Saturday, 16 August 2014

பன்றி வளர்ப்பு முறைகள் - Pandri Valarpu Muraigal

பன்றி வளர்ப்பு முறைகள் - Pandri  Valarpu Muraigal 

Pandri valarpu

பன்றி வளர்ப்பு

White Pig Farming In Tamilnadu

பன்றி வளர்ப்பின் நன்மைகள்
  • பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சி கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரதச்சத்து மிக்க இறைச்சியாக மாற்றுகின்றன
  • பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை
  • பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும்
  • பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது
பன்றி வளர்ப்புத் தொழில் யாருக்கு ஏற்றது?
  • சிறிய மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு
  • விவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களுக்கு ஒரு பகுதி நேரத் தொழிலாக
  • படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு
  • பண்ணை மகளிர்
பன்றி இனங்கள்
நம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்களாவன,
லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர்
  • இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு பன்றியினம்
  • வெள்ளை நிறம் அல்லது சில நேரங்களில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்
  • விரைத்த காது மடல்கள், தட்டு போன்ற முகம் மற்றும் சராசரியான நீளமுடைய மூக்கு
  • நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்
  • அதிக குட்டிகளை ஈனும் திறன்
  • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 300-400 கிலோ
  • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 230-320 கிலோ
லேண்ட்ரேஸ்
  • வெள்ளையான உடலில் கருப்பு நிறப்புள்ளிகள்
  • நீண்ட உடல் மற்றும் தொங்கிய காதுகள்
  • அதிக குட்டிகள் ஈனும் திறன்
  • இறைச்சி லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் இனத்தின் இறைச்சி போன்றே இருக்கும்
  • நாட்டுப்பன்றிகளுடன் கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்
  • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 270-360 கிலோ
  • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 200-320 கிலோ
                             மிடில் வொய்ட் யார்க்ஷயர்

  • இந்தியாவின் சில பாகங்களில் நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது
  • மிக வேகமாக வளரும் திறன்
  • இதன் குட்டி ஈனும் திறன் லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் விட குறைவு
  • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 250-340 கிலோ
  • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 180-270 கிலோ

வட கிழக்கு இந்திய இனங்கள்

பன்றி வளர்ப்பு வட கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான அங்கமாகும். இந்தியாவின் மொத்த பன்றி தொகையில், 28% இந்த பகுதியில் வளர்க்கப்படுகின்றன. பின்வருவன அனைத்தும் பொதுவாக வளர்க்கப்படும் இனங்களாகும். நல்ல தரமான இனங்கள், NEH பகுதிக்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சி வளாகத்தில் உள்ளன.

குங்காரு பன்றி

குங்காரு பன்றியினம் வட வங்காள மாநில மக்களால் அதன் அதிக குட்டி போடும் திறன் மற்றும் குறைந்த இடுபொருள் தேவை போன்றவற்றால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பன்றியினம் சமையலறை கழிவுகள் மற்றும் வேளாண் உப பொருட்கள் போன்றவற்றை உட்கொண்டு தரம் வாய்ந்த பன்றியிறைச்சியினை உற்பத்தி செய்கிறது. குங்காரு இனப்பன்றி பொதுவாக கருப்பு நிறத்துடன், 6-12 குட்டிகளை ஈனும் திறனுடையது. ஒவ்வொரு குட்டியும் பிறந்த பொழுது 1 கிலோ எடையுடனும், தாயிடமிருந்து பிரிக்கும்பொழுது 7-10 கிலோ எடை இருக்கும். ஆண் மற்றும் பெண் குட்டிகளும் அமைதியாகவும் எளிதில் கையாளுவதற்கு ஏற்றதாகவே இருக்கின்றன. மேய்ச்சல் முறையில் குங்காரு இனப்பன்றிகள் இனவிருத்தி செய்யப்படுவதால் மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு காப்பீடாக திகழ்கின்றன.
கவுகாத்தியிலிருக்கும் பன்றிகளுக்கான தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் குங்காரு இனப்பன்றிகள் தீவிர முறையில் வளர்ப்பில் தரமான இனவிருத்தி, தீவனம் மற்றும் பராமரிப்பு முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மரபு சார்ந்த உற்பத்தித்திறனை எதிர்கால இனவிருத்திக்கு பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த உள்நாட்டு பன்றியினத்தின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத்திறன் நன்றாகவே இருக்கிறது. கெளகாத்தியில் உள்ள பன்றியின ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வினத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பன்றிகள் 17 குட்டிகள் ஈன்று மற்ற நாட்டு இன பெண் பன்றிகளை விட அதிக உற்பத்தித்திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.

பன்றிகளின் இனப்பெருக்க மேலாண்மை

பெண் பன்றிகளின் இனப்பெருக்க வயது
8 மாதங்கள்
இனப்பெருக்கத்தின் போது பெண் பன்றிகளின் உடல் எடை
100-120 கிலோ
சினைப்பருவம்
2-3 நாட்கள்
சினைப்பருவத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்கான தகுந்த பருவம்
கிடேரி பன்றிகள் - முதல் நாள்
ஏற்கெனவே குட்டி போட்ட பன்றிகள்- இரண்டாம் நாள்
ஆண் பன்றியுடன் பெண் பன்றியினை சேர்த்தல்
12-14 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை
சினைப்பருவ இடைவெளி
18-24 நாட்கள் (சராசரியாக 21 நாட்கள்)
குட்டிகளைப் பிரித்த பின்பு தாய் பன்றி சினைப்பருவத்திற்கு வரும் நாள்
2-10 நாட்கள்
சினைக்காலம்
114 நாட்கள்
இனவிருத்திக்காக பன்றிகளை தேர்வு செய்தல்
பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
  • குட்டி ஈனும் திறன்
  • குட்டிகளின் உடல் பலம் மற்றும் வலிமை
  • பால் கொடுக்கும் திறன்
  • சினைப்பிடிக்கும் திறன்
  1. ஒரு குறிப்பிட்ட பன்றி இனத்தினை தேர்வு செய்வதை விட ஒரு பன்றி பண்ணையிலிருந்து ஒரு நல்ல பன்றியினை தேர்வு செய்வதே மிக முக்கியமாகும். பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது நோயில்லாத பன்றிப்பண்ணையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு முறை பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்த பின்பு மீண்டும் இரண்டாம் முறையாக தேர்வு செய்வதற்கு பன்றிகளின் உற்பத்தி திறனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனப்பெருக்கத்திற்கு பெண் பன்றிகளைத் தேர்ந்தெடுத்தல்:

  • பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யும் போது அவற்றின் உடல் எடை 90 கிலோ இருக்க வேண்டும்
  • தெரிவு செய்யும் பெண் கிடேரி பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
  • தேர்வு செய்யப்படும் பெண் பன்றிகள் குறைந்த காலத்தில் சந்தையில் விற்பதற்கு ஏதுவாக வளர்ச்சி அடைய வேண்டும்
  • நல்ல உடல் வளர்ச்சி மற்றும் தீவன மாற்றும் திறனுடைய குட்டிகளுடன் பிறந்த பெண் பன்றி குட்டிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்ய வேண்டும்

    இனப்பெருக்கத்திற்காக ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் முறைகள்

    • பன்றி பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு ஆண் பன்றிகள் தேர்வு செய்வது முக்கியமாக சிறிய பன்றிப்பண்ணையில் மிக முக்கியமாகும்
    • ஆண் பன்றிகளை, பன்றிப்பண்ணையின் உற்பத்திதிறனை பற்றிய பதிவேடுகளுடன் குறித்து வைத்திருக்கும் பண்ணையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
    • ஆண் பன்றிகளை அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
    • ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் போது அவற்றின் வயது 5-6 மாதமாகவும் அவற்றின் உடல் எடை 90 கிலோவாகவும் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்களும் குளம்புகளும் மிக உறுதியாக இருக்க வேண்டும்
    • பன்றி குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் போது இருக்கும் உடல் எடையிலிருந்து அவை 90 கிலோ உடல் எடையினை அடைவதற்குமான தீவன மாற்றும் திறன் அதிகமாக இருக்க வேண்டும்

    பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஆண் மற்றும் பெண் பன்றிகளை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
    • இனப்பெருக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் பன்றிக்குட்டிகளின் தாய் குறைந்தது 8 குட்டிகளையாவது ஒவ்வொரு ஈற்றிலும் ஈன்றிருக்க வேண்டும்
    • இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பன்றிகள் 6 மாத வயதில் 90 கிலோ எடை அடைந்திருக்க வேண்டும்
    • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யப்படும் பன்றிகளின் உடல் நீண்டும் அவற்றினுடைய தசைகள் திரண்டு இருக்க வேண்டும்
    • பன்றிகளின் கால்களும் குளம்புகளும் நன்றாக இருக்க வேண்டும்
    • பன்றிகளில் முதுகுபுறத்திலுள்ள கொழுப்பு படலத்தின் அளவு ஆண் பன்றிகளுக்கு 3.2 செ.மீ ஆகவும் பெண் பன்றிகளுக்கு 4 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும்
    • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் பெண் பன்றிகளுக்கு 12 மடி காம்புகள் சரியான இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும் மடி காம்புகள் சிறுத்திருந்தால் அப்பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யக்கூடாது.
    • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் போது பன்றிகள் லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் புருசெல்லோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனவா இரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்
    • பன்றிகள் மற்ற நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்
    பன்றிகளின் இனப்பெருக்க வயது
    கிடேரி பன்றிகள் 12-14 மாத வயதில் முதல் முறை குட்டிகளை ஈனுமாறு அதனை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கையின் போது கிடேரி பன்றிகளின் எடை 90-100 கிலோ இருக்க வேண்டும். பெண் பன்றிகள் முதல் சினைப்பருவத்திற்கு பின் வரும் சினைப்பருவ காலங்களில் (முதல் 5ம் சினைப்பருவ காலம்) வெளிவரும் சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் அதிக குட்டிகள் போட ஏதுவாகும். எனவே கிடேரி பன்றிகளை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்வதை முதல் இரண்டு முதல் 3 சினைப்பருவ காலங்களில் தவிர்ப்பது நல்லது. பெண் பன்றிகளின் போடும் குட்டிகளின் எண்ணிக்கை 5 முதல் 6ம் ஈற்று வரை படிப்படியாக அதிகரிக்கும். அதன் பின்பு வரும் ஈற்றுகளில் போடும் குட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே பன்றிப்பண்ணையில் 5 அல்லது ஆறாம் ஈற்றிற்கு பின்பு பெண் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.
    சினைப்பருவத்தை கண்டறிதல்
    பன்றிகளில் ஒரு சினைப்பருவத்திற்கும் மற்றொரு சினைப் பருவத்திற்கும் இடைவெளி சராசரியாக 21 நாட்களாகும். சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகளின் பெண் உறுப்பு சிவந்து காணப்படும். மேலும் இச்சினைப்பருவ அறிகுறிகள் 5-7 நாட்கள் வரை நீடிக்கும். சரியான சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். அவற்றின் தீவனம் எடுக்கும் அளவு குறையும். மற்ற பன்றிகளின் மீது ஏறும். மேலும் அவற்றின் காதுகள் விரைத்து நிற்கும். சினைப்பருவ காலத்திலுள்ள பன்றிகளின் முதுகை அமுத்தும் போது அவை ஆடாமல் நிற்கும். இவ்வாறு நின்றால் பன்றிகள் சரியான சினைப்பருவத்தில் இருக்கிறது என்று பொருள். சரியாக சினைப்பருவத்தினை வெளிப்படுத்தாத பன்றிகளை ஆண் பன்றிகளின் அருகில் ஓட்டி சென்றால் அவை தெளிவாக சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்த ஏதுவாகும்.
    பெண் பன்றிகள் இரண்டாம் நாள் சினைப்பருவத்தில் ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய சரியான தருணமாகும். பல சமயங்களில் கிடேரி பன்றிகளும், ஏற்கெனவே குட்டி போட்ட பெண் பன்றிகளும் சினைப்பருவத்தின் மூன்றாம் நாளிலும் சினை அறிகுறிகளை வெளிப்படுத்தும். இப்பன்றிகளை ஆண் பன்றிகளுடன் முதல் இனச்சேர்க்கை செய்து 12-14 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் இரண்டாம் முறை இனச்சேர்க்கை செய்யாலாம். இவ்வாறு செய்தால் பெண் பன்றிகளில் சினைப்பிடித்தல் அதிகமாகும்.
    குட்டி போட்ட பின்பு பெண் பன்றிகள் ஒன்று முதல் நான்கு நாட்களுக்குள் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். ஆனால் இத்தருணத்தில் இனச்சேர்க்கை செய்யக்கூடாது. ஆனால் சில நேரங்களில் குட்டி போட்ட பெண் பன்றிகள் குட்டி போட்ட 2-10 நாட்களில் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். இந்நேரத்தில் பெண் பன்றிகளை இனச்சேர்க்கை செய்யலாம். அதாவது பெண் பன்றிகள் பாலூட்டும் கால கட்டத்தில் இரண்டாம் முறையாக வெளிப்படுத்தும் சினைப்பருவத்தினை அவற்றை இனச்சேர்க்கை செய்யலாம். இனச்சேர்க்கை செய்த பன்றிகள் 18-24 நாட்களுக்கு பின்பு மீண்டும் சினைப்பருவத்தினை வெளிப்படுத்துகின்றனவா என கவனிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு சினைப்பருவத்தில் இனச்சேர்க்கை செய்த பின்னும் பெண் பன்றிகள் சினையாகவில்லை என்றால் அவற்றை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.
    சினைப்பருவ பெண் பன்றிகளுக்கான தீவன பராமரிப்பு
    பெண் பன்றிகளை இனச்சேர்க்கைக்கு முன்பு நன்றாக தீவனமளிக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு வளர் இளம் பன்றிகளுக்கான தீவனத்தினை அளிப்பதன் மூலம் அவற்றின் சினைப்பையிலிருந்து வெளிவரும் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இனச்சேர்க்கைக்கு பின்பு பெண் பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை தேவைப்படும் அளவினை விட குறைவான அளவே அளிக்க வேண்டும். ஆனால் குட்டி போடுவதற்கு ஆறு வாரத்திற்கு முன்பு முழுமையான அளவு தீவனத்தினை அளிக்க வேண்டும்.
    சினைப்பன்றிகளை பராமரித்தல்
    பன்றிகளின் சினைக்காலம் 109-120 நாட்கள். சராசரியாக அவற்றின் சினைக்காலம் 114 நாட்களாகும். சினைப்பன்றிகளை தனியாக மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் பராமரிக்க வேண்டும். மேலும் அவற்றினை புதிதாக வாங்கிய பன்றிகளுடன் சேர்த்து வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் பன்றிகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு சினை கலைந்து விட வாய்ப்புண்டு. ஒவ்வொரு சினைப்பன்றிக்கும் 3 ச.மீ இட வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு நாளும் சினைப்பன்றிகளை மேய்ச்சல் தரையிலோ அல்லது திறந்த வெளியிலோ சற்று நேரம் திறந்து விடுவது நல்லது. மேய்ச்சல் தரை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
    குட்டி போடும்முன் கவனிக்கவேண்டியவை
    பன்றி வளர்ப்பில் மிக முக்கியமான தருணம் குட்டி போடும் தருணமாகும். பன்றிகளின் இறப்பு விகிதம் குட்டி போடும் தருவாயிலும், குட்டி போட்ட பின்பு முதல் வாரத்திலும் அதிகமாக இருக்கும். பன்றிகளுக்கான குட்டி போடும் கொட்டகையில் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளைக்கொண்டு தடுப்பு அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் குட்டிகளுக்கு தனியாக இடம் அமைத்திருக்க வேண்டும். குட்டிகள் 3-4 நாட்கள் வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 24 டிகிரி சி-28 டிகிரி சி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அவை ஆறு வார வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 18சசி-22சசி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குட்டிகளுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சூடு உண்டாக்கும் பல்புகள் தரையிலிருந்து 45 செ.மீ உயரத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பன்றிகளை குட்டி போடும் கொட்டகையினுள் விடுவதற்கு முன்பு அக்கொட்டகை நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குட்டிகளுக்கு ஏற்படும் பல வித நோய்கள் தடுக்கப்படும். குட்டி போடும் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சினைப்பன்றிகளை குட்டி போடும் கொட்டகைக்கு மாற்ற வேண்டும். குட்டி போடும் கொட்டகைக்கு மாற்றுவதற்கு முன் சினைப்பன்றிகளை நன்றாக கழுவ வேண்டும். இந்த சமயத்தில் அவற்றிற்கு அளிக்கப்படும் அடர் தீவனத்தில் மூன்றில் ஒரு பங்கு கோதுமைத்தவிடு இருக்க வேண்டும். குட்டி போடுவதற்கு ஒரு வாரத்தில் ஆரம்பித்து பன்றிகள் குட்டி போடும் வரை அவற்றிற்கு அளிக்கப்படும் தீவன அளவினை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். குட்டி போடும் நாள் நெருங்கியவுடன் பன்றிகளை நன்றாக கூர்மையாக கவனிக்க வேண்டும். தோராயமாக குட்டி போடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அவற்றிற்கு தீவனம் எதுவும் கொடுக்கக்கூடாது.
    குட்டி போடும் போது கவனிக்கவேண்டியவை
    பன்றிகள் குட்டி போடும் போது கண்டிப்பாக பண்ணையாள் ஒருவர் உடன் இருக்க வேண்டும். முழுமையாக பன்றிகள் குட்டி போடுவதற்கு 2-4 மணி நேரங்கள் பிடிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக குட்டி போடும் போது குட்டிகளை எடுத்து அவற்றுக்கென உள்ள இடத்தில் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பன்றிக்குட்டிகளின் மூக்கு மற்றும் வாயிலுள்ள கோழை போன்ற திரவத்தினை சுத்தம் செய்ய வேண்டும். குட்டிகளின் தொப்புள் கொடியினை அவற்றின் தொப்புளிலிருந்து 2-5 செ.மீ நீளம் விட்டு முடிச்சு போட்டு பின் கிருமி நாசினி கொண்டு துடைக்கப்பட்ட கத்தரிகோலால் கத்தரித்த பின்பு அவ்விடத்தில் அயோடின் கரைசல் தடவ வேண்டும். குட்டி போட்ட பின்பு குட்டிகளை தாய் பன்றியிடம் பாலூட்ட அனுமதிக்கலாம். குட்டி போட்ட இரண்டாம் நாளில் குட்டிகள் தங்களுக்கான பால் காம்பினை தேர்வு செய்து கொள்ளும். ஒரு நாளில் குட்டிகள் 8-10 முறை தாயிடம் பால் குடிக்கும். குட்டி போட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு குட்டிகள் பால் குடிக்கும் போது தாய் பன்றிகள் நசுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    பன்றிக்குட்டிகளின் ஊசிப்பல்லை நீக்குதல்
    பன்றிக்குட்டிகள் பிறக்கும் போது அவைகளுக்கு கூர்மையான இரண்டு ஜோடி பற்கள் மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் இருக்கும். ஆனால் இவைகளால் எந்த பயனும் இல்லை. ஆனால் பன்றிக்குட்டிகள் தாய் பன்றியிடம் பால் குடிக்கும் போது இப்பற்களால் தாய் பன்றியின் பால் மடியில் புண்கள் ஏற்படும். இதனை தவிர்க்க இப்பற்களை குட்டிகள் பிறந்தவுடன் நறுக்கி விட வேண்டும்.
    பன்றிக்குட்டிகளில் ஏற்படும் இரத்தசோகை
    பன்றிக்குட்டிகளில் ஏற்படும் பொதுவான நோய் இரத்தசோகையாகும். இரத்த சோகையினைத் தவிர்க்க பன்றிக்குட்டிகளுக்கு இரும்பு சத்துள்ள மருந்துகளை வாய் வழியாகவோ அல்லது இரும்பு சத்து மருந்தினை ஊசியாகவோ அளிக்கலாம். தாய் பன்றியின் மடியில் இரும்பு சல்பேட் கரைசலை (0.5 கிலோ இரும்பு சல்பேட்+10 லிட்டர் தண்ணீர்) குட்டி போட்ட நாளிலிருந்து பன்றிக்குட்டிகள் அடர் தீவனம் எடுக்கத் தொடங்கும் காலம் வரை தடவுவதன் மூலம் பன்றிக்குட்டிகள் பாலூட்டும் போது இரும்பு சத்தை எளிதில் பெற முடியும். இல்லாவிடில் இரும்ப-டெக்ஸ்ட்ரான் ஊசியினை சதை வழியாக போட வேண்டும்.
    தாய் பராமரிப்பில்லா பன்றிக்குட்டிகளை வளர்க்கும் முறை
    குட்டி போட்டவுடன் தாய் பன்றிகள் இறந்து விடுதல், மடி நோய், பால் சுரப்பின்மை போன்ற காரணங்களால் பன்றிக்குட்டிகளை தாய் பன்றி பராமரிக்க இயலாது. இந்த நேரத்தில் இக்குட்டிகளை அதே நாளில் அல்லது ஒருநாள் அல்லது இரண்டு நாள் முன் பின் குட்டிகளை ஈன்ற தாய் பன்றியிடம் வளருமாறு செய்யலாம். செவிலித்தாய் பன்றி குட்டி போட்ட சில நாட்களிலிலேயே அதனுடன் தாயின் பராமரிப்பில்லாமல் இருக்கும் குட்டிகளை அதனுடன் சேர்த்து விட வேண்டும். ஏனெனில் தாய் பன்றியின் மடியிலுள்ள குட்டிகள் பாலூட்டாத காம்புகளில் பால் சுரப்பது சில நாட்களில் நின்று விடும்.
    தாய் பன்றியில்லாத குட்டிகளுக்கு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் ஒரு லிட்டர் பசும் பாலை கலந்து கொடுக்கலாம். இவ்வாறு முட்டையின் மஞ்சள் கரு கலக்கப்பட்ட பால் இரும்புச்சத்தினை தவிர அனைத்து சத்துக்களையும் பன்றிக்குட்டிகளுக்கு அளிக்கும். இரும்புச்சத்துக்காக 1/8 டீஸ்ஸ்பூன் அளவு இரும்பு சல்பேட்டினை இப்பாலுடன் கலந்து அளிக்க வேண்டும் அல்லது இரும்பு சத்து ஊசிகளை பன்றிக்குட்டிகளுக்கு போட வேண்டும்.
    ஆண்மை நீக்கம் செய்தல்
    இனப்பெருக்கத்திற்கு பயன்படாத ஆண் பன்றிக்குட்டிகளை அவை 3-4 வார வயதாகும் போது ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்
    குட்டிகளை தாயிடமிருந்து பிரித்தல்
    பன்றிக்குட்டிகளை தாயிடமிருந்து 8 வார வயதில் பிரிக்க வேண்டும். குட்டிகளை தாயிடமிருந்து முழுவதுமாக பிரிப்பதற்கு முன்பு தினம் சிறிது நேரம் தாய் பன்றியினை குட்டிகளிடமிருந்து பிரிக்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் தாய் பன்றிக்கு அளிக்கப்படும் தீவனத்தை சிறிது சிறிதாக குறைக்க வேண்டும். பன்றிக்குட்டிகளுக்கு இரண்டு வார வயதில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மேலும் குட்டிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலுள்ள புரதச்சத்தின் அளவினை 18 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாக குறைக்க வேண்டும் இரண்டு வார கால அளவில் குறைக்க வேண்டும். ஒரு பன்றிக்கொட்டகையில் 20 குட்டிகளுக்கு மேல் வளர்க்கக்கூடாது.

    பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு முறைகள்

    பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு- கவனத்தில் கொள்ள வேண்டியவை
    • பன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும்
    • தானிய வகைகள்- மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய வகைகள் தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருட்களாக உபயோகிக்க வேண்டும்
    • புரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள் அல்லது இறைச்சித்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்
    • பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தாலோ அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தாலோ வைட்டமின் சத்துக்களை அளிக்கத் தேவையில்லை.பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 சத்து தீவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்
    • எதிரிஉயிரி மருந்துகள் 1 கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்பட வேண்டும்
    • தாது உப்புகள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்பட வேண்டும்
    பன்றிகளின் வெவ்வேறு வயதுக்கேற்ற தீவனத்தேவை
    சத்துக்கள்
    குட்டிகளைப் பிரிப்பதற்கு முன் அளிக்கப்பட வேண்டிய தீவனம்
    பன்றிக்குட்டிகள் (உடல் எடை 20 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்
    பன்றிக்குட்டிகள் (உடல் எடை 90 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்
    புரதச்சத்து (%)
    பிண்ணாக்குகள்
    16-18

    14-16

    13-14
      விலங்கு புரதம் (மீன் தூள், இறைச்சித்தூள்)
        8-10
        4
        2
        மக்காச் சோளம் அல்லது சோளம் அல்லது உடைந்த கோதுமை அல்லது அரிசி குருணை அல்லது) (%)
        60-65
        50-55
        40-50
        கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு(%)
        5
        10
        20
        லூசர்ன் தூள் (%) (கிடைக்கும் பட்சத்தில்)
        --
        5-8
        --
        தாது உப்புக் கலவை(%)
        0.5
        0.5
        0.5
        எதிர் உயிரி (மிகி)
        40
        20
        10
        வெவ்வேறு பன்றிகளின் வயதுக்கேற்ற அடர்தீவன கலவை
        உட்பொருட்கள்
        குட்டிகளைப் பிரிப்பதற்கு முன் அளிக்கப்பட வேண்டிய தீவனம்
        பன்றிக்குட்டிகள் (உடல் எடை 20 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்
        பன்றிக்குட்டிகள் (உடல் எடை 90 முதல் 40 கிலோ) வரை அளிக்கப்பட வேண்டிய தீவனம்
        சினை மற்றும் பாலூட்டும் பன்றிகள்
        மக்காச் சோளம் அல்லது சோளம் அல்லது உடைந்த கோதுமை அல்லது அரிசி குருணை அல்லது பார்லி வெவ்வேறு அளவுகளில்
        65
        50
        50
        50
        பிண்ணாக்குகள் (கடலைப்பிண்ணாக்கு அல்லது சோயாபிண்ணாக்கு அல்லது எள் பிண்ணாக்கு )
        14
        18
        20
        20
        கரும்பு பாகு
        5
        5
        5
        5
        கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு
        10
        1.5
        25
        18
        கருவாட்டுத்தூள் அல்லது இறைச்சிதூள் அல்லது பால் பவுடர் அல்லது பால் பண்ணை கழிவுகள்
        5
        5
        3
        5
        தாது உப்பு கலவை
        1
        1.5
        1.5
        1.5
        உப்பு
        --
        0.5
        0.5
        0.5
        பன்றிகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேற்கூறியவாறு வயதுக்கேற்ற தீவனக்கலவை தயார் செய்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தால் அவை தீவனத்தினை வீணாக்காமல் சாப்பிடும்.பன்றிகளின் உடல் எடைக்குத் தகுந்த தீவனமிடும் அளவு கீழ்வருமாறு
        பன்றியின் உடல் எடை(கிலோ)
        தினசரி பன்றி உட்கொள்ளும் தீவனத்தின் அளவு (கிலோ)
        25
        2.0
        50
        3.2
        100
        5.3
        150
        6.8
        200
        7.5
        250
        8.3

        பன்றிகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் போது தானியங்களை நன்கு அரைக்க வேண்டும். பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை அளிக்கும் போது அதனை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தில் நார் சத்து அதிகமாக இருக்கும் போது அடர் தீவனத்தினை குச்சி தீவனம் வடிவில் தயாரித்தால் உடல் எடை அதிகரிக்கும். குச்சி தீவனம் வடிவில் அடர் தீவனம் அளிக்கப்படும் போது தீவனம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
        இனப்பெருக்கத்திற்காக உபயோகிக்கும் பெண் பன்றிகளுக்கு அளவுக்கு அதிகமாக தீவனமளிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான எடை உடைய பன்றிகளுக்கு பிறக்கும் குட்டிகள் உடல் எடை குறைவாக இருக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக எடை உடைய பன்றிகள் குட்டி போடும் போது குட்டிகளை நசுக்கி குட்டிகள் இறக்க நேரிடும்.கிடேரி பன்றிகள் சினையானதற்கு பின் குட்டி போடும் வரை அதிகரிக்கும் உடல் எடை 35 கிலோவாகவும் ஏற்கனெவே குட்டி ஈன்ற பன்றிகள் மீண்டும் சினை பிடித்த பின் 55 கிலோவும் உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

        பன்றிகளுக்கான வீடமைப்பு

        பன்றிகளை மாறும் தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கவும், நோய்களைத் தடுக்கவும், ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அவைகளுக்கு முறையான உபகரணங்களுடன் கூடிய வீடமைப்பு அவசியமாகும்.
        பன்றிகளின் வெவ்வேறு வயதிற்கேற்ப தேவைப்படும் இட அளவு, தண்ணீர் ஆகியவை பின்வருமாறு
        பன்றிகளின் வகை
        மூடிய கொட்டகையின் அளவு (மீ2)
        கொட்டகையிலுள்ள திறந்த வெளியின் அளவு (மீ2)
        தேவைப்படும் தண்ணீரின் அளவு (லி)
        ஆண் பன்றி
        6.25-7.5
        8.8-12.0
        45.5
        குட்டி போடும்/போட்ட பன்றி
        7.5-9.0
        8.8-12
        18-22
        தாய் பன்றியிடமிருந்து பிரித்த இளம் பன்றி
        0.96-1.8
        8.8-12
        3.5-4
        குட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட தாய் பன்றி
        1.8-2.7
        1.4-1.8
        4.5-5
        பன்றிக்குட்டிகளுக்கான வீடமைப்பு
        பன்றிக்கொட்டகையினுடைய தரைப்பகுதி சிமெண்ட்டிலானதாக இருக்க வேண்டும். கொட்டகையில் கழிவு நீர் எளிதில் வெளியேறுவதற்காக தரை சிறிது சாய்வாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பன்றிக்கொட்டகைகளின் அளவு 3மீஜ்2.4மீ அல்லது 3மீஜ்3மீ அளவாகவும் அதே அளவில் திறந்த வெளியும் இந்த கொட்டகையுடன் சேர்ந்து அமைக்கப்பட வேண்டும். பன்றிக்கொட்டகையின் சுவர்கள் தரையிலிருந்து 1.2-1.5 மீ என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கூறிய வடிவில் அமைத்த கொட்டகையை சுவரிலிருந்து 20-25 தொலைவில் மேலும் தரையிலிருந்து 20-25 செ.மீ உயரத்திற்கு 5 செ.மீ தடிமனாலான துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை கொண்டு சிறிய பாகமாக தடுத்து அதனை குட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பன்றிக் கொட்டகையின் ஒரு மூலையில் 0.75 மீஙீ2.4மீ என்ற அளவில் தடுத்து அதற்கு தனி வழி ஏற்படுத்தி குட்டிகளுக்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்..
        வெப்பநிலை அதிகமாக உள்ள நம் நாட்டில் வெளிநாட்டின பன்றிகளின் வெப்பம் தாங்காது அவற்றின் உற்பத்தி குறைவு ஏற்படும். எனவே பன்றிக்கொட்டகைகளை சுற்றி நிழலாக இருந்தால் அதிக வெப்பத்தினால் பன்றிக்குட்டிகளில் ஏற்படும் இறப்பினையும் உற்பத்திக்குறைவினையும் தடுக்கலாம். ஆனால் பன்றிக்கொட்டகையினை சுற்றி நிரந்தரமாக மரங்களை வளர்த்தால் வெய்யிலினால் குடற்புழுக்கள் அழிப்பது தவிர்க்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
        குட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகை

        பன்றிகளுக்கான தண்ணீர்த்தொட்டி
        பன்றிகளின் உடலில் மிக குறைவான வியர்வை சுரப்பிகள் மட்டுமே உள்ளன. வெப்பம் அதிகம் உள்ள நம் நாட்டு சூழ்நிலையில் அவற்றின் உடலிலுள்ள அதிக வெப்பத்தினை வெளியேற்ற அவை தண்ணீரில் படுத்துக்கொள்ளும். எனவே இதற்காக சிறிய ஆழம் குறைந்த சிமெண்டிலான தொட்டிகள் கட்ட வேண்டும். தொட்டியின் அளவு பண்ணையில் வளர்க்கும் பன்றிகளின் எண்ணிக்கையினைப் பொறுத்தது..

        பன்றிகளுக்கு ஏற்படும் நோயினை தடுத்தல்

        • எல்லா பன்றிகளுக்கும் 2-4 வார வயதில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட வேண்டும். மேலும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பன்றிகளை கன்று வீச்சு நோய் மற்றும் லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பரிசோதனை செய்து நோயிருக்கும் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். அனைத்து பன்றிக்குட்டிகளையும் தாயிடமிருந்து பிரிக்கும் போது பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும்.
        • பண்ணைக்கு வளர்ப்பதற்காக பன்றிகளை வாங்கும் போது அவற்றை நோயில்லாத பன்றி பண்ணையிலிருந்து வாங்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பன்றிகளை பண்ணையிலுள்ள மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் நான்கு வாரங்களுக்கு தனியாக பராமரிக்க வேண்டும். பன்றிப்பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளை பன்றிக்கொட்டகையிலிருந்து அப்புறப்படுத்திய பின்பு அக்கொட்டகையில் பன்றிகளை 3-4 வாரங்களுக்கு அடைக்கக்கூடாது.

        • நிலமற்ற விவசாயிகளுக்கு
        • விவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களுக்கு ஒரு பகுதி நேரத் தொழிலாக
        • படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு
        • பண்ணை மகளிர்

        பன்றி இனங்கள்
        நம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்களாவன,
        லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர்
        • இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு பன்றியினம்
        • வெள்ளை நிறம் அல்லது சில நேரங்களில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்
        • விரைத்த காது மடல்கள், தட்டு போன்ற முகம் மற்றும் சராசரியான நீளமுடைய மூக்கு
        • நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்
        • அதிக குட்டிகளை ஈனும் திறன்
        • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 300-400 கிலோ
        • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 230-320 கிலோ

        லேண்ட்ரேஸ்
        • வெள்ளையான உடலில் கருப்பு நிறப்புள்ளிகள்
        • நீண்ட உடல் மற்றும் தொங்கிய காதுகள்
        • அதிக குட்டிகள் ஈனும் திறன்
        • தீவனத்தினை சரியாக உபயோகிக்கும் திறன்
        • இறைச்சி லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் இனத்தின் இறைச்சி போன்றே இருக்கும்
        • நாட்டுப்பன்றிகளுடன் கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்
        • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 270-360 கிலோ
        • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 200-320 கிலோ

        மிடில் வொய்ட் யார்க்ஷயர்
        • இந்தியாவின் சில பாகங்களில் நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது
        • மிக வேகமாக வளரும் திறன்
        • அதிக அளவு இறைச்சி ஈனும் திறன்
        • இதன் குட்டி ஈனும் திறன் லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் விட குறைவு
        • வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 250-340 கிலோ
        • வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 180-270 கிலோ

        குங்காரு பன்றியினம்-ஊரக விவசாயிகளுக்கேற்ற நாட்டுப்பன்றியினம்

        இனவிருத்திக்காக பன்றிகளை தேர்வு செய்தல்
        பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
        • குட்டி ஈனும் திறன்
        • குட்டிகளின் உடல் பலம் மற்றும் வலிமை
        • பால் கொடுக்கும் திறன்
        • தீவனத்தினை உடல் எடையாக மாற்றும் திறன்
        • சினைப்பிடிக்கும் திறன்
        ஒரு குறிப்பிட்ட பன்றி இனத்தினை தேர்வு செய்வதை விட ஒரு பன்றி பண்ணையிலிருந்து ஒரு நல்ல பன்றியினை தேர்வு செய்வதே மிக முக்கியமாகும். பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது நோயில்லாத பன்றிப்பண்ணையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு முறை பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்த பின்பு மீண்டும் இரண்டாம் முறையாக தேர்வு செய்வதற்கு பன்றிகளின் உற்பத்தி திறனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
        இனப்பெருக்கத்திற்கு பெண் பன்றிகளைத் தேர்ந்தெடுத்தல்

                     யார்க்ஷயர் இன பெண் பன்றி
        • பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யும் போது அவற்றின் உடல் எடை 90 கிலோ இருக்க வேண்டும்
        • தெரிவு செய்யும் பெண் கிடேரி பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
        • தேர்வு செய்யப்படும் பெண் பன்றிகள் குறைந்த காலத்தில் சந்தையில் விற்பதற்கு ஏதுவாக வளர்ச்சி அடைய வேண்டும்
        • நல்ல உடல் வளர்ச்சி மற்றும் தீவன மாற்றும் திறனுடைய குட்டிகளுடன் பிறந்த பெண் பன்றி குட்டிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்ய வேண்டும்

        இனப்பெருக்கத்திற்காக ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் முறைகள்
        piggery (4).gif
                யார்க்ஷயர் இன ஆண் பன்றி
        • பன்றி பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு ஆண் பன்றிகள் தேர்வு செய்வது முக்கியமாக சிறிய பன்றிப்பண்ணையில் மிக முக்கியமாகும்
        • ஆண் பன்றிகளை, பன்றிப்பண்ணையின் உற்பத்திதிறனை பற்றிய பதிவேடுகளுடன் குறித்து வைத்திருக்கும் பண்ணையிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
        • ஆண் பன்றிகளை அதிக குட்டிகளை ஈனும் தாய் பன்றியிடமிருந்து தேர்வு செய்ய வேண்டும்
        • ஆண் பன்றிகளை தேர்வு செய்யும் போது அவற்றின் வயது 5-6 மாதமாகவும் அவற்றின் உடல் எடை 90 கிலோவாகவும் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்களும் குளம்புகளும் மிக உறுதியாக இருக்க வேண்டும்
        • பன்றி குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் போது இருக்கும் உடல் எடையிலிருந்து அவை 90 கிலோ உடல் எடையினை அடைவதற்குமான தீவன மாற்றும் திறன் அதிகமாக இருக்க வேண்டும்

        பண்ணையில் இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஆண் மற்றும் பெண் பன்றிகளை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
        • இனப்பெருக்கத்திற்கு தெரிவு செய்யப்படும் பன்றிக்குட்டிகளின் தாய் குறைந்தது 8 குட்டிகளையாவது ஒவ்வொரு ஈற்றிலும் ஈன்றிருக்க வேண்டும்
        • இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பன்றிகள் 6 மாத வயதில் 90 கிலோ எடை அடைந்திருக்க வேண்டும்
        • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யப்படும் பன்றிகளின் உடல் நீண்டும் அவற்றினுடைய தசைகள் திரண்டு இருக்க வேண்டும்
        • பன்றிகளின் கால்களும் குளம்புகளும் நன்றாக இருக்க வேண்டும்
        • பன்றிகளில் முதுகுபுறத்திலுள்ள கொழுப்பு படலத்தின் அளவு ஆண் பன்றிகளுக்கு 3.2 செ.மீ ஆகவும் பெண் பன்றிகளுக்கு 4 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும்
        • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் பெண் பன்றிகளுக்கு 12 மடி காம்புகள் சரியான இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும் மடி காம்புகள் சிறுத்திருந்தால் அப்பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யக்கூடாது.
        • இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் போது பன்றிகள் லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் புருசெல்லோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனவா இரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்
        • பன்றிகள் இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்யும் போது அவற்றிற்கு பன்றி காய்ச்சல் நோய் தடுப்பூசி கொடுக்கப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்
        • பன்றிகள் மற்ற நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்

        பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு முறைகள்
        பன்றிகளுக்கான தீவனப்பராமரிப்பு- கவனத்தில் கொள்ள வேண்டியவை
        • பன்றிகளுக்கு தீவனம் தயாரிக்கும் போது குறைந்த விலையில் கிடைக்கும் மூலப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும்
        • தானிய வகைகள்- மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை, அரிசி அல்லது அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் தானிய வகைகள் தீவனம் தயாரிக்கும் போது முக்கிய மூலப்பொருட்களாக உபயோகிக்க வேண்டும்
        • புரதச்சத்துக்காக பிண்ணாக்கு வகைகள், கருவாட்டு தூள் அல்லது இறைச்சித்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்
        • பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தாலோ அல்லது அவைகளுக்கு பசுந்தீவனம் அளித்தாலோ வைட்டமின் சத்துக்களை அளிக்கத் தேவையில்லை.
        • பன்றிகளுக்கு விலங்கு புரதம் அளிக்கப்படாவிட்டால் வைட்டமின் பி 12 சத்து தீவனத்துடன் அளிக்கப்பட வேண்டும்
        • எதிரிஉயிரி மருந்துகள்  1 கிலோ கிராம் தீவனத்திற்கு 11 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து அளிக்கப்பட வேண்டும்
        • தாது உப்புகள் தீவனத்துடன் கலந்து அளிக்கப்பட வேண்டும்
        பன்றிகளின் வெவ்வேறு வயதுக்கேற்ற தீவனத்தேவை
        சத்துக்கள்
        குட்டிகளைப்பிரிப்பதற்கு முன்அளிக்கப்படவேண்டியதீவனம்
        பன்றிக்குட்டிகள்(உடல் எடை 20முதல் 40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்
        பன்றிக்குட்டிகள்(உடல் எடை 90முதல் 40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்
        புரதச்சத்து
        பிண்ணாக்குகள்

        16-18
        14-16
        13-14
        விலங்கு புரதம் (மீன் தூள்,இறைச்சித்தூள்)
        8-10
        4
        2
        மக்காச் சோளம்அல்லது சோளம்அல்லது உடைந்த கோதுமைஅல்லது அரிசிகுருணைஅல்லது) (%)
        60-65
        50-55
        40-50
        கோதுமை தவிடுஅல்லது அரிசி தவிடு (%)
        5
        10
        20
        லூசர்ன் தூள்(%) (கிடைக்கும்பட்சத்தில்)
        --
        5-8
        --
        தாது உப்புக் கலவை(%)
        0.5
        0.5
        0.5
        எதிர் உயிரி(மிகி)
        40
        20
        10
        வெவ்வேறு பன்றிகளின் வயதுக்கேற்ற அடர்தீவன கலவை
        உட்பொருட்கள்குட்டிகளைப்பிரிப்பதற்குமுன்அளிக்கப்படவேண்டியதீவனம்பன்றிக்குட்டிகள்(உடல் எட
         20 முதல்40 கிலோ)வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்
        பன்றிக்குட்டிகள்(உடல் எடை 90முதல் 40கிலோ) வரைஅளிக்கப்படவேண்டியதீவனம்சினைமற்றும்பாலூட்டும்பன்றிகள்
        மக்காச் சோளம்அல்லது சோளம்அல்லது உடைந்த கோதுமை அல்லதுஅரிசி குருணைஅல்லது பார்லி வெவ்வேறுஅளவுகளில்65505050
        பிண்ணாக்குகள்(கடலைப்பிண்ணாக்குஅல்லது சோயாபிண்ணாக்குஅல்லது எள்பிண்ணாக்கு )14182020
        கரும்பு பாகு5555
        கோதுமை தவிடுஅல்லது அரிசி தவிடு10152518
        கருவாட்டுத்தூள்அல்லது இறைச்சிதூள்அல்லது பால் பவுடர்அல்லது பால்பண்ணை கழிவுகள்5535
        தாது உப்பு கலவை11.51.51.5
        உப்பு--0.50.50.5
        பன்றிகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேற்கூறியவாறு வயதுக்கேற்ற தீவனக்கலவை தயார் செய்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தால் அவை தீவனத்தினை வீணாக்காமல் சாப்பிடும். <
        பன்றிகளின் உடல் எடைக்குத் தகுந்த தீவனமிடும் அளவு கீழ்வருமாறு
        பன்றியின் உடல் எடை(கிலோ)
        தினசரி பன்றி உட்கொள்ளும்தீவனத்தின் அளவு (கிலோ)
        25
        2.0
        50
        3.2
        100
        5.3
        150
        6.8
        200
        7.5
        250
        8.3
        பன்றிகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் போது தானியங்களை நன்கு அரைக்க வேண்டும். பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை அளிக்கும் போது அதனை தண்ணீர் ஊற்றி பிசைந்து கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தில் நார் சத்து அதிகமாக இருக்கும் போது அடர் தீவனத்தினை குச்சி தீவனம் வடிவில் தயாரித்தால் உடல் எடை அதிகரிக்கும். குச்சி தீவனம் வடிவில் அடர் தீவனம் அளிக்கப்படும் போது தீவனம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
        இனப்பெருக்கத்திற்காக உபயோகிக்கும் பெண் பன்றிகளுக்கு அளவுக்கு அதிகமாக தீவனமளிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான எடை உடைய பன்றிகளுக்கு பிறக்கும் குட்டிகள் உடல் எடை குறைவாக இருக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக எடை உடைய பன்றிகள் குட்டி போடும் போது குட்டிகளை நசுக்கி குட்டிகள் இறக்க நேரிடும்.
        கிடேரி பன்றிகள் சினையானதற்கு பின் குட்டி போடும் வரை அதிகரிக்கும் உடல் எடை 35 கிலோவாகவும் ஏற்கனெவே குட்டி ஈன்ற பன்றிகள் மீண்டும் சினை பிடித்த பின் 55 கிலோவும் உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

        பன்றிகளுக்கான வீடமைப்பு
        பன்றிகளை மாறும் தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கவும், நோய்களைத் தடுக்கவும், ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அவைகளுக்கு முறையான உபகரணங்களுடன் கூடிய வீடமைப்பு அவசியமாகும்.
        பன்றிகளின் வெவ்வேறு வயதிற்கேற்ப தேவைப்படும் இட அளவு, தண்ணீர் ஆகியவை பின்வருமாறு
        பன்றிகளின் வகை
        மூடியகொட்டகையின்அளவு (மீ2)
        கொட்டகையிலுள்ளதிறந்த வெளியின்அளவு (னீ2 )
        தேவைப்படும்தண்ணீரின்அளவு (லி)
        ஆண் பன்றி
        6.25-7.5
        8.8-12.0
        45.5
        குட்டி போடும்/போட்ட பன்றி
        7.5-9.0
        8.8-12
        18-22
        தாய்பன்றியிடமிருந்துபிரித்த இளம் பன்றி
        0.96-1.8
        8.8-12
        3.5-4
        குட்டிகளிடமிருந்துபிரிக்கப்பட்ட தாய் பன்றி
        1.8-2.7
        1.4-1.8
        4.5-5

        பன்றிக்குட்டிகளுக்கான வீடமைப்பு
        பன்றிக்கொட்டகையினுடைய தரைப்பகுதி சிமெண்ட்டிலானதாக இருக்க வேண்டும். கொட்டகையில் கழிவு நீர் எளிதில் வெளியேறுவதற்காக தரை சிறிது சாய்வாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பன்றிக்கொட்டகைகளின் அளவு 3மீஜ்2.4மீ அல்லது 3மீஜ்3மீ அளவாகவும் அதே அளவில் திறந்த வெளியும் இந்த கொட்டகையுடன் சேர்ந்து அமைக்கப்பட வேண்டும். பன்றிக்கொட்டகையின் சுவர்கள் தரையிலிருந்து 1.2-1.5 மீ என்ற அளவில் அமைக்கப்பட வேண்டும். மேற்கூறிய வடிவில் அமைத்த கொட்டகையை சுவரிலிருந்து 20-25 தொலைவில் மேலும் தரையிலிருந்து 20-25 செ.மீ உயரத்திற்கு 5 செ.மீ தடிமனாலான துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை கொண்டு சிறிய பாகமாக தடுத்து அதனை குட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பன்றிக் கொட்டகையின் ஒரு மூலையில் 0.75 மீஙீ2.4மீ என்ற அளவில் தடுத்து அதற்கு தனி வழி ஏற்படுத்தி குட்டிகளுக்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
              வெப்பநிலை அதிகமாக உள்ள நம் நாட்டில் வெளிநாட்டின பன்றிகளின் வெப்பம் தாங்காது அவற்றின் உற்பத்தி குறைவு ஏற்படும். எனவே பன்றிக்கொட்டகைகளை சுற்றி நிழலாக இருந்தால் அதிக வெப்பத்தினால் பன்றிக்குட்டிகளில் ஏற்படும் இறப்பினையும் உற்பத்திக்குறைவினையும் தடுக்கலாம். ஆனால் பன்றிக்கொட்டகையினை சுற்றி நிரந்தரமாக மரங்களை வளர்த்தால் வெய்யிலினால் குடற்புழுக்கள் அழிப்பது தவிர்க்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

        குட்டி போடும் பன்றிகளுக்கான கொட்டகை
           
        பன்றிகளுக்கான தண்ணீர்த்தொட்டி
        பன்றிகளின் உடலில் மிக குறைவான வியர்வை சுரப்பிகள் மட்டுமே உள்ளன. வெப்பம் அதிகம் உள்ள நம் நாட்டு சூழ்நிலையில் அவற்றின் உடலிலுள்ள அதிக வெப்பத்தினை வெளியேற்ற அவை தண்ணீரில் படுத்துக்கொள்ளும். எனவே இதற்காக சிறிய ஆழம் குறைந்த சிமெண்டிலான தொட்டிகள் கட்ட வேண்டும். தொட்டியின் அளவு பண்ணையில் வளர்க்கும் பன்றிகளின் எண்ணிக்கையினைப் பொறுத்தது.

        பன்றிகளின் இனப்பெருக்க மேலாண்மை
        பெண் பன்றிகளின் இனப்பெருக்கவயது
        8 மாதங்கள்
        இனப்பெருக்கத்தின் போது பெண்பன்றிகளின் உடல் எடை
        100-120 கிலோ
        சினைப்பருவம்
        2-3 நாட்கள்
        சினைப்பருவத்தின் போதுஇனப்பெருக்கம் செய்வதற்கானதகுந்த பருவம்
        கிடேரி பன்றிகள் ௭ முதல் நாள்
        ஏற்கெனவே குட்டி போட்ட பன்றிகள்- இரண்டாம் நாள்
        ஆண் பன்றியுடன் பெண் பன்றியினைசேர்த்தல்
        12-14  மணி நேர இடைவெளியில் இரண்டு முறை
        சினைப்பருவ இடைவெளி
        18-24  நாட்கள் (சராசரியாக 21 நாட்கள்)
        குட்டிகளைப் பிரித்த பின்பு தாய் பன்றிசினைப்பருவத்திற்கு வரும் நாள்
        2-10 நாட்கள்
        சினைக்காலம்
        114 நாட்கள்
        பன்றிகளின் இனப்பெருக்க வயது
        கிடேரி பன்றிகள் 12-14 மாத வயதில் முதல் முறை குட்டிகளை ஈனுமாறு அதனை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கையின் போது கிடேரி பன்றிகளின் எடை 90-100 கிலோ இருக்க வேண்டும். பெண் பன்றிகள் முதல் சினைப்பருவத்திற்கு பின் வரும் சினைப்பருவ காலங்களில் (முதல் 5ம் சினைப்பருவ காலம்) வெளிவரும் சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் அதிக குட்டிகள் போட ஏதுவாகும். எனவே கிடேரி பன்றிகளை ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்வதை முதல் இரண்டு முதல் 3 சினைப்பருவ காலங்களில் தவிர்ப்பது நல்லது. பெண் பன்றிகளின் போடும் குட்டிகளின் எண்ணிக்கை 5 முதல் 6ம் ஈற்று வரை படிப்படியாக அதிகரிக்கும். அதன் பின்பு வரும் ஈற்றுகளில் போடும் குட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே பன்றிப்பண்ணையில் 5 அல்லது ஆறாம் ஈற்றிற்கு பின்பு பெண் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.

        சினைப்பருவத்தை கண்டறிதல்
        பன்றிகளில் ஒரு சினைப்பருவத்திற்கும் மற்றொரு சினைப் பருவத்திற்கும் இடைவெளி சராசரியாக 21 நாட்களாகும். சினைப்பருவ காலத்தில் உள்ள பன்றிகளின் பெண் உறுப்பு சிவந்து காணப்படும். மேலும் இச்சினைப்பருவ அறிகுறிகள் 5-7 நாட்கள் வரை நீடிக்கும். சரியான சினைப்பருவ காலத்தில் உள்ள  பன்றிகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கும். அவற்றின் தீவனம் எடுக்கும் அளவு குறையும். மற்ற பன்றிகளின் மீது ஏறும். மேலும் அவற்றின் காதுகள் விரைத்து நிற்கும். சினைப்பருவ காலத்திலுள்ள பன்றிகளின் முதுகை அமுத்தும் போது அவை ஆடாமல் நிற்கும். இவ்வாறு நின்றால் பன்றிகள் சரியான சினைப்பருவத்தில் இருக்கிறது என்று பொருள். சரியாக சினைப்பருவத்தினை வெளிப்படுத்தாத பன்றிகளை ஆண் பன்றிகளின் அருகில் ஓட்டி சென்றால் அவை தெளிவாக சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்த ஏதுவாகும்.
              பெண் பன்றிகள் இரண்டாம் நாள் சினைப்பருவத்தில் ஆண் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்ய சரியான தருணமாகும். பல சமயங்களில் கிடேரி பன்றிகளும், ஏற்கெனவே குட்டி போட்ட பெண் பன்றிகளும் சினைப்பருவத்தின் மூன்றாம் நாளிலும் சினை அறிகுறிகளை வெளிப்படுத்தும். இப்பன்றிகளை ஆண் பன்றிகளுடன் முதல் இனச்சேர்க்கை செய்து 12-14 மணி நேரத்திற்கு பின்பு மீண்டும் இரண்டாம் முறை இனச்சேர்க்கை செய்யாலாம். இவ்வாறு செய்தால் பெண் பன்றிகளில் சினைப்பிடித்தல் அதிகமாகும்.
              குட்டி போட்ட பின்பு பெண் பன்றிகள் ஒன்று முதல் நான்கு நாட்களுக்குள் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். ஆனால் இத்தருணத்தில் இனச்சேர்க்கை செய்யக்கூடாது. ஆனால் சில நேரங்களில் குட்டி போட்ட பெண் பன்றிகள் குட்டி போட்ட 2-10 நாட்களில் சினைப்பருவத்தினை வெளிப்படுத்தும். இந்நேரத்தில் பெண் பன்றிகளை இனச்சேர்க்கை செய்யலாம். அதாவது பெண் பன்றிகள் பாலூட்டும் கால கட்டத்தில் இரண்டாம் முறையாக வெளிப்படுத்தும் சினைப்பருவத்தினை அவற்றை இனச்சேர்க்கை செய்யலாம். இனச்சேர்க்கை செய்த பன்றிகள் 18-24 நாட்களுக்கு பின்பு மீண்டும் சினைப்பருவத்தினை வெளிப்படுத்துகின்றனவா என கவனிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு சினைப்பருவத்தில் இனச்சேர்க்கை செய்த பின்னும் பெண் பன்றிகள் சினையாகவில்லை என்றால் அவற்றை பண்ணையிலிருந்து நீக்கி விடுவது நல்லது.

        சினைப்பருவ பெண் பன்றிகளுக்கான தீவன பராமரிப்பு
        பெண் பன்றிகளை இனச்சேர்க்கைக்கு முன்பு நன்றாக தீவனமளிக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஏழு முதல் பத்து நாட்களுக்கு முன்பு வளர் இளம் பன்றிகளுக்கான தீவனத்தினை அளிப்பதன் மூலம் அவற்றின் சினைப்பையிலிருந்து வெளிவரும் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இனச்சேர்க்கைக்கு பின்பு பெண் பன்றிகளுக்கு அடர் தீவனத்தினை தேவைப்படும் அளவினை விட குறைவான அளவே அளிக்க வேண்டும். ஆனால் குட்டி போடுவதற்கு ஆறு வாரத்திற்கு முன்பு முழுமையான அளவு தீவனத்தினை அளிக்க வேண்டும்.

        சினைப்பன்றிகளை பராமரித்தல்
        பன்றிகளின் சினைக்காலம் 109-120 நாட்கள். சராசரியாக அவற்றின் சினைக்காலம் 114 நாட்களாகும். சினைப்பன்றிகளை தனியாக மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் பராமரிக்க வேண்டும். மேலும் அவற்றினை புதிதாக வாங்கிய பன்றிகளுடன் சேர்த்து வைத்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் பன்றிகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு சினை கலைந்து விட வாய்ப்புண்டு. ஒவ்வொரு சினைப்பன்றிக்கும் 3 ச.மீ இட வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு நாளும் சினைப்பன்றிகளை மேய்ச்சல் தரையிலோ அல்லது திறந்த வெளியிலோ சற்று நேரம் திறந்து விடுவது நல்லது. மேய்ச்சல் தரை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

        குட்டி போடும்முன் கவனிக்கவேண்டியவை
        பன்றி வளர்ப்பில் மிக முக்கியமான தருணம் குட்டி போடும் தருணமாகும். பன்றிகளின் இறப்பு விகிதம் குட்டி போடும் தருவாயிலும், குட்டி போட்ட பின்பு முதல் வாரத்திலும் அதிகமாக இருக்கும். பன்றிகளுக்கான குட்டி போடும் கொட்டகையில் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளைக்கொண்டு தடுப்பு அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் குட்டிகளுக்கு தனியாக இடம் அமைத்திருக்க வேண்டும். குட்டிகள் 3-4 நாட்கள் வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 24 டிகிரி சி-28 டிகிரி சி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அவை ஆறு வார வயதாகும் வரை குட்டி போடும் கொட்டகையின் வெப்பநிலை 18சசி-22சசி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குட்டிகளுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சூடு உண்டாக்கும் பல்புகள் தரையிலிருந்து 45 செ.மீ உயரத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பன்றிகளை குட்டி போடும் கொட்டகையினுள் விடுவதற்கு முன்பு அக்கொட்டகை நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குட்டிகளுக்கு ஏற்படும் பல வித நோய்கள் தடுக்கப்படும். குட்டி போடும் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சினைப்பன்றிகளை குட்டி போடும் கொட்டகைக்கு மாற்ற வேண்டும். குட்டி போடும் கொட்டகைக்கு மாற்றுவதற்கு முன் சினைப்பன்றிகளை நன்றாக கழுவ வேண்டும். இந்த சமயத்தில் அவற்றிற்கு அளிக்கப்படும் அடர் தீவனத்தில் மூன்றில் ஒரு பங்கு கோதுமைத்தவிடு இருக்க வேண்டும். குட்டி போடுவதற்கு ஒரு வாரத்தில் ஆரம்பித்து பன்றிகள் குட்டி போடும் வரை அவற்றிற்கு அளிக்கப்படும் தீவன அளவினை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். குட்டி போடும் நாள் நெருங்கியவுடன் பன்றிகளை நன்றாக கூர்மையாக கவனிக்க வேண்டும். தோராயமாக குட்டி போடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அவற்றிற்கு தீவனம் எதுவும் கொடுக்கக்கூடாது.

        குட்டி போடும் போது கவனிக்கவேண்டியவை
        பன்றிகள் குட்டி போடும் போது கண்டிப்பாக பண்ணையாள் ஒருவர் உடன் இருக்க வேண்டும். முழுமையாக பன்றிகள் குட்டி போடுவதற்கு 2-4 மணி நேரங்கள் பிடிக்கும். ஒன்றன் பின் ஒன்றாக குட்டி போடும் போது குட்டிகளை எடுத்து அவற்றுக்கென உள்ள இடத்தில் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பன்றிக்குட்டிகளின் மூக்கு மற்றும் வாயிலுள்ள கோழை போன்ற திரவத்தினை சுத்தம் செய்ய வேண்டும். குட்டிகளின் தொப்புள் கொடியினை அவற்றின் தொப்புளிலிருந்து 2-5 செ.மீ நீளம் விட்டு முடிச்சு போட்டு பின் கிருமி நாசினி கொண்டு துடைக்கப்பட்ட கத்தரிகோலால் கத்தரித்த பின்பு அவ்விடத்தில் அயோடின் கரைசல் தடவ வேண்டும். குட்டி போட்ட பின்பு குட்டிகளை தாய் பன்றியிடம் பாலூட்ட அனுமதிக்கலாம். குட்டி போட்ட இரண்டாம் நாளில் குட்டிகள் தங்களுக்கான பால் காம்பினை தேர்வு செய்து கொள்ளும். ஒரு நாளில் குட்டிகள் 8-10 முறை தாயிடம் பால் குடிக்கும். குட்டி போட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு குட்டிகள் பால் குடிக்கும் போது தாய் பன்றிகள் நசுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

        பன்றிக்குட்டிகளின் ஊசிப்பல்லை நீக்குதல்
        பன்றிக்குட்டிகள் பிறக்கும் போது அவைகளுக்கு கூர்மையான இரண்டு ஜோடி பற்கள் மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் இருக்கும். ஆனால் இவைகளால் எந்த பயனும் இல்லை. ஆனால் பன்றிக்குட்டிகள் தாய் பன்றியிடம் பால் குடிக்கும் போது இப்பற்களால் தாய் பன்றியின் பால் மடியில் புண்கள் ஏற்படும். இதனை தவிர்க்க இப்பற்களை குட்டிகள் பிறந்தவுடன் நறுக்கி விட வேண்டும்.

        பன்றிக்குட்டிகளில் ஏற்படும் இரத்தசோகை
        பன்றிக்குட்டிகளில் ஏற்படும் பொதுவான நோய் இரத்தசோகையாகும். இரத்த சோகையினைத் தவிர்க்க பன்றிக்குட்டிகளுக்கு இரும்பு சத்துள்ள மருந்துகளை வாய் வழியாகவோ அல்லது இரும்பு சத்து மருந்தினை ஊசியாகவோ அளிக்கலாம். தாய் பன்றியின் மடியில் இரும்பு சல்பேட் கரைசலை (0.5 கிலோ இரும்பு சல்பேட்+10 லிட்டர் தண்ணீர்) குட்டி போட்ட நாளிலிருந்து பன்றிக்குட்டிகள் அடர் தீவனம் எடுக்கத் தொடங்கும் காலம் வரை தடவுவதன் மூலம் பன்றிக்குட்டிகள் பாலூட்டும் போது இரும்பு சத்தை எளிதில் பெற முடியும். இல்லாவிடில் இரும்ப-டெக்ஸ்ட்ரான் ஊசியினை சதை வழியாக போட வேண்டும்.

        தாய் பராமரிப்பில்லா பன்றிக்குட்டிகளை வளர்க்கும் முறை
        குட்டி போட்டவுடன் தாய் பன்றிகள் இறந்து விடுதல், மடி நோய், பால் சுரப்பின்மை போன்ற காரணங்களால் பன்றிக்குட்டிகளை தாய் பன்றி பராமரிக்க இயலாது. இந்த நேரத்தில் இக்குட்டிகளை அதே நாளில் அல்லது ஒருநாள் அல்லது இரண்டு நாள் முன் பின் குட்டிகளை ஈன்ற தாய் பன்றியிடம் வளருமாறு செய்யலாம். செவிலித்தாய் பன்றி குட்டி போட்ட சில நாட்களிலிலேயே அதனுடன் தாயின் பராமரிப்பில்லாமல் இருக்கும் குட்டிகளை அதனுடன் சேர்த்து விட வேண்டும். ஏனெனில் தாய் பன்றியின் மடியிலுள்ள குட்டிகள் பாலூட்டாத காம்புகளில் பால் சுரப்பது சில நாட்களில் நின்று விடும்.
        தாய் பன்றியில்லாத குட்டிகளுக்கு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் ஒரு லிட்டர் பசும் பாலை கலந்து கொடுக்கலாம். இவ்வாறு முட்டையின் மஞ்சள் கரு கலக்கப்பட்ட பால் இரும்புச்சத்தினை தவிர அனைத்து சத்துக்களையும் பன்றிக்குட்டிகளுக்கு அளிக்கும். இரும்புச்சத்துக்காக 1/8 டீஸ்ஸ்பூன் அளவு இரும்பு சல்பேட்டினை இப்பாலுடன் கலந்து அளிக்க வேண்டும் அல்லது இரும்பு சத்து ஊசிகளை பன்றிக்குட்டிகளுக்கு போட வேண்டும்.

        ஆண்மை நீக்கம் செய்தல்
        இனப்பெருக்கத்திற்கு பயன்படாத ஆண் பன்றிக்குட்டிகளை அவை 3-4 வார வயதாகும் போது ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்

        பாலூட்டும் தாய்ப்பன்றிக்கு தீவனப்பராமரிப்பு
        பாலூட்டும் போது தாய்ப்பன்றிக்கு பால் கொடுக்கும் ஒரு குட்டிக்கு அரை கிலோ வீதம் அடர் தீவனம் அதற்கு தினசரி கொடுக்கும் தீவனத்தினை விட அதிகமாக கொடுக்க வேண்டும்

        குட்டிகளை தாயிடமிருந்து பிரித்தல்
        பன்றிக்குட்டிகளை தாயிடமிருந்து 8 வார வயதில் பிரிக்க வேண்டும். குட்டிகளை தாயிடமிருந்து முழுவதுமாக பிரிப்பதற்கு முன்பு தினம் சிறிது நேரம் தாய் பன்றியினை குட்டிகளிடமிருந்து பிரிக்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் தாய் பன்றிக்கு அளிக்கப்படும் தீவனத்தை சிறிது சிறிதாக குறைக்க வேண்டும். பன்றிக்குட்டிகளுக்கு இரண்டு வார வயதில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மேலும் குட்டிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலுள்ள புரதச்சத்தின் அளவினை 18 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாக குறைக்க வேண்டும் இரண்டு வார கால அளவில் குறைக்க வேண்டும். ஒரு பன்றிக்கொட்டகையில் 20 குட்டிகளுக்கு மேல் வளர்க்கக்கூடாது.

        பன்றிகளுக்கு ஏற்படும் நோயினை தடுத்தல்s
        எல்லா பன்றிகளுக்கும் 2-4 வார வயதில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியினை போட வேண்டும். மேலும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பன்றிகளை கன்று வீச்சு நோய் மற்றும் லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பரிசோதனை செய்து நோயிருக்கும் பன்றிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். அனைத்து பன்றிக்குட்டிகளையும் தாயிடமிருந்து பிரிக்கும் போது பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். பண்ணைக்கு வளர்ப்பதற்காக பன்றிகளை வாங்கும் போது அவற்றை நோயில்லாத பன்றி பண்ணையிலிருந்து வாங்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பன்றிகளை பண்ணையிலுள்ள மற்ற பன்றிகளுடன் சேர்க்காமல் நான்கு வாரங்களுக்கு தனியாக பராமரிக்க வேண்டும். பன்றிப்பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகளை பன்றிக்கொட்டகையிலிருந்து அப்புறப்படுத்திய பின்பு அக்கொட்டகையில் பன்றிகளை 3-4 வாரங்களுக்கு அடைக்கக்கூடாது.