Monday, 22 July 2013

வாருங்கள் வழி காட்டுகிறோம்!

வாருங்கள் வழி காட்டுகிறோம்!
தொழில்
பெண்களுக்காக...

வாருங்கள்... வழி காட்டுகிறோம்!
‘‘பெ ரிய தொழிற்சாலைகளை நடத்தும் அளவுக்கு வசதியில்லை. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிற நான் எதில் இறங்குவது... எப்படி ஜெயிப்பது?
இதற்கெல்லாம் ஆலோசனை சொல்ல ஆட்கள் இருக்கிறார்களா..?’’ என்று கேட்கும் வாசகர்கள் ஏராளம்.
‘‘இதோ நாங்கள் இருக்கிறோம்’’ என்று முன்வருகிறார் பிரேமா தேசிகன். இவர், கிண்டியிலுள்ள பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டு சங்கத்தின் (கீணிறிகி) தலைவர்.
‘‘பொருளைத் தேர்வு செய்தல், தயாரிப்புக்கான பயிற்சி, நிதி உதவிக்கு ஏற்பாடு, தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பெண் தொழில்முனை வோருக்குத் தேவையான உதவிகளை நாங்கள் ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். சந்தையில், எந்தப் பொருளுக்கு அதிக தேவை இருக்கிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப பயிற்சிகள் அளித்து வருகிறோம். உணவுப் பொருட்கள், கெமிக்கல் பொருட்களுக்குத் தேவை இருக்கிறது என்றால், அத்துறையில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து பயிற்சி அளிக்கிறோம். தயாரிப்புத் துறையில் நம் பெண்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால், அதனை மார்க்கெட்டிங் செய்வதில்தான் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஐடியா தருகிறோம். தயாரிப்புப் பொருட்களுக்கு ஏற்ப, யாரைத் தொடர்புகொண்டு மார்க்கெட் செய்ய வேண்டும் என்று தெரிவிப்பதோடு, சில நேரங்களில் தெரிந்த நிறுவனங்கள், தெரிந்தவர்களிடம் ஆர்டர் பெற்றும் தருகிறோம். வங்கிகளின் அதிகாரி களிடம் பேசி, பெண் தொழில்முனை வோருக்கு எளிதில் கடன் உதவி பெற்றுத் தருகிறோம். பெண் தொழில் முனைவோர் பயன்பெறும் விதமாக கருத்தரங்கம், கண்காட்சி போன்ற வற்றுக்கு ஏற்பாடு செய்கிறோம்’’ என்று தங்கள் சேவைகளைப் பட்டிய லிட்டவர், தொழில் பற்றி எதுவுமே தெரியாமல் ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருப்பவர் களுக்கு வழிகாட்டும் விதம் பற்றிச் சொன்னார்.
‘‘ஆர்வத்தோடு எங்களைத் தொடர்புகொள்ளும் பெண்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் கவுன்சிலிங் அளிக்கிறோம். இதற்கு தொலைபேசியில் முன்கூட்டியே அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதற்கான கட்டணம் 200 ரூபாய். தொடர்ந்து எங்களின் சேவையைப் பெறவிரும்பினால், சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம். தொடங்கும் தொழிலை இறுதி வரை நடத்தவேண்டும் என்பதற்காக நாங்கள் ஆயுள் உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து வருகிறோம். இதற்கான கட்டணம் 1,500 ரூபாய். இவ்விதம் சேரும் உறுப்பினர்களையும் அவர்களின் தொழிலையும் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு அளித்து வருகிறோம்’’ என்றார்.
தொழிலில் எளிதாக வெற்றி பெறுவதற்கான எளிய முறையையும் பிரேமா சொன்னார். ‘‘தற்போது கூட்டு முறையில் (கிளஸ்டர்) பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்துக்கு அரசு உதவி அதிக அளவில் கிடைத்து வருகிறது. இம்முறையில் சுமாராக 30, 50 பேர் சேர்ந்து ஒரு தொழிலைச் செய்யும்போது அதிக முதலீட்டை எளிதில் திரட்ட முடிவதோடு, மேலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும். ஏற்றுமதி செய்யவும் உதவுகிறோம். இதனால், தொழிலில் ஈடுபடும்போது எளிதில் வெற்றி பெறமுடியும். எங்களின் சேவையைப் பார்த்துவிட்டு மத்திய, மாநில அரசுகளின் தொழிற்துறைகள், பெண்கள் மேம்பாட்டு அமைப்புகள், சிறுதொழில் சேவை மையம் (எஸ்.ஐ.எஸ்.ஐ) போன்றவை எங்களுக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றன’’ என்றார்.
பெண் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் உதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள், தோட்டக்கலை, சணல் வாரியம் உள்ளிட்டவை அளித்துவரும் தொழில் வாய்ப்பு தொடர்பான விவரங்களைத் தொகுத்து, இந்த அமைப்பு புத்தகமாக வெளியிட இருக்கிறது. சுமாராக 200 பக்கங்களைக் கொண்ட இதன் விலை கிட்டத்தட்ட 100 ரூபாய்.
இந்த அமைப்பின் உதவியோடு அச்சுத்தொழில் செய்து வருகிறார், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி பாஸ்கரன். ‘‘கடந்த பத்து வருடங் களுக்கு முன் சிறிய அளவில் ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலைத் தொடங்கிச் செய்து வந்தேன். அந்தச் சமயத்தில் ஆர்டர் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அப்போதுதான் இங்கு உறுப்பினராகச் சேர்ந்தேன். அவர்கள் எனக்கு பிரின்டிங் ஆர்டர் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆர்டர்களுக்கான டிஸைன்களை கம்ப்யூட்டர் உதவியுடன் நானே உருவாக்கிக்கொள்கிறேன். ஸ்கிரீன் பிரின்டிங் என்றால் நாங்களே அச்சிட்டுக் கொடுத்து விடுகிறோம். ஆஃப்செட் என்கிறபோது வெளியில் கொடுத்து அச்சிட்டு, அதனைப் புத்தகமாக்கி கொடுக் கிறோம். இப்போது நான் நான்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இதன்மூலம் மாதத்துக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது’’ என்றார் பாரதி பாஸ்கரன் மகிழ்வோடு.
மதுரை அருகிலுள்ள மணலூரில் நிலக்கரிச் சாம்பலில் (ஃப்ளை ஆஷ்) செங்கல் தயாரித்து விற்பனை செய்துவரும் சுதா கண்ணபிரான், ‘‘செங்கல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுத்தர, இந்த அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், செங்கல் விற்பனைக்கான ஆர்டர்களைப் பெற்றுத்தருகிறார்கள். அவர்களின் சேவை எனக்குத் தொடர்ந்து தேவைப் படுவதால், அமைப்பில் ஆயுள் உறுப்பினராகிஇருக்கிறேன். நான் இன்று தன்னம்பிக்கையோடு தொழில் செய்கிறேன் என்றால் அதற்கு இந்த அமைப்பும் ஒரு காரணம்’’ என்கிறார்.
ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ளலாமே...!

1 comment:

  1. Plz...im very much interested in doing a business of my own...how can i contact mrs.prema for further details...

    ReplyDelete