் செயல்படாமல் முடங்கிய சொத்து மதிப்பை 45
சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைத்தார். 2003-ம்
ஆண்டில் இந்த நிலைமையிலிருந்து தாண்டிவிட்டார். அதற்கடுத்த வருடங்களில்
இந்தியன் வங்கி நல்ல லாப நிலைமைக்கு வந்துவிட்டது. திவாலாகும்
நிலைமைக்குச் சென்ற நிறுவனத்தை நான்கு வருடங்களில் நல்ல லாப நிலைமைக்கு
கொண்டுவந்தார் ரஞ்சனா குமார். இந்தியன் வங்கியின் வரலாற்றில் இவர் எடுத்த
நடவடிக்கை கள் ஒவ்வொன்றும் ஒரு பாடம்.
பொறுப்பேற்றதும் முதல் வேலையாக நிர்வாகத்தை மாற்றி
அமைத்தார் அவர். தலைமை அதிகாரிகள் முதல் கடைசி ஊழியர்கள் வரை தனது
திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது, வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்
அதேவேளையில் செலவுகளைக் குறைத்தது, சரியாகச் செயல்படாத கிளைகளை இணைப்பது,
நான்கு படிநிலையில் இருந்த நிர்வாக அமைப்பை மூன்று நிலைகளாக மாற்றி,
பணிகளை விரைவுபடுத்தியது, ஒவ்வொரு பணியாளரிடத்திலும் அவரது பொறுப்பை
உணர்த்துவது தொடர்பான பயிற்சிகள், எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு
பயிற்சி வேலைகளை வழங்கி அவர்களை பயன்படுத்திக்கொண்டது, 78 சதவிகித வேலைகளை
கணினிமயமாக்கியது என பல மாற்றங்களை மேற்கொண்டார்.
விளைவு, 1997-2000 ஆண்டுகளில் 349 கோடியாக இருந்த அதன்
செயல்பாட்டு நஷ்டம், 2000-2003 காலகட்டங்களில் 959 கோடி லாபம் என
பாசிட்டிவ் நிலைமையை அடைந்தது. வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழக்காமலிருக்க
வேண்டும் என்றால், பணியாளர்கள் நம்பிக்கை யோடு செயலாற்றவேண்டும் என்கிற
கலாசாரத்தை உருவாக்கினார். 2003-க்கு பிறகு இந்தியன் வங்கி சீரான நிலைமையை
அடைந்து, திவாலாகும் நிலைமையில் இருந்து தப்பியது. பொதுத்துறை நிறுவனம்
என்பதால் அரசு கடன் தந்து காப்பாற்றியது என்கிற செய்திகளை எல்லாம் தாண்டி,
அந்த நேரத்தில் பயன்படுத்திய தொழில் உத்திகள்தான் இந்த மாற்றங்களைக்
கொண்டு வந்தது என்பதே உண்மை.
இந்த டேர்னரவுண்டு சூழ்நிலையில் செயல்பாட்டு உத்திகள்
(ஆபரேஷனல் ஸ்ட்ராடஜி), ஸ்ட்ராடஜிக்கல் ஸ்ட்ராடஜி என இரண்டு வகைகளில்
தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, இப்போதைய
நிலைமையிலிருந்து எப்படி மீள்வது என்பதை அடிப்படையாகக்கொண்ட முதல்
உத்தியும், இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை வராமலிருக்க என்ன
செய்வது என்பதை அடிப்படையாகக்கொண்ட இரண்டாவது உத்தியும் புகுத்த வேண்டும்.
செயல்பாட்டு உத்திகளில்தான் முக்கிய முடிவுகள்
எடுக்கவேண்டியிருக்கும். வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிடும் அதேவேளையில்
செலவினங்களைக் குறைப்பது முக்கியம். எந்தெந்த வகையில் சாத்தியமோ அனைத்து
வகையிலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, கேஷ் ஃப்ளோ
நிர்வாகம். நிறுவனத்தின் வரவு மற்றும் செலவு விவகாரங்களில் சரியான
திட்டமிடுதலைக் கொண்டுவரவேண்டும். உதாரணமாக, உற்பத்தி சார்ந்த நிறுவனம்
என்றால் கொள்முதலுக்கு தரும் பணத்தை மொத்தமாக செட்டில்மென்ட் செய்யாமல்
பகுதி பகுதியாகப் பிரித்துத் தருவது, நமக்கு வரவேண்டிய பணம் என்றால்
மொத்தமாக கேட்டுப் பெறுவது என்பதுபோல் திட்டமிட வேண்டும்.
இதுதவிர, தேவையற்ற சொத்துக்களைக் குறைப்பது.
இப்போதையச் சூழ்நிலையில் எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கும் சொத்துக்களை
குறைப்பது என இதில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதை
முன்மாதிரியாகக் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை நாம்
சந்திக்காம லிருக்க திட்டங்களை வகுத்துக்கொள்வதும் முக்கியமானது.
மூழ்கும் நிறுவனத்தைத் தூக்கி நிமிர்த்த பழைய
நிர்வாகத்தினால் முடியாது என்று தெரிந்ததும், ஏற்கெனவே இருக்கும்
நிலைமையிலிருந்து புது நிர்வாக கலாசாரத்தையே உருவாக்கவேண்டும். செயல்பட
முடியாத உறுப்புகளுக்குப் பதிலாக மாற்று உறுப்பு பொருத்துவதுபோல, புது
ரத்தம் தருவதுபோல இந்த மாற்றங்களும் அவசியமான ஒன்று.
சந்தையில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கவேண்டுமெனில்
டேர்னரவுண்டு சூழ்நிலையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான்
இருக்கிறது. ஊரெல்லாம் பட்டாசு வெடிக்கும்போது நாம் மட்டும் வேடிக்கைப்
பார்க்கும் மனநிலையில் இருக்கக்கூடாது, இல்லையா?
(வியூகம் அமைப்போம்)
பில்கேட்ஸுக்கு எதிர்ப்பு!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து
விலகுமாறு பில்கேட்ஸுக்கு நெருக்கடி உருவாகி இருக்கிறது. இந்த நிறுவன
முதலீட்டாளர்களில் மூன்று பேர்தான் இந்த நெருக்கடிக்கு காரணம்.
மைக்ரோசாஃப்டின் செயல்பாட்டுத் திறனை உயர்த்தி, பங்கின் விலையை உயர்த்த
வழி செய்யுமாறு அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஸ்டீவ் பால்மருக்கு
நெருக்கடி அதிகரித்து வந்தது. இப்போது பில்கேட்ஸ் மீதும் இந்த நெருக்குதலை
தரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், பில்கேட்ஸ் இந்த கோரிக்கையை சட்டை
செய்யவே இல்லை!
small business ideas in tamil language
self employment ideas in tamil
business ideas in tamil pdf
profitable business ideas
tamil business directory
business ideas in tamil language
start own business ideas from home
siru thozhil ideas in tamil
தொழில் ஆத்திசூடி நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்...
தொழில் ஆத்திசூடி நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்...
திரைகடல் ஓடி திரவியம் தேட, 3000 வருடங்களுக்கு முன்பே
பாய் மரக் கப்பல் கட்டிச் சென்று, பாரசீகத்துடனும், கிரேக்கத்துடனும்
வணிகம் செய்த பெருமை கொண்டது நம் தமிழ் சமூகம்; ஆனால், இன்றோ, CTC (Cost
To Company) பேக்கேஜ்’ என்கிற கார்ப்பரேட் சுவருக்குள் முடங்கி சுகமாக
தூக்கம் போடுவதையே பழக்கமாக்கிக்கொண்டுவிட்டது.
பள்ளிக் குழந்தைகளையும், மாணவர்களையும் 90
சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே அவர்களின்
எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று போதனை செய்தும், அந்த எல்லையை நோக்கியே
அவர்களை ஆண்டாண்டு காலமாக துரத்திவந்த நம் சமூகம், கடந்த இருபது
வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கு வேறு ஒரு வாழ்க்கையைக் கற்பித்து
வருகிறது.
'ஒரு நல்ல இன்ஜினீயரிங் காலேஜில் படிப்பு, கேம்பஸ்
இன்டர்வியூ, ப்ளேஸ்மென்ட் மற்றும் கை நிறைய சம்பளம் என்கிற எல்லைகளை
வரையறுத்து, இந்த எல்லைகளுக்கு மேல் வாழ்க்கை என்பதே இல்லை’ என்கிற
மாதிரியான ஒரு கருத்தை நம் இளம்தலைமுறை மீது திணித்து வருகிறது இன்றைய
சமூகம். கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத மாணவன் 21 வயதிலேயே
வாழ்க்கையில் தோற்றவனாகப் பார்க்கப்படுகிறான். ப்ளேஸ்மென்ட் பெறாத
மாணவனைப் பெற்ற பெற்றோர்கள், நான்கு ஆண்டு தண்டச் செலவு செய்ததாகவே
பார்க்கிறார்கள்.
தொடக்கக் கல்வி, உயர்கல்வி என்று பேசிய நிலை மாறி,
படிப்புகளில் நல்ல படிப்பு, தேவை இல்லாத படிப்பு என்று பிரித்துப்
பார்க்கிற நிலை வந்துவிட்டது. படிப்பு என்பது வேலை பெற; வேலை பெறுவது
சம்பளம் பெற; சம்பளம் பெறுவது லோன் பெற; லோன் பெறுவது வீடு வாங்க; வீடு
வாங்குவது காலம் முழுவதும் கடன் அடைக்க என்றே நம் வாழ்க்கை
சுழன்றுகொண்டிருக்கிறது. கடன் கட்டவே வாழும் இந்த வாழ்க்கையையே கடனே
என்றுதான் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்காகத்தான் நாம் பிறந்தோமா?
இல்லை, நமக்கான வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்வதன்
மூலம் மகிழ்ச்சியான, மனநிறைவைத் தரும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கத்தான்
பிறந்திருக்கிறோம். அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளில்
ஒன்று, தொழில் முனைவர் ஆவது. நீங்கள் வெற்றிகரமான ஒரு தொழிலதிபர் ஆவதற்கான
அடிப்படையை உங்களுக்கு கற்றுத் தரத்தான் இந்த தொழில் ஆத்திசூடி.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதன் மூலம் நீங்களும்
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், நீங்கள்
ஒரு தொழிலதிபர் ஆகிவிட்டால், நீங்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான
குடும்பங்கள் உங்களால் மகிழ்ச்சி அடையும்.
தவிர,
இந்தியா என்பது வளரும் தேசம். இன்னும் ஆயிரமாயிரம் தொழில்கள், லட்சக்
கணக்கான தொழிலதிபர்கள் வந்தால்கூட லாபம் பார்க்கிற அளவுக்கு மிகப் பெரிய
சந்தை உள்ள நாடு. இப்படி பல பாசிட்டிவ்-ஆன சூழல் இருக்கும்போது வேலை,
மாதச் சம்பளம் என்கிற கவர்ச்சிப் போர்வைக்குள் நாம் ஏன் முடங்கிக்
கிடக்கவேண்டும்?
''சார், நான் மாதச் சம்பளத்தையே நம்பியிருக்கும்
சாதாரண மிடில் கிளாஸ் ரகம். நான் தொழில் செய்ய நினைப்பது சாத்தியமா?''
என்பதுதானே உங்கள் கேள்வி. கர்சன்பாய் படேலின் கதையைக் கேட்டால், உங்கள்
கேள்விக்கான பதில் கிடைக்கும். நம்பிக்கை என்கிற டானிக் உடனே உங்கள்
நெஞ்சுக்குள் சுரக்க ஆரம்பிக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு... 1960-களில் இந்தியாவில்
ஒரு பட்டப்படிப்பும், அரசு வேலையும்தான் சமூகத்தில் பெரும் தகுதியாகப்
பார்க்கப்பட்டது. 1945-ல் குஜராத்தில் பிறந்த கர்சன்பாய் படேல், வேதியியல்
பாடத்தில் பட்டப்படிப்பு படித்தார். 21-வது வயதில் குஜராத் அரசின்
சுரங்கத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
முதல் தலைமுறை பட்டதாரியான அவருக்கு அரசு வேலை
கிடைத்ததால் அவர் வீட்டில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. வேதியியல்
பட்டதாரியான அவரால், அரசு சுரங்கத் துறையில் மாதாமாதம் கிடைக்கும்
சம்பளத்தைப் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதைப் பெரும்பேறாக
அவரால் நினைக்க முடியவில்லை. தனக்கு இருக்கும் வேதியியல் திறமை
மழுங்கடிக்கப்படுவதாக அவர் தன் மனசுக்குள் குமைந்தார்.
தன் திறமையையும் ஆர்வத்தையும் வெளிக்காட்டும் வழிகளைத்
தேடினார். தினமும் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபின் ஏதாவது ஒரு
தொழில் செய்ய விரும்பினார். அவரது வேதியியல் மூளை, அவரை அதிக பாஸ்பேட்
கலக்காத சலவை உப்பு தயாரிக்கத் தூண்டியது. அதில் என்ன விசேஷம் என்று
கேட்கிறீர்களா?
அந்த
சமயத்தில், துணி துவைக்கும் பெண்களின் கைகள் பாஸ்பேட் கலந்த உப்பினால்
ஓட்டையாகிப் போயிருக்கும். அதிக பாஸ்பேட் கலக்காத சலவை உப்பு, துணி
துவைப்பவரின் கைகளில் அரிப்பை ஏற்படுத்தாது. இதனால் பாஸ்பேட் கலக்காத சலவை
உப்பை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள் என்று நம்பினார்
கர்சன்பாய். தவிர, இந்த சலவை உப்பை பயன்படுத்தினால் உடல் சோர்வடைகிற
மாதிரி அடித்து துவைக்கத் தேவையில்லை.
இதையெல்லாம் சொல்லி குஜராத்தின் வீதிகளில் மாலை
நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பிரசாரம் செய்தார். தன் சலவை உப்பை
பயன்படுத்தி அவரே தெருக்களில் துணிகளைத் துவைத்துக் காட்டினார். பல
வீடுகளின் கதவைத் தட்டி, குடும்பத் தலைவி களிடம் தன்னுடைய தயாரிப்பின்
பெருமையை எடுத்துச் சொன்னார். ஆனால், அவரது சுற்றமும் நட்பும், அரசு
வேலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த கஷ்டம் எல்லாம் தேவையா? என்று தலையில்
அடித்துக்கொண்டது. அதை பார்த்து கர்சன்பாய் படேல் கொஞ்சம்கூட அசரவில்லை.
குஜராத்தின் ஒவ்வொரு ஊரிலும் இந்த சலவை உப்பு
1970-களில் மெல்ல மெல்ல பிரபலம் அடைய ஆரம்பித்தது. அப்போது இதற்கென தனியாக
எந்த பெயரும் அவர் வைக்கவில்லை. ஆனால், பிரபலமான ஒரு கம்பெனியின் பெயர்போன
தயாரிப்பைவிட இவர் தந்த சலவைத் தூள் மூன்று மடங்கு விலை குறைவாக
இருந்ததால், அவரால் வேகமாக விற்க முடிந்தது. பிராண்ட் பெயர் எதுவும்
இல்லாமலே மக்கள் மனதிலும் இடம் பிடிக்க முடிந்தது.
தொழில் வேகமெடுத்தவுடன் அவர் தனது அரசு வேலையை
விட்டார். அப்போது அவருக்கு 35 வயதுதான். 1980-ல் தனது மகள் நிருபமா
பெயரால், நிர்மா என்ற கம்பெனியைத் தொடங்கினார். தன் சலவை தூளுக்கும்
நிர்மா என்கிற பிராண்ட் பெயர் வைத்தார். தனது வியாபார எல்லையை
குஜராத்துக்கு வெளியிலும் விரிவாக்கினார். 'வாஷிங் பவுடர் நிர்மா! வாஷிங்
பவுடர் நிர்மா!'' என்கிற விளம்பரப் பாடல் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும்
ஒலிக்க ஆரம்பித்தது. நிர்மாவின் வியாபாரமும் சூடுபிடித்தது. அரசு ஊழியராக
வாழ்க்கை முழுவதும் இருந்திருக்கவேண்டிய கர்சன்பாய் படேல், இன்று மிகப்
பெரிய ஒரு வியாபார சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக மாறியிருக் கிறார். அவரது
நிறுவனத்தின் ஆண்டு டேர்னோவர் சுமார் 3,500 கோடி ரூபாய்!
'சார், கர்சன்பாய் படேல் ஒரு குஜராத்தி. தொழில்
செய்வது அவரது ரத்தத்தில் இருக்கலாம். தமிழகத்தில் சாதாரண குடும்பத்தில்
பிறந்து வளர்ந்த எனக்கு தொழில் செய்வது சரிப்பட்டு வருமா?'' என்று நீங்கள்
கேட்கலாம்.
குஜராத்தில் ஊஞ்சா என்ற ஒரு ஊர் இருக்கிறது. இங்கு
திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் பேசுகிறவர்கள்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பே
அங்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். குஜராத்திகள் தங்களைவிட
தொழில் திறமை கொண்டவர்களாக மதிப்பதும் தொழில் உறவுகொள்ள நினைப்பதும்
தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம்தான்.
இனி ஒவ்வொரு வாரமும் இரண்டு ஆத்திசூடிகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்!
Subscribe to:
Posts (Atom)