Friday, 11 July 2014

How to make tutty frutty in tamil - டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!

How to make tutty frutty in tamil - டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!

டூட்டி ஃபுரூட்டி

தியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டூட்டி ஃபுரூட்டி (Tutti Frutti). சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்சம் இனிப்பாக எதையாவது மென்று முழுங்க நினைப்பவர்கள் அனைவரும் இப்போது இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு அடிமை.
இதை அப்படியே கொஞ்சம் அள்ளி வாயில்போட்டுக் கொள்ளலாம் என்பதுபோக, ஐஸ்கிரீம், பன், பிஸ்கெட், பான் மசாலா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு (ஜிuttவீ திக்ஷீuttவீ) தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும்கூட இதை ஒரு 'ரெப்ஃப்ரஷனராக’ சாப்பிட்டு மகிழ்கிறார்கள். பாலை அடிப் படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற பொருட்களில் கூடுதல் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. சமீபகாலமாக இப்பொருளுக்கானத் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
சந்தை வாய்ப்பு!
எல்லாத் தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் இது. டூட்டி ஃபுரூட்டியின் சுவை அனைவராலும் விரும்பப்படுவது. இத்தொழிலில் பெரிய அளவில் இதுவரை பலரும் இறங்கவில்லை என்பது கூடுதல் வாய்ப்பு. இதை தயார் செய்வதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், விரைவில் சந்தையைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தயாரிப்பு முறை!
பெரிய மற்றும் பழுக்காத பப்பாளியை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோல் சீவவேண்டும். பப்பாளியின் தோலை சீவுவது கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியினாலோ செய்யலாம். பிறகு நீளவாக்கில் நறுக்கி அதிலுள்ள விதை மற்றும் நார்களை நீக்க வேண்டும். இதை கொதிக்கும் நீரில் எட்டு முதல் பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பப்பாளியை 30% சர்க்கரைப் பாகுடன், 3% சிட்ரிக் ஆசிட் கொண்ட கொதிக்கும் கலவையில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இந்தக் கலவையை 8-10 மணி நேரம் ஆறவிட்டு தேவையான நிறத்தை சேர்த்து உலர வைக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவுகளில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் டிரையர் இயந்திரத்தில் பத்து நிமிடங்கள் உலரவிட்டு, மீண்டும் கொஞ்சம் குளிர வைத்தால் சுவையான டூட்டி ஃபுரூட்டி தயார். இதை அழகாக பேக்கிங் செய்தால்போதும், மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழிலுக்கு நிலம் வாங்கவோ, கட்டடம் கட்டவோ தேவையில்லை. குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பிஸினஸைத் தொடங்கலாம். பேக்கிங் செய்வதற்கும் தயாரித்த பொருளை சேகரித்து வைக்கவும் இடம் தேவைப்படும். மற்றபடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இயந்திரம்!
ஓராண்டுக்கு 60 டன் எடை கொண்ட டூட்டி ஃபுரூட்டியை இரண்டு ஷிஃப்ட்களில் வேலை பார்த்தால் தயார் செய்துவிடலாம். இத்தொழிலுக்கான இயந்திரங்கள் பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கும்.
மற்றச் செலவுகள்!
ஃபர்னிச்சர், அளக்கும் இயந்திரங்கள் போன்ற செலவுகளுக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீர் மற்றும் மின்சாரம்!
10 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். அத்துடன் 1000-1200 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படும்.
மூலப்பொருள்!
இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான பப்பாளி தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கிறது. சர்க்கரை சுலபமாக சந்தையில் கிடைக்கக் கூடியதுதான். சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது சுமார் 25% வரை கழிவுபோக வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு 60 டன் டூட்டி ஃபுரூட்டி தயாரிக்க வேண்டுமெனில் 80 டன் பப்பாளி தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான கலர், சிட்ரிக் ஆசிட் போன்றவைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதுதான்!
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு நல்ல திறமையான வேலையாட்கள் இரண்டு பேர், சாதாரண வேலையாட்கள் நான்கு பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் தேவைப்படுவார்கள்.
கொஞ்சம் இடம், கொஞ்சம் மூலதனம் இருந்தால் குறுகியகாலத்தில் சக்சஸ் பண்ண இது சரியான தொழில்.

1 comment:

  1. can anybody help regarding this pls.my name is muthu kumar and my mobile number is 9842680784

    ReplyDelete