Monday, 22 July 2013

தொழில் தியரி

தொழில் தியரி
தொழில்
 
பாதி வெற்றி ஃபார்முலா! 
போ திய மூலதனம், சிறப்பான தொழில்நுட்பம் எல்லாம் இருந்து, திறமையான வேலையாட்கள் இல்லை என்றால், எந்தத் தொழிலுமே லாபகரமாக நடக்காது. தொழிலைத் தாங்கி நிற் கும் தூண்களில் முக்கியமானது வேலையாள் நியமனம்.
ஒரு தொழிலைத் தொடங்குவது பற்றி முடிவு செய்த உடனே தேடவேண்டியது அந்தத் தொழிலில் நல்ல அனுபவமும் திறமையும் கொண்ட ஆட்களைத்தான்! தகுதியான ஆட்கள் கிடைத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். ஆனால், அவர்களைத் தேர்வு செய்வதில் சில அடிப்படையான விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொழிலுக்குத் தேவையான ஆட்களின் எண்ணிக்கையை முடிவு செய்து கொள்ளவேண்டும். நிறுவனம் பெரிதாகத் தெரியவேண்டும் என்பதற்காக தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமிக்கக்கூடாது. அதேபோல, சிக்கன நடவடிக்கையாக குறைவான ஆட்களை நியமிப்பதும் தவறு. தெளிவாகத் திட்டமிட்டுக்கொண்டு வேலைகளுக்கேற்ப எத்தனை நபர் தேவையோ, அத்தனை பேரை நியமித்துக் கொள்ளவேண்டும்.
ஆட்களை நியமிப்பதில் சில அடுக்குகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஒரு தையல் தொழிலில் இறங்குவதாக முடிவெடுத்தால், துணிகளை வெட்டுவதில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும் தைப்பதில் திறமையான இருவரையும் பட்டன், காஜா வைப்பதற்கு ஒரு உதவியாளரையும் நியமிக்கவேண்டும் என்பது கணக்கு.
இதில் முதல் அடுக்காக வருபவர் கட்டிங் மாஸ்டர். இவர் துணிகளை வெட்டிக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அதேசமயம், இவருடைய நிலைதான் தையல்கடைக்கு ஆதாரம். தைப்பதில் சிறுகுறைகள் இருந்தால் பிரித்துவிட்டு மீண்டும் தைத்துக்கொள்ளலாம். ஆனால், தவறாக வெட்டிவிட்டால் துணியே வீணாகிவிடும். அதனால், கட்டிங் மாஸ்டருக்கு உரிய மரியாதை யும் உயர்வான சம்பளமும் கொடுக்க வேண்டும்.
ஆக, முதல் அடுக்கில் அவரைப் போல தொழிலை நடத்துவதில் முக்கியத்துவம் பெறக்கூடியவர் இடம்பெறுவார். அடுத்தகட்டத்தில் தைப்பவர்கள், அதற்கு அடுத்து காஜா போடுபவர்கள் இடம் பிடிப்பார்கள். எல்லாத் தொழிலிலுமே இப்படி வேலையாட்களுக்கான அடுக்கை நிர்ணயிக்க வேண்டும். வேலையின் தன்மை அடிப்படையில் அதை நிர்ணயித்துக்கொண்டால், தொழில் சிரமம் இல்லாமல் நடைபெறும்.
எப்படிப்பட்ட ஆட்களைத் தேர்வு செய்யவேண்டும் என்பதைத் தீர்மானித்த பிறகு, எங்கிருந்து ஆட்களைத் தேர்வு செய்யவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உறவுகளின் சிபாரிசு, நண்பருக்குத் தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது கூடவே கூடாது. தொழிலுக்கு முதல் எதிரியே இந்த சிபாரிசுப்படி ஆட்களை நியமிப்பதுதான். அவர்களை முழுமையாக வேலை வாங்கமுடியாமல் சிபாரிசு தடுக்கும்.
அதேசமயம், பொருத்தமான உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களைப் பயன்படுத்தலாம். இது நமது பிஸினஸ் என்பதால், அவர்கள் அக்கறையோடு எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்வார்கள். வேகமான வளர்ச்சிக்கு அது உதவும்.
தொடங்கப் போகும் தொழில் சேவைத்துறை சார்ந்ததா, உற்பத்தி சார்ந்ததா என்பதைப் பொறுத்தும் ஆட்களைத் தேர்வு செய்யலாம். தேவையைப் பொறுத்து முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ வேலைக்கு அமர்த்தலாம்.
எல்லோருமே முழுநேர ஊழியராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. ஒப்பந்த அடிப் படையிலோ, பணிக்குத் தகுந்தபடியோ ஆட்களைத் தேர்வு செய்யலாம். அதுமாதிரியான ஆட்களின் தேவை தொடர்ந்தால் வைத்துக்கொள்ளலாம். அல்லது பணி முடிந்ததும் அனுப்பிவிடலாம். அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளவேண்டும். சேவைத் தொழில் என்றால், பகுதி நேரம் மற்றும் வேலையின் அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுவார்கள்.
இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம், என்ன அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்தாலும் ‘யாரை நம்பியும் இந்தத் தொழில் இல்லை’ என்ற நிலையை உருவாக்கவேண்டும். எந்த வேலைக்கு ஆள் இல்லையென்றாலும் அடுத்த ஆளை வைத்து அந்த வேலையைத் தொடரும் அளவுக்கு இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களையும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.
இவற்றை எல்லாம்விட முக்கியம், தொழிலைத் தொடங்குபவர் அந்தத் தொழிலின் எல்லாத் துறைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment