Monday, 1 September 2014

Share Market News Basics In Tamil

Share Market News Basics In Tamil


பங்குச் சந்தை என்றால் என்ன?
பங்குச் சந்தை என்றால் என்ன?
Posted Date : 12:11 (09/11/2012)Last updated : 12:11 (09/11/2012)
‘மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. பீடி, சிகரெட் பிடிக்க மாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக் கட்டை கையால்கூடத் தொடமாட்டார்.

இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பார்த்துக்கோங்களேன்!’

இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது நம் பங்குச் சந்தை... இன்னமும் பலர் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். நீங்களும் அப்படியிருந்தால் இனியாவது மறுங்கள். கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள்.

கம்பெனி நாலு விதம்..!

கம்பெனி... கம்பெனினு சொல்றோமே அதிலே நாலுவிதம் இருக்கு. முதல்ல தனி ஆள் சொந்தமாக நடத்துற கம்பெனி. அடுத்து ரெண்டு மூணுபேர் சேர்ந்து நடத்துற பார்ட்னர்ஷிப் கம்பெனி... அடுத்து, கொஞ்ச பேர் கூட்டாச் சேர்ந்து பணம் போட்டு நடத்துற பிரைவேட் லிமிடெட் கம்பெனி. இந்த மூணுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாலாவதா இருக்கற பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் நமக்குத் தேவை! ஏன்னா, அந்த கம்பெனிக்கும் நமக்கும் தொடர்பு இருக்கே... பின்னே அந்த பப்ளிக் நாமதானே!

சிம்பிளாச் சொல்லணும்னா பப்ளிக்கா வந்து பல பேரை கூட்டாளியாச் சேர்த்துக்கிட்டு அவங்ககிட்டேயும் பங்கு முதல் வாங்கி தொழில் நடத்தும் கம்பெனிதான் பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதுல கூட்டாளியா இருக்கறவங்க பங்குதாரர். அட, நீங்கதாங்க அது!

அதாவது ஒரு கம்பெனியை நடத்துறதுக்குப் பத்து கோடி ரூபா தேவைனு வெச்சுக்கோங்க... அதை கோடி பேர்கிட்டே பத்து பத்து ரூபாயா வாங்கி பணத்தைச் சேர்த்தா அது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியை நடத்தி, அதில் கோடி ரூபா லாபம் வந்ததுன்னா அதை பத்து ரூபாய் கொடுத்த ஆளுக்கு ஒரு ரூபாய் லாபம்னு கணக்கு வெச்சு பிரிச்சுக் கொடுத்திடலாம். இதுதான் பங்குக் கணக்கு.


பங்குச் சந்தைன்னா என்ன?

இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே...அந்த கம்பெனியில பத்து ரூபாய் கொடுத்து பங்குதாரர் ஆகலாம்னு எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு... அதைக் கூவிக் கூவி விக்கறதுக்குனு சந்தை இருக்கு... நம்ம ஊர் வாரச் சந்தை மாதிரியே... அதுக்குப் பேர்தான் பங்குச் சந்தை..! ஆங்கிலத்தில் ஷேர் மார்க்கெட்.

கம்பெனிகள் எல்லாம், ‘எங்க கம்பெனி பங்குகளை வாங்கிக்கோங்க’னு சந்தையில் கடைவிரிப்பாங்க... வேணுங்கறவங்க பங்குகளை வாங்கி அந்த கம்பெனியில பங்குதாரர் ஆவாங்க... இப்படி பங்குகளை விக்கிற இடம்தான் பங்குச் சந்தை. ‘சரி, இது ஒருநாள் வியாபாரம் தானே..? முதல்ல பங்கை வாங்கிட்டா... அதுக்குப் பிறகு பணம் போட்டவருக்கும் கம்பெனிக்கும்தானே நேரடி பேச்சுவார்த்தை... சந்தைக்கு என்ன வேலை’னு கேக்கத் தோணுதா..

ஐ.பி.ஓ... செகண்டரி சந்தை..!

மேலே சொன்னோமே... கம்பெனிகள் தங்களோட பங்குகளை கடைவிரிக்கும்னு அதுக்குப் பேர்தான் பங்கு வெளியீடு! இங்கிலீஷில் ஐ.பி.ஓ. (இன்ஷியல் பப்ளிக் ஆஃபர்)  சொல்வாங்க. அதாவது, ஒரு கம்பெனி தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துறதுக்காக பங்குச் சந்தைக்கு வந்து பங்குகளை வெளியிடுவாங்க... இந்த பங்கு விற்பனையை, மெர்ச்சென்ட் பேங்க்கர்ஸ் அப்படிங்குற நிதி நிறுவனங்கள் முன்னாடி நின்னு நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிதி திரட்டிக் கொடுக்கும். ஒரு கம்பெனி பங்கு வெளியிட்டாச்சுன்னா அந்த கம்பெனி சந்தைக்கு வந்தாச்சுனு அர்த்தம்.

இப்படி ஒரு கம்பெனி ஐ.பி.ஓ. வரும்போது அது நல்ல கம்பெனி... நல்ல லாபம் கிடைக்கும்னு நினைச்சு பல பேர் அந்த பங்குகளை அடிச்சுப் பிடிச்சு வாங்கிடுறாங்கனு வச்சுக்கோங்க... அப்படின்னா சிலருக்கு அந்தப் பங்கு கிடைக்காமப் போயிடும் இல்லையா? ஆனா, அவங்க வாங்கறதுக்கும் ஒரு வாய்ப்பு வரும். அதுக்கு செகண்டரி மார்க்கெட் அதாவது இரண்டாம் நிலை சந்தைனு பேரு!

ஐ.பி.ஓ-.வுல வாங்காதவங்க அதுக்குப் பிறகு இந்த செகண்டரி மார்க்கெட்டுல வாங்கிக்கலாம். ஐ.பி.ஓ.-வில பங்குகளை வாங்கினவங்க அந்தப் பங்குகள் வேண்டாம்னு நினைச்சோ அல்லது நல்ல டிமாண்ட் இருக்கிறதால லாபத்துக்கு வித்துடலாம்னு நினைச்சோ விற்க முன்வருவாங்க. அந்த சமயத்துல அந்த பங்குகளை மத்தவங்க வாங்கிக்கிடலாம். ஆனா, ஒரு வித்தியாசம்... ஐ.பி.ஓ-.விலே கம்பெனி நிர்ணயம் செஞ்ச விலைக்குப் பங்கு கிடைக்கும். ஆனா, செகண்டரி மார்க்கெட்டுல எந்த விலைக்கு விற்க விரும்பறாங்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்கணும். பத்து ரூபாய் பங்குன்னா பத்து ரூபாய்தானே இருக்கணும். அது எப்படி அதிகமாகும்னு நினைக்கிறீங்களா..?

நாம பசுமாடு ஒண்ணை பத்தாயிரம் ரூபாய்க்கு ஒருத்தர்கிட்ட வாங்குறோம். வாங்கின பிறகு நாம எதிர்பார்த்ததை விட அது அதிகமா பால் கறக்குதுனு வச்சுக்குவோம்... இப்போ அந்த மாட்டை விற்க நினைச்சா அதே பத்தாயிரத்துக்கா விற்போம்? கூடுதல் லாபம் வச்சுதானே விற்போம். அப்படித்தான் நல்ல லாபம் கொடுத்தா... பங்கோட மதிப்பும் சந்தையில கூடும். பத்து ரூபாய்க்கு வாங்கின பங்கு நூறு ரூபாய்க்குகூட போகும்!

ஐ.பி.ஓ.&வுல கம்பெனி நிர்ணயம் பண்ணின விலைக்குத்தான் பங்கு கிடைக்கும்னு முதல்ல பார்த்தோமே... அந்த காலமும் இப்போ மலை-யேறிடுச்சு. முன்ன-யெல்லாம் பத்து ரூபாய் மதிப்-புள்ள பங்குகளை ஒரு கம்பெனி வெளியிடு-துன்னா, அந்த பத்து ரூபாய்க்கே வாங்கலாம். ஆனா, இப்போ பிரீமியம் ரேட்டுங்கற பேர்ல ஐம்பது மடங்கு, நூறு மடங்கு அதிகமாத்தான் கம்பெனியே விலை நிர்ணயம் பண்ணுது.

இப்போ ஒரு விஷயம் புரிஞ்சிருக்குமே... பங்குச் சந்தைக்கு வர்ற கம்பெனிகள்ல நல்ல திறமையான கம்பெனியோட பங்குகளை வாங்கினா, அது நமக்கு நல்ல லாபத்தைச் சம்பாதிச்சுக் குடுக்கும்.

முக்கிய பங்குச் சந்தைகள்..!

நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.), தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.)  என இரண்டு பெரிய சந்தைகள் இருக்கு. இதுதவிர மெட்ராஸ் பங்குச் சந்தை, கொல்கத்தா பங்குச் சந்தைனு பரவலாக ஏரியா அளவிலும் பல சந்தைகள் இருக்கு.
ஆனால், இப்போதைக்கு முழு வேகத்துல செயல்படுறது மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும்தான். இந்த பங்குச் சந்தைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் அதனோட பங்குகளை பட்டியலிட்டிருக்கும். அவற்றின் மீது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரைக்கும் வியாபாரம் நடக்கும்.

ஒருகாலத்துல நம்மூர் சந்தை மாதிரியே இங்கேயும் பங்குகளை வாங்குறவங்களும் விக்கறவங்களும் கூவிக் கூவி வியாபாரம் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. இப்போ கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லாமே ஆன்லைனுக்கு வந்திடுச்சு. அதாவது, நாம உட்கார்ந்த இடத்துல இருந்தே பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!
பங்கு வர்த்தகம்: ஆஃப்லைன், ஆன்லைன்

பங்கு வர்த்தகத்துல ஆஃப்லைன், ஆன்லைன் அப்படின்னு ரெண்டு வசதி இருக்கு. 

ஆஃப்லைன்ங்குறது புரோக்கர்கிட்ட நேர்லயோ, போன் மூலமாவோ ஷேர் வாங்கச் சொல்றது.

ஆன்லைன்ங்குறது, புரோக்கிங் கம்பெனி, நமக்குன்னு கொடுத்திருக்குற யூசர் ஐ.டி. பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இன்டர்நெட் மூலமா நேரடியா பங்கு வர்த்தகம் பண்றது. பங்குச் சந்தையோட நெளிவு, சுளிவு தெரியாம, ஆன்லைன் ஷேர் டிரேடிங்கில்  இறங்குறது அவ்வளவா நல்லதில்லை. 

இந்த ஆன்லைன் டிரேடிங் செய்யறதுக்கான அக்கவுன்டை பேங்க்ல ஆரம்பிச்சா, அது த்ரீ -இன் -ஒன் அக்கவுன்டா இருக்கும். அதாவது பேங்க் அக்கவுன்ட், டீமேட் அக்கவுன்ட், டிரேடிங் அக்கவுன்ட் மூணும் ஒரே இடத்துல கிடைக்கும். பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும், அதுக்கான பணப் பரிமாற்றம், நம்ம-ளோட பேங்க் கணக்குல கம்ப்யூட்டர் மூலமா தானா நடக்கும்.

இதே ஆன்லைன் அக்கவுன்டை ஷேர் புரோக்கிங் ஆபீஸ்ல ஆரம்பிச்சா, பேங்க் அக்கவுன்ட் தனியாவும், டீமேட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் கணக்கு தனியாவும் இருக்கும். ஆன்லைன் டிரேடிங் செய்ய இன்டர்நெட் கனக்ஷனோட இருக்கிற கம்ப்யூட்டர் அவசியம். அதுக்காக பிரவுசிங் சென்டர்ல போயி ஆன்லைன் டிரேடிங் செய்யக்கூடாது. ஏன்னா அது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

இப்போ பங்குகளை வாங்குற அளவுக்குத் தயாராகிட்டீங்களா..? அதாவது உபரியா இருக்கற சேமிப்பு பணத்தைத்தான் பங்குச் சந்தையில் போடுறதுனு முடிவு பண்ணி-யிருக்கீங்க... அதுக்கான டீமேட் கணக்கு, டிரேடிங் கணக்கு எல்லாம் ரெடியாகிடுச்சு... அப்படித்தானே..! 

Share Market News Basics In Tamil

7 comments:

  1. please your contact number or ur email id friend i have full details in shares in tamil language and how to open in a/c for bank or share brok office and minimum howmuch amound opening in a/c and all details includ chilly information i dont know please explain in tamil

    ReplyDelete
    Replies
    1. Share Market live news in tamil should be get from where?

      Delete
  2. Friends I have started new Franchise of share broking……. Any one need about share market contact me i ll help u… cell 9994275083

    ReplyDelete
  3. share market live status should me known

    ReplyDelete
  4. I WANT KNOW THE SHARE MARKET IN TAMIL THEN HOW TO OPEN ACCOUNT OF SHARE MARKET BROKER OFFICE AND HOW MUCH AMOUNT OF OPENING ACCOUNT PLZ REPLY

    ReplyDelete
  5. I need this business training and manufacturer all.my cont

    ReplyDelete

  6. I need this business training and manufacturer all.my cont09786577481

    ReplyDelete