சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம்
தொழில் |
சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம் |
A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
தொழில் |
சூடான சிப்ஸ்... சுப்பர் வருமானம் |
15 கிலோ சிப்ஸ் தயாரிக்க பட்ஜெட்
(தயாரிப்புச் செலவு, பொருட்களின் விலையேற்றத்துக்கேற்ப லாபம் மாறுபடும்)
தயாரிப்புச் செலவு
உருளைக் கிழங்கு 30கிலோ = 260
நேந்திரம் பழம் 15கிலோ = 270 தே.எண்ணெய் 3கிலோ = 190 சூ.காந்தி எண்ணெய் 7கிலோ = 360 |
நிர்வாகச் செலவுகள்
மாஸ்டர் சம்பளம் (நாள்) = 175
உதவியாளர் (நாள்) = 75 கடை வாடகை உள்ளிட்ட செலவு = 100 எரிபொருள், மசாலா செலவுகள் = 100 மொத்தம் = 1,520 |
விற்பனை:
உ.கிழங்கு சிப்ஸ் 10கி = 1,300
நேந்திர சிப்ஸ் 5.5கி = 660 ஒருநாள் வருமானம் ரூபாய் = 1,960 செலவு ரூ = 1,530 வரவு ரூ = 430 |
தொழில் |
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே..! |
தொழில் |
தொழில் ஐடியா... அட்வைஸர்கள் பராக்... பராக்! |
தொழில் |
சில்லுன்னு ஒரு லாபம்!
‘‘சுத்தமான தண்ணீரில் சுகாதாரக்கேடு தராத சுவை கலவைகளைக் கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்பனைசெய்வது நல்ல லாபம் தரக்கூடிய தொழில்! குளிர்பானங்களைப் பாக்கெட் செய்யும் மெஷினை வாங்கினால், அதன்மூலம் விதவிதமான சுவைகளில் குளிர்பானங்களைத் தயாரித்துக் கடைகளில் விற்று வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையைச் சேர்ந்த செல்வம். அவருடைய தயாரிப்பு இடம் மிகச்சிறிதாக இருக்கிறது. சுமார் 75,000 ரூபாய் விலை உள்ள இதுபோன்ற ஆட்டோமேடிக் பேக்கிங் மெஷின்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 2,500 பாக்கெட்கள் வரை தரக் கூடியவை.
‘‘உள்ளூர் குளிர்பானங்கள் தயாரிக்க உதவும் இந்தக் கலவைக்கான பவுடர் பெரும்பாலான மளிகைக் கடைகளில் கிடைக்கிறது. அதை மொத்த விலையில் வாங்கி, சரியான விகிதத் தில் கலந்து, பாக்கெட் செய்யவேண்டும். அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப, தேவையை மனதில்கொண்டு நாம் உற்பத்தி செய்யவேண்டும். கோடைக்காலத்தில் அதிகமான தேவை இருக்கும். அந்தச் சமயத்தில் முழுவீச்சில் வேலைசெய்து அதிக பாக்கெட்களைத் தயாரிக்கலாம். ஆரஞ்சு, சாக்லெட் மில்க், மோர், பாதாம், ரோஸ் மில்க் என்று எல்லா சுவை களிலும் பானங்களைத் தயாரிக்கலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கொஞ்சம் கவனமாக ஆர்டருக்கு ஏற்ப தயாரிப்பில் ஈடுபடவேண்டும். சுமாராக ஒருநாளைக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கக்கூடிய தொழில் இது’’ என்றார் செல்வம்.
மக்கள் நேரடியாக உட்கொள்ளும் உணவுப் பொருள் இது என்பதால், சுகாதார விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இது நாம் சாப்பிடும் பொருள். நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பானம் என்பது போன்ற அக்கறையுடன் செயல்படவேண்டும். இதைக் கடைப்பிடித்தால் தரம், சுவைக்காக தேடி வாங்கிச் செல்வார்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.
தயாரிப்புக்குத் தரும் அளவு முக்கியத்துவத்தை விற்பனை செய்வதிலும் காட்டவேண்டும். இரு சக்கர வாகனம் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்யத் தயாராக இருக்கவேண்டும். தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கடைக்காரர்களே தேடிவந்து, வாங்கிச் செல்வார்கள் என்பது இதில் சாதகமான விஷயம். கூடிய வரை கடன் கொடுக்காமல் ரொக்கத்துக்கே வியாபாரம் செய்தால்தான் முதலீட்டு சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.
இது குடிசைத் தொழில் வகையில் வருவதால், வங்கிக் கடன்களையும் எதிர்பார்க்க லாம்.
எல்லா ஊர்களிலுமே குளிர்பானங்களுக்கு தேவை இருக்கத்தான் செய்கிறது... வாய்ப்புள்ளவர்கள் தாகம் தீர்க்கத் தயாராகுங்கள். லாபமும் பாருங்கள்!
|
தொழில் |
தொழில் |
ஊழியரும் முதலாளி ஆகலாம்! |
வி டாமுயற்சியில் ராஜகோபாலை அடித்துக் கொள்ள முடியாது. அவர் சந்தித்த ஒரு சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். அவரே சொல்கிறார்.
‘‘பிஸினஸ் ஆரம்பித்த முதல் வருடம். சோவியத் யூனியனில் ஏற்றுமதி கண்காட்சி ஒன்று நடப்பது தெரிந்தது. உலக அளவிலான அந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து சுமார் 5 நிறுவனங்கள்தான் தொடர்ச்சியாகச் சென்றன. பிறரை அனுமதிப்ப தில்லை. நிகழ்ச்சியாளர்கள் சிலரோடு அப்படி ஒரு திரைமறைவு ஒப்பந்தம் போலிருக்கிறது. நான் ஆர்வத்தில் விண்ணப்பித்து எனக்கு அழைப்பு வந்தது. கையில் இருந்த மூலதனத் தொகையை எல்லாம் செலவழித்து அங்கே சென்றேன்.
இறங்கிய என்னை வரவேற்க ஆளில்லை. 250 கிலோ மீட்டர் தள்ளி கிராமம் ஒன்றில் அறை கொடுத்திருந்தார்கள். மொழி புரியவில்லை. விளக்கம் சொல்ல ஆளில்லை. கண்காட்சி அரங்குக் குச் சென்று என் அழைப்பிதழைக் காட்டினால், ‘இப்படி ஒரு நிறுவனத்தை அழைக்கவே இல்லையே’ என்று கைவிரித்துவிட்டார்கள். செய்வதறியாது, திகைத்து நின்றேன். ஓட்டல் அறையைக் காலி செய்யச் சொல்லி நெருக்கடி வேறு. அழைப்பு கொடுத்து, அதை அங்கீகரிக்கமாட்டேன் என்கிறார்களே என்று எனக்குள் கொந்தளிப்பு.
அந்நிய நாட்டில் எனக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்தியத் தூதரகம்தான் என்று முடிவெடுத்து, அங்கு சென்றேன். இந்தியத் தூதர் என்பவர், கவர்னர் அளவுக்கு பெரிய பதவி என்பது அங்கே போனபின் தான் தெரிந்தது. சந்திக்க வேண்டுமென்றால் ஒரு மாதம் முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமாம். அவருடைய உதவியாளரிடம் என் நிலையைச் சொல்லி வாதம் செய்து கொண்டிருந்த போது, தூதர் உணவுக்காக வெளியே வந்தார். இந்திய முகம் பார்த்து, என்னை அருகே அழைத்தார். வேகமாக என் நிலையைச் சொன்னேன். ‘இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு ஆர்டர் பெறாமல் திரும்பினால் என் எதிர்காலம் அவ்வளவுதான்’ என்பதை மளமளவென சொன்னேன். நிதானமாகப் பார்த்தவர், ‘இன்று இரவு விருந்து இருக்கிறது. வா!’ என்றார்.
தூதரக விருந்து மிகப் பிரமாண்டம். அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. நிகழ்ச்சி முடியும் நேரம். தூதரும் கிளம்ப ஆயத்தமாகிவிட்டார். வண்டியில் ஏறப்போனவர், வழி அனுப்ப வந்த ஒரு அதிகாரியிடம், ‘ம்... ஒரு விஷயம். இங்கே துணிகள் கண்காட்சி நடக்கிறதே! அதை நான் பார்க்க விரும்புகிறேன். அங்கிருக்கும் செலிபிரிட்டி ஃபேஷன் என்ற நிறுவன ஸ்டாலுக்கு நான் விசிட் செய்யவேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அதன்பின் நிலைமை உல்டா. என்னை உள்ளேவிட மறுத்தவர்கள், சல்லடை போட்டு என்னைத் தேடியிருக் கிறார்கள். அறைக்குப் போன என்னை இரவோடு இரவாகப் பிடித்து, எக்ஸிபிஷன் ஹாலில் ஸ்டால் போட வைத்தார்கள். ‘ரொம்பப் பெரிய நிறுவனமா உங்களுடை யது... உங்கள் பிஸினஸ் அளவு என்ன... யாரும் அதிகாரி களின் உறவினரா..?’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டார்கள். எனக்கோ அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி!
மறுநாள் தூதர் வந்தார். நேராக, ‘எங்கே அந்த ஸ்டால்..?’ என்று என் இடம் தேடிவந்தார். சில சாம்பிள்களைப் பார்த்தார். கொத்தாக சிலவற்றைப் பறித்து, ‘வாவ்! எவ்வளவு பிரமாதமான துணிகள். நாம் இவற்றுக்கு ஆர்டர் கொடுக்கவேண்டும்’ என்றார். உடனே, ஒப்புதல் கிடைத்தது. கிளம்பும்போது என்னைப் பார்த்துச் சிரித்தார். கண்கள் பணிக்க என் நன்றியைத் தெரிவித்தேன். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். தெய்வம் நேரில் வந்தமாதிரி இருந்தது. ஆனால், அது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு என்பதை மறுப்பதற்கில்லை!’’ என்கிறார் ராஜகோபால்.
|
புத்தகங்களுக்கு நேரம் கொடுங்கள்!
‘நா ன் ரொம்ப பிஸி. புத்தகம் படிக்கவே நேரம் இல்லை’ என்று ஒதுங்காதீர்கள். உலகம் புத்தகங்களில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்கள் கைகளுக்கு வரும் உலகம் அது. நிறையப் படியுங்கள். நீங்கள் தொழிலில் கற்றுக்கொள்ளும் அனுபவம் ஒருவகை என்றால், ஜெயித்த தொழில் அதிபர்களின் வாழ்க்கைப் பயணம், அவர்கள் சந்தித்த சிக்கல், அதிலிருந்து மீண்டது என்பதெல்லாம் புதிய பரிமாணங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும். அதை இழந்துவிடக்கூடாது. புத்தகம் படிப்பதும் உங்கள் தொழிலை வளர்க்க நீங்கள் செலவழிக்கும் நேரம்தான்.
|