Friday, 11 July 2014

மெழுகு வர்த்தி செய்வது எப்படி ?????

மெழுகுவர்த்தி செய்முறை விளக்கம் : 
  1. முதலில் pharafin மெழுகை 1/2 கி வீதம் கடினத் தன்மை கொண்ட பாலிதீன் கவரில் (அல்லது) மேல் மூடி உடைய (1 லிட்டர் அளவு உள்ள) ப்ளாஸ்டிக் டப்பாவில், 1/2 கி மெழுகை எடுத்துக் கொண்டு , அதில் ஒரு டீஸ்பூன் கலர் கெமிக்கலயும் , 1 டீஸ்பூன் வெள்ளை கெமிக்கலயும், செண்டு 2 சொட்டும் சேர்த்து நன்கு குலுக்கவும்.
  2. கலவை செய்யப்பட்ட மெழுகை கைப்பிடி கொண்ட அலுமினிய பாத்திரத்தில் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற, சில்வர் பாத்திரம் பயன்படுத்த கூடாது.
  3. செய்முறையில் பயிற்சியாளர் கூறும் விதிமுறைப்படி மண்ணெண்ணைய் அடுப்பில், தீயை அதிகமாக வைக்காமல் விதிமுறைப்படி குறைந்த அளவு வைத்து, கலவை செய்த மெழுகை உருக்கவும்
  4. விதிமுறைப்படி செய்முறையில் மெழுகை உருக்கி காட்டுவதைப் போல் அதை பின்பற்றி அதே கால அளவில் உருக்க வேண்டும்.அதிக தீயை கொடுத்து விரைவாக உருக்க கூடாது.
  5. கொடுக்கப்பட்ட அலுமினிய அச்சில் தண்ணீர் இல்லாமல் நன்கு துடைத்துவிட்டு, இரண்டு சொட்டு அளவு விளக்கெண்ணைய்யை (ஆமணக்கு) உள்பக்கம் தடவி கொள்ள வேண்டும்.
  6. செய்முறையில் செய்து காட்டுவது போல் அச்சில் திரியை பொருத்தி கொள்ளவும்.
  7. நீங்கள் உருக்கிய மெழுகை அச்சில் ஊற்றும் போது கீழே போடப்பட்ட தவறுகளை செய்யாமல் ஊற்றவேண்டும்.
    • அச்சின் விளிம்பில் வடியக்கூடாது.
    • வேகமாக ஊற்றக்கூடாது.
    • வேகமாக ஊற்றினால் நுரைகள் அதிகமாக தெரியும்.
    • மெதுவாக ஊற்ற வேண்டும்.
    • நிறுத்தி,நிறுத்தி ஊற்றாமல், ஒரே வேகத்தில், பொறுமையான வேகத்தில் ஊற்ற வேண்டும்.
    • விளிம்பில் வடியாமல் நூல் வழியாக ஊற்ற வேண்டும்.
  8. செய்முறையில் செய்து காண்பித்தபடி திரியை வெட்டி எடுக்கவும்.திரியை வெட்டிய பின் அச்சில் மேல் பாகத்தில் கொடுக்கப்பட்ட PVC பைப் விளிம்பில் ஈரமான துணியை சுற்றி கொண்டு செய்முறையில் செய்து காட்டுவதை போல் பயன்படுத்திக் கொள்ளவும்.
  9. உருகிய மெழுகை PVC பைப்பில் ஊற்றும் போது, மையப் பகுதியில் ஊற்றினால் தவறுகள் ஏற்படும்.அவ்வாறு செய்யாமல் விளிம்பு வழியாக பொறுமையாக இறங்குமாறு ஊற்றவேண்டும்.
  10. அச்சில் ஊற்றி வைத்த மெழுகை (15 நிமிடம்) மேல் பாகம் உறையும் வரை காத்திருக்கவும்.
  11. மேல் பாகம் உறைந்த பின்பு மெழுகு ஊற்றி வைத்த அச்சை தண்ணீர் தொட்டியில் முழுவதும் தண்ணீர் படுமாறு5 நிமிடம் பிரிக்காமல் வைக்க வேண்டும்.
  12. 5 நிமிடம் கழித்து அச்சை பிரித்து எடுக்கவும். பின்பு அச்சிலிருந்து எடுக்கப்பட்ட மெழுகை தண்ணீரில் 1 1/2 மணி நேரம் குளிரச் செய்யவேண்டும்.
  13. மெழுகுவர்த்தியை குளிரச் செய்யும் போது தண்ணீரில் செய்த மெழுகுவர்த்தியை மிதக்கவிடாமல் 1/2 கி எடை கொண்ட ஈரத்துணியை சிறிது அளவாக மடித்து மிதக்கும் மெழுகுவர்த்தியின் மேல்பாகத்தில் வைத்து மெழுகுவர்த்தி தண்ணீரில் மூழ்குமாறு செய்யவேண்டும். மிதக்கவிடக்கூடாது.
  14. 1 1/2 மணி நேரம் நன்கு ஆற வைத்து பின்பு மெழுகுவர்த்தியை தண்ணீரை விட்டு எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளவும்.
  15. பின்பு அந்த மெழுகுவர்த்தியை அச்சில் பொருத்தி கொண்டு உயரமாக உள்ள மேல் பாகத்தை அச்சு மட்டத்திற்கு வெட்டி எடுக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
  • மெழுகுவர்த்தி செய்முறையில் செய்து காட்டுவதைப் போல் இருக்க வேண்டும்.
  • ஓரங்களில் வடிந்த தடங்கள் இருக்க கூடாது.
  • அடிப் பாகத்தில் மற்றும் மேல் பாகத்திலும் குழிகள், பள்ளங்கள் மற்றும் அடி பாகத்தில் வெடிப்புகள் இருக்க கூடாது.
  • அடிப் பாகத்தில் வெள்ளை நிறங்கள் தெரியாமல் ஒரே கலரிலும், ஒரே உருவமாகவும் இருக்க வேண்டும்.
  • மெழுகுவர்த்திக்குள் தண்ணீர் இருக்க கூடாது.நிருவனத்தின் பயிற்சியாளர் செய்து காட்டும் விதிமுறைப்படி இருக்க வேண்டும்.
  • தவறான மெழுகுவர்த்திகள் செய்து கொண்டு வந்து எடுத்து கொள்ளுமாறு வற்புறுத்தக்கூடாது.
  • நீங்கள் செய்து கொண்டு வரும் மெழுகுவர்த்தியை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொடுக்கலாம்.மற்ற தினங்களில் 4 மணி முதல் 6 மணி வரை கொடுக்கலாம்.
  • வியாழக்கிழமை மட்டும் தான் நீங்கள் கொடுக்கும் மெழுகுவர்த்திக்கு பணம் கொடுக்கப்படும்.
பயிற்சி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
  • ஜிப்ஸ் மெழுகுடன், கெமிக்கல் எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதும்
  • அடுப்பில் தீ எந்த அளவு வைக்க வேண்டும் என்று கவனிக்கவும்
  • குழி, பள்ளம் இரண்டும் வராமல் இருக்க எவ்வளவு வெப்பதில் உருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்
  • அடிபாகத்தில் வெள்ளை வராமல் இருக்க எவ்வளவு வெப்பத்தில் உருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்
  • அச்சில் உருகிய மெழுகை ஊற்றும் போது அதன் செய்முறையை கவனிக்கவும்.
ஏற்றுமதி தரமுள்ள மெழுகுவர்த்திகள் செய்யும் விதிமுறைகள்:
  1. எங்கள்  நிறுவனத்திற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக உள்ளதால், உங்கள் உழைப்பை நாடுகிறோம்.
  2. எங்கள் நிறுவனத்திலிருந்து ரூ.6000/- மதிப்புள்ள அச்சுகள் இலவசமாக விதிமுறைப்படி கொடுக்கப்படும்.
  3. pharafin ஜிப்ஸ் மெழுகில் செய்த மெழுகுவர்த்திகள் எரியும் போது புகை வருவதாலும், சீக்கிரம் எரிவதாலும், ஓரத்தில் வடிகின்ற காரணத்தினால் அதை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.மேலும் A/C பொருத்திய அறையில் பயன்படுத்தும் போது புகை வரும் காரணத்தினாலும் தவிர்க்கின்றனர்.
  4. நாம் தயாரிக்கும் மெழுகுவர்த்தியை புகை வராமல் எரிய செய்வதற்க்கும் உடனடியாக இளக விடாமல், கடினத்தன்மையைக் கொடுத்து பொறுமையாக இளக வைத்து நீண்ட நேரம் எரிய செய்வதற்கு கட்டாயம் மெழு ஜிப்ஸ் மெழுகுடன் கெமிக்கல் கலந்து செய்ய வேண்டும்
  5. கெமிக்கல் கலக்காமல், pharafin ஜிப்ஸ் மெழுகுடன் செய்தால் ஏற்றுமதிக்கு ஏற்கமாட்டார்கள்.
  6. pharafin ஜிப்ஸ் மெழுகுடன் கெமிக்கல் கலப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    • எரியும் போது புகை வருவதை தவிர்கின்றது.
    • A/C பொருத்திய அறையில் புகை வராத மெழுகை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக
    • A/C பொருத்திய அறையில் மெழுகுவர்த்தி எரியும் போது நல்ல வாசனையை கொடுக்கும்.
    • விழாக்களில் (or) விருந்து கொடுக்கும் போதும்,உணவு அருந்தும் மேஜையில் மெழுகுவர்த்தியை எரிய செய்யும் போதும், மெழுகின் வாடையை மறைத்து நல்ல நறுமணத்துடன் எரியும்.
    • எரியும் போது ஓரங்களில் வடியாமல் முழுவதும் எரியச் செய்யும்.
    • Pharafin ஜிப்ஸ் மெழுகில் கெமிக்கல் சேர்க்காமல் செய்த மெழுகுவர்த்தி நான்கு மணி நேரம் மட்டும் தான் எரியும்.
    • இவற்றை தவிர்க்க கெமிக்கல் கலப்பதால் மெழுகுக்கு கூடுதல் இறுகும் தன்மையைக் கொடுத்து விரைவாக இளக விடாமலும், கரைய விடாமலும் பொறுமையாக எரிய வைத்து 12 மணி நேரம் வரை மெழுகை முழுவதும் எரிய செய்யும்.
  7. நீங்கள் தயார் செய்யும் மெழுகுவர்த்தி கெமிக்கல் பயன்படுத்தி ஒரெ கலரில் செய்து கொடுத்தால் ஒரு கிலோவிற்கு ரூ,400/- கொடுக்கப்படும்.
  8. Pharafin ஜிப்ஸ் மெழுகை இரண்டு கலரில் செய்யக்கூடிய கெமிக்கல் பயன்படுத்தி இரண்டு கலரில் தெரிவதுபோல் செய்து கொடுக்கும் மெழுகுவர்த்திக்கு ரூ,800/- கொடுக்கப்படும்.
  9. Pharafin ஜிப்ஸ் மெழுகை மூன்று கலரில் தெரியும்படி செய்து கொடுக்கும் மெழுகுவர்த்திக்கு ரூ,1200/-கொடுக்கப்படும்.
  10. நீங்கள் எங்கள் நிறுவனத்தின் விதிமுறையின்படி மெழுகுவர்திகளை செய்து கொடுக்க விருப்பம் என்றால் எந்தவித முன்பணமும் செலுத்தாமல் முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். பயிற்சி எடுப்பதற்கு மட்டும் பயிற்சி கட்டணம் ரூ,200/- செலுத்தினால் போதும்.
  11. நீங்கள் பயிற்சியை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பயிற்சி எடுத்த பின் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் பயிற்சியில் செய்து காட்டுவதைப் போல் உங்களால் அதே முறையில் மெழுகுவர்த்தி தயார் செய்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் உறுப்பினராக இணைந்து விதிமுறைகளை பின்பற்றி மெழுகுவர்த்தி தயார் செய்து கொடுக்கலாம்.
  12. 30 kg அதிகமாக product பண்ணினால் வீட்டிற்கு வந்து எடுத்துக் கொள்கின்றோம்.                                                         


உறுப்பினராக இணையும் விதிமுறைகள்:

  1. மெழுகுவர்த்தி செய்வதற்க்கான மெழுகை வாங்கி காட்ட வேண்டும்
  2. அடையாள அட்டை ,குடும்ப அட்டை அல்லது ஓட்டுநர் உரிமைக்கான நகல்கள் ஏதேனும் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.
  3. உறுப்பினர் படிவத்தில் முழு முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
  4. Pharafin ஜிப்ஸ் மெழுகுடன் கலந்து செய்யக்கூடிய மூலப்பொருள் (Trible Mixture wax chemical) Pharafin ஜிப்ஸ் மெழுகும் எங்கள் நிறுவனத்திலும் கிடைக்கும்.
  5. அந்த (Trible Mixture wax chemical ) – லும், Pharafin ஜிப்ஸ் மெழுகும் எங்கள் நிறுவனத்திலும் கிடைக்கும்.
  6. நீங்கள் மெழுகுவர்த்தியை தயார் செய்ய தேவைப்படும் மூலப்பொருள்கள், வாங்கி வந்து காண்பித்தால் மட்டுமே, அச்சு விதிமுறைகளின்படி உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  7. மூலப்பொருளின் ஆரம்ப விலை ரூ.3600/- லிருந்து உள்ளது.
  8. நீங்கள் வாங்கக்கூடிய (Trible Mixture wax chemical) என்ற மூலப்பொருள் 60 கிலோ வரை Pharafin ஜிப்ஸ் மெழுகிற்கு கலந்து செய்யலாம்.
  9. மெழுகுவர்த்தி தயார் செய்வதில், ஒரு கிலோவிற்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்ற விவரத்தை எங்களது ஊழியரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும்...
  10. எங்கள் விதிமுறையின்படி மெழுகுவர்த்திகள் செய்து கொடுக்க சம்மதம் என்றால் உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்டு பயிற்சி எடுத்துக் கொள்ளவும்.














      14 comments:

      1. Good
        .. I need to candle business abdulrahu997@gmail.com. 9487645728

        ReplyDelete
      2. Good way
        I need to sakkarai thulasi business. pls tell way
        rakkappan.in@gmail.com mob:8015259470

        ReplyDelete
      3. Please inform contact address. My e mail id ppmsnekam@gmail.com Contact No.9744883329

        ReplyDelete
      4. Please infrom contact address. my e mail id mariappan261981@gmail.com
        Contact 9789896290 i am willing to make candles

        ReplyDelete
      5. Please inform. My Contact 9087827980

        ReplyDelete
      6. How to remove Handle back side always coming in white pimples

        ReplyDelete
      7. Sir I am interested in candle business my number 9952105232,name kavi

        ReplyDelete
      8. Sir,l need candle business. 9976358864 stephen

        ReplyDelete
      9. i need to candle business kavisathish90@gmail.com ph : 8056455457

        ReplyDelete
      10. I want your conduct mobile no.

        ReplyDelete
      11. Iam interested in candle buissness my number 9944321731 send me your number

        ReplyDelete