Monday, 22 July 2013

வியாபாரத்தைப் பெருக்க கனகராஜ் டெக்னிக்!

வியாபாரத்தைப் பெருக்க கனகராஜ் டெக்னிக்!

பிறவிப்பயன் தொடரும்
ஆல் இன் ஒன்


வியாபாரத்தைப் பெருக்க கனகராஜ் டெக்னிக்! 

டி பார்ட்மென்ட் ஸ்டோர்களின் யுகம் இது... ஒரே கூரையின்கீழ் எல்லாப் பொருட்களையும் வாங்கும் வசதி வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் காலமிது.
வீடு கட்டும் கனவோடு பொருட்கள் வாங்க வருகிறவர்களும் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். டைல்ஸிலேயே பல வெரைட்டி காட்டி அசத்துவது ஒருவகை என்றால், இப்படி எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் விற்று வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கடைகளும் முளைக்க ஆரம்பித்திருக் கின்றன.
மணல், ஜல்லி விற்றுக்கொண்டிருந்த குரோம்பேட்டை கனகராஜ், இன்று அனைத்துப் பொருட்களையும் விற்கிற கடையாக தன் ‘ராஜ் ஹார்ட்வேர்ஸை’ மாற்றி இருக்கிறார்.
‘‘என் வாடிக்கையாளர்கள், ‘எலெக்ட் ரிகல் பொருட்கள் எங்கே கிடைக்கும், டைல்ஸ் வாங்க எந்தக் கடைக்குப் போகலாம்?’ என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் உள்ள கடைகளுக்கு வழி சொல்லிக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் இதையெல்லாம் நாமே வாங்கி விற்றால் என்ன என்று யோசித்தேன். இன்று என் கடையில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லாவிதமான பொருட்களையும் வைத்திருக்கிறேன். அடுத்தகட்டமாக ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கி வைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார் கனகராஜ்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 800 சதுர அடி பரப்பில் வைக்கப்பட்ட கடை இன்று 12,000 சதுர அடியாக பரந்து விரிந்திருக்கிறது. வியாபாரம் பெருகியதால், லாபமும் பெருகி வளர்ந்திருக்கிறது.
ஹார்ட்வேர்ஸ் வைத்திருக்கும் ஆட்கள் மட்டுமல்ல... எலெக்ட்ரிகல் கடை வைத்திருப்பவர்கள், சிமென்ட் விற்பனை செய்பவர்கள் என்று எல்லோருமே தனித்தனி வியாபார மாகச் செய்யாமல் கட்டுமானத்துக்குத் தேவையான எல்லாப் பொருட் களையுமே விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது கனகராஜின் கருத்து.
கூடவே, எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், கார்ப்பென்டர் போன்ற ஆட்களையும் வைத்துக்கொண்டு சர்வீஸும் செய்யலாம். இதன்மூலம், பல வாடிக்கையாளர்களைப் பெறலாம் என்பது அவருடைய அனுபவப் பாடம்!
அதேபோல, பொருட்களைக் கடைக்குள் வைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுக் காமல் பரவலாக வைத்து டிஸ்ப்ளே செய்துவிட்டால், வேறு பொருள் வாங்க கடைக்கு வரும் வாடிக்கை யாளர் கூடுதலாக சில பொருட்களை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
நீங்களும் பின்பற்றிப் பார்த்து பலனை அனுபவியுங்கள்!

1 comment: