Monday, 22 July 2013

கூடுதல் வருமானம்! டிப்ஸ் ! - தொழில் உலகம்

கூடுதல் வருமானம்! டிப்ஸ்!

முதலீடு
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100
நீ ங்கள் எந்த வியாபாரத்தில் இருந்தாலும் உங்கள் கடை முன்னால் ஆணி மாட்டும் அளவுக்கு நிச்சயம் இடம் காலியாக இருக்கும். கொஞ்சம் பணத்தைப் போட்டு ஒரு காயின் பாக்ஸ் தொலைபேசியை அதில் மாட்டிவையுங்கள். இதற்கென்று தனியாக ஆள் போடவோ, கண்காணிக்கவோ தேவையில்லை.
காலையில் கடையைத் திறக்கும்போது பாக்ஸை எடுத்து வெளியில் மாட்டிவிட்டு, ராத்திரி கடையை மூடும்போது எடுத்து உள்ளே வைத்துவிடலாம். உங்கள் கடை இருக்கும் ஏரியாவைப் பொறுத்து, போன் தனியாகச் சம்பாதித்துக் கொடுக்கும். சராசரியாக, ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் வரை லாபமாகக் கிடைக்கும். ஆதாயம் அடைந்தவன் சொல்கிறேன், நம்புங்கள்.
ஒருவேளை, உங்கள் வீடு கடைவீதி பக்கமோ அல்லது அலுவலக ஏரியாவிலோ இருந்தால் வீட்டிலேயேகூட நீங்கள் காயின் பாக்ஸ் வைக்கலாம்.
உ ங்கள் வீட்டில் நியூஸ்பேப்பர் வாங்கி படித்துவிட்டு என்ன செய்வீர்கள். ஒருமாதம் சேர்த்து வைத்து எடைக்குப் போடுவீர்கள். பழைய பேப்பர்காரரும் கூட்டிக் கழித்து எடைபோட்டு, நாற்பது ரூபாயோ ஐம்பது ரூபாயோ கொடுப்பார்.
நான் அப்படிச் செய்வதில்லை. அந்த பேப்பரை கட் பண்ணி சிறுசிறு கவர்களாகச் செய்வேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப், டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்றவற்றுக்கு தேவையறிந்து கொடுப்பேன். இப்படிக் கொடுக்கும்போது, ஒரு பேப்பரின் விலையைப்போல் இருமடங்கு காசுபார்த்துவிட முடியும். மாதத்துக்கு சுமாராக ஐந்நூறு ரூபாய்வரை சம்பாதிக்கிறேன். லீவு நாளில் கொஞ்சநேரத்தை இதற்குச் செலவிட்டாலே போதும். வீட்டில் இருக்கும் பெண்கள்கூட இதை முயற்சித்துப் பார்க்கலாம்.
- கே.ராஜகோபால், சென்னை-92.
நோ ட்டுப் புத்தகக்கடை வைத்திருக்கிறார் எங்கள் குடும்ப நண்பர். அந்தக் கடையில் இருந்து நோட்டுகளைக் கொண்டுவந்து அதற்கு நானும், கணவரும், குழந்தைகளும் அட்டை போட்டு லேபிள் ஒட்டிக்கொண்டு போய்க் கொடுப்போம்.
அதற்கென நணபர் எங்களுக்கு சார்ஜ் கொடுத்து விடுவார். இப்படி நோட்டுக்களுக்கு அட்டை போட்டு ரெடி டூ யூஸ் ஆக விற்கும் டெக்னிக் அவருடைய கஸ்டமர்களை நன்றாகவே கவர்ந்து விட்டது. என் நண்பரின் கடைக்கும் நல்ல வியாபாரம்.
தொடர்ந்து, ‘அட்டை போட்ட நோட்டுக்கடை’என்றே அழைக்கும் அளவுக்குப் பிரலமாகி விட்டது. எங்களுக்கும் நோட்டுக்கு அட்டை போடுவது தனி வருமானமாகி விட்டது. ஒருநாளைக்கு ஐம்பது முதல் 75 ரூபாய் வரை வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இப்படி புதுமையாக முயற்சிக்கலாமே!

No comments:

Post a Comment