Friday, 11 July 2014

நீங்களும் துவங்கலாம் பருப்பு மில்!! விற்பனையில் 8- 10% லாபம்!

செயற்கையைவிட இயற்கைதான் 'சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதற்கு சிறந்த உதாரணம் எரிகட்டி (Fuel Briquettes). அதிகரித்து வரும் கேஸ் விலையேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமையானதொரு தீர்வாக உருவெடுத்திருக்கிறது எரிகட்டி தயாரிப்பு.
குறைந்த அடர்த்தியிலான (Density) பயோமாஸை அதிக அடர்த்திக்கு மாற்றி எரிசக்தி தருவதே இதன் சிறப்பு. வீண் என வீசி எறியப்படும் பொருட்களை கொண்டே தயார் செய்யப்படுகிறவை இந்த எரிகட்டிகள் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நம் நேரத்தையும், எரிசக்தியையும் மிச்சப்படுத்துகிறது.
சந்தை வாய்ப்பு!
அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.

மூலப் பொருட்கள்!
தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.
கட்டடம்!
இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.

இயந்திரம்!
இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
மானியம்!
எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.
வேலையாட்கள்!
மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
சூப்பர்வைசர் - 1
திறமையான வேலையாட்கள் - 5
சாதாரண வேலையாட்கள் - 14
மின்சாரம்!
ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.
பிளஸ்!
மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.

ரிஸ்க்!
தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.
மார்க்கெட்டிங்!
அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா.கலைச்செல்வன்
''நல்ல டிமாண்ட் இருக்கிறது!''

கே.பி.கண்ணபிரான், கோயம்புத்தூர், கஸ்தூரி இண்டஸ்ட்ரிஸ்
''அதிகரித்து வரும் எரிபொருட் களின் விலையேற்றத்தால் தற்போது வீடுகளிலும் எரிகட்டிகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதிலும் கிராமப்புறங்களில் இதற்கான தேவைகள் அதிகரித்துள்ளது. மூலப் பொருட்கள் சுலபமாக கிடைக்கிறவர்களுக்கு உடனே தொழில் தொடங்கும் வாய்ப்பும் இருக்கிறது.
எங்களிடம் தயாராகும் எரிகட்டிகளைத் தயாரான அன்றே வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். அந்தளவுக்கு டிமாண்ட் இருக்கிறது. மூலப் பொருட்களை இடைத்தர கர்கள் மூலமும் வாங்கி கொள்ளலாம். இத்தொழிலுக்கு தடையற்ற மின்சாரம் தேவை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், தயாரிப்பில் சுணக்கம் ஏற்படும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. எனவே இதைப் பயன்படுத்தி, இந்த தொழிலில் இருக்கும் சூட்சுமங்களையும் தெரிந்து கொண்டு இறங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம்

No comments:

Post a Comment