Monday, 22 September 2014

Water Plastic Bottle Making in tamil |

Water Plastic Bottle Making in tamil

பணம் கொட்டும் தொழில்கள்
பெட் பாட்டில் தயாரிப்பு!
 நீரை.மகேந்திரன்
கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு!
மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.
பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் (Preform)  என்கிற சிறிய பாட்டில்களாகத்  தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.
பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்குத் தேவையான அளவு அச்சுக்களை இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும். இந்த பிரீஃபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உட்செலுத்தினால்,  சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொருத்தி உள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும். அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து, அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்!
பொதுவாக, பெட் பாட்டிலுக்கான பிரீஃபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்துத் தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடியில்லாமலோ விற்பனை செய்யலாம்.
திட்ட அறிக்கை! (ரூ.)
பெட் பாட்டில் தயாரிக்கும் ஓர் இயந்திரத்தை வாங்க ரூ.5 லட்சம் ஆகும். நாம் இரண்டு இயந்திரங்கள் வாங்கலாம்.  ஒரு மணி நேரத்தில் 1,200 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான கம்ப்ரஸர் இயந்திரம் ரூ.6 லட்சம் ஆகும்.
கட்டடம்: வாடகை (அ) சொந்தமாக
இரண்டு இயந்திரங்கள் : 10 லட்சம்
கம்ப்ரஸர் இயந்திரம் : 6 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்
மொத்தம் : 23 லட்சம்
மானியம் (ரூ.)
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 25 -  35% வரை மானியம் பெற முடியும். அல்லது நீட்ஸ் திட்டத்தில் 25% மானியத்துடன் துவங்கலாம்.
நமது மூலதனம் : 1.15 லட்சம்
மானியம் 25% : 5.75 லட்சம்
காலக்கடன் :16.10 லட்சம்
உற்பத்தி!
ஒரு மணி நேரத்துக்கு 1,000 பாட்டில்கள் வீதம் ஒரு ஷிப்ட்-க்கு 8,000 பாட்டில்கள் வரை செய்யலாம். நாம் இரண்டு இயந்திரங்களை வைத்திருப்பதால், 16 ஆயிரம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய முடியும். பிரீஃபார்ம் பாட்டில்கள் 1 கிலோ ரூ.140. ஒரு பாட்டில் 19-21 கிராம் வரை வரும். நாம் ஒரு லிட்டர் அச்சில் தயாரிப்பதாக எடுத்துக்கொண்டால், ஒரு கிலோ பிரீஃபார்ம் மூலம் 50 பாட்டில்கள் கிடைக்கும்.
நமது ஒருநாள் உற்பத்தியான 16 ஆயிரம் பாட்டிலுக்கு 320 கிலோ பிரீஃபார்ம் தேவை. ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால் 8 டன் மூலப்பொருள் தேவைப்படும் (320ஙீ25=8,000 கிலோ).
ஒரு டன் மூலப்பொருளின் (1,000 கிலோ) விலை ரூ.1.40 லட்சம் எனில், 8 டன்னுக்கு ரூ.11.20 லட்சம் தேவை. நடைமுறை மூலதனம் குறைவாக இருப்பவர்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளலாம்.
செலவுகள்!  (ரூ.)
மூலப்பொருள்: 11.20 லட்சம்
வேலையாட்கள்:
மேலாளர்       : 1X10,000 = 10,000
பணியாளர்கள்   : 5X7000 =   35,000
உதவியாளர்கள்  : 2X5000 =  10,000
விற்பனையாளர்  : 1X8,000 =   8,000
______________
மொத்தம்          63,000
______________
மின்சாரம் 50 ஹெச்.பி     : 20,000
சாதாரணமாக ஒரு பிரீஃபார்ம் 20 கிராம் இருக்கும். ஒரு கிலோவுக்கு 50 எண்ணிக்கை என்று கொண்டால், ஒன்றின் விலை ரூ.2.80. ஒரு பாட்டில் விற்பனை விலை ரூ. 3.20.
சிறிய ஆர்டர்கள் எனில் ரூ.3.60 வரை விற்கலாம். சராசரி விலை ரூ.3.40 எனக் கொண்டால், தினசரி 16,000 பாட்டில்களும் மாதமொன்றுக்கு 4 லட்சம் பாட்டில்களும் உற்பத்தி செய்வோம். ஆர்டர்களைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கலாம்!
மொத்த வருமானம்: 4,00,000ஙீ3.40 = 13,60,000 (அதிகமாகத் தயாரிக்கும்போது வருமானமும் அதிகரிக்கும்)
மொத்த செலவுகள்: (ரூ.)
வாடகை :       10,000
மூலப் பொருட்கள் :     11,20,000
மின்சாரம் :       20,000
தொழிலாளர்கள் :       63,000
கடன் வட்டி (12.5%) :       16,700
கடன் தவணை (72 மாதம்) :       22,300
இயந்திரப் பராமரிப்பு :       10,000
விற்பனை செலவு :       10,000
தேய்மானம் :       20,000
மேலாண்மை செலவு :       10,000
மொத்தம் :     13,02,000
மொத்த வருமானம் :     13,60,000
மொத்த செலவு :     13,02,000
லாபம் :          58,000
மூடியுடன் கேட்கும்போது மூடி விலை 25 பைசா முதல் 30 பைசா வரை கூடுதலாகச் செலவாகும்.

5 comments:

  1. Hi..any idea how to start scrap business for metal,Plastic items .. please share with me your items.. thx
    email : ncs.neel@gmail.com

    ReplyDelete
  2. Iam willing to do this. But how can I clarify my doubts and where ill get the orders...if anyone knows about this business please contact me through 9789155021

    ReplyDelete
  3. Tamilz1990@gmail.com whatsaap 7418222677 pls sent your contact num.. am intrest

    ReplyDelete
  4. How To start automobile spare parts business.. plz any idea share u r Msg.... My number: 9790609599

    ReplyDelete
  5. sir
    please send and inform me the pet bottle manufacturing machine
    available company and place
    maid:balamuruganm681@gmail.com

    ReplyDelete