Tuesday, 15 July 2014

அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்! பணம் கொட்டும் தொழில்கள்! 5

தமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் கிடையாது. உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினால் லாபம்தான்!
சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்துதரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
தொழில் எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் இந்த அலுமினிய ஃபாயில் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, ரயில்களில் மட்டுமல்ல, பெரிய ஹோட்டல்களில் பலவற்றிலும் இந்த பாக்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.  இந்த பாக்ஸ்களில் அடைக்கப்படும் உணவுகள், சூட்டைத் தாங்கும் திறனும், ஒளி ஊடுருவாமல் உணவின் தன்மையைப் பாதுகாக்கவும் செய்வதால் இந்த அலுமினிய பாக்ஸ்களுக்கு தேவை அதிகமாகியுள்ளது.
தமிழக அளவில் இந்தத் தொழிலுக்கு அதிக போட்டிகள் கிடையாது. பெரும்பாலான வடமாநில தயாரிப்பாளர்கள்தான் இங்குள்ள மார்க்கெட்டை கையில்வைத்துள்ளனர். எனவே, உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினாலே வெற்றி கிடைத்துவிடும். முக்கியமாக, ரயில்வே கேன்டீன், பேருந்து நிறுத்த ஹோட்டல்கள் மற்றும் பெரிய பெரிய உணவு விடுதிகளுக்கு  நேரடியாக சப்ளை செய்யலாம்.  
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம்... இவற்றில் ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகையிலிருந்து மானியம் பெற வாய்ப்பு உண்டு.
நடைமுறை மூலதனம் மாதத்துக்கு 7 - 10 லட்சம் ரூபாய். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.



திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
நாள் ஒன்றுக்கு 80 கிலோ வரை  உற்பத்தி செய்யமுடியும். இதற்கு 100 கிலோ மூலப்பொருள்  தேவைப்படும். உற்பத்தி செய்யும்போது 20 சதவிகிதம் கழிவு போய்விடும். 1 கிலோ மூலப்பொருள் விலை 200 முதல் கிடைக்கும். கழிவுபோக கிலோவுக்கு 225 நடுத்தர சைஸ் பாக்ஸ்கள் கிடைக்கும். இந்த பாக்ஸ்களை 1,500 எண்ணிக்கையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒரு மாதத்துக்கு (25 வேலை நாட்கள்) மூலப்பொருட்கள் செலவு 100X200X25=5,00,000 ரூபாயாக இருக்கும்.
எங்கு கிடைக்கும்?
இதற்கான மூலப்பொருளான அலுமினியம் ரோல் ஜிண்டால் அலுமினியம் (Jindal Aluminium), குஜராத் ஃபாயில்ஸ் (Gujarat Foils) மற்றும் டால்கோ (Talco) போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கும். அருகில் உள்ள விற்பனை மையங் களில் இருந்து வாங்கிக்கொள்ள முடியும். மாதத்துக்கு 2.5 டன் தேவை என்கிறபோது, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தோராயமாக 20 ஆயிரம் செலவாகும்.
250மி பெட்டிக்கு 40 மைக்ரான் அளவு ரோலும், 450மி பெட்டிக்கு 42 மைக்ரான், 750மி பெட்டிக்கு 45 மைக்ரான் அளவில் மூலப்பொருட்கள் வாங்கவேண்டும். தேவையான டை-யை இயந்திரத்தில் பொருத்தி, இந்த அலுமினிய ரோல்களை உட்செலுத்தினால் அலுமினியம் பாக்ஸ்களாக தனித்தனியே வந்துவிடும்.இவற்றை பாலிதீன் கவர்களில் அடைத்து, பேக்கிங் செய்யவேண்டும்.


விற்பனை வரவு!
ஒரு பாக்ஸ் ரூ.1.60 வரை விற்க முடியும். 80 கிலோ மூலப்பொருளுக்கு 18,000 பாக்ஸ்கள் வரை ஒருநாளில் உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால், ஒரு மாத விற்பனை வரவு (18,000X1.60X25= 7,20,000) ஆக இருக்கும்.
கழிவு மூலப்பொருளை கிலோ ரூ.60 முதல் 70 வரை திரும்ப விற்க முடியும். அந்தவகையில் மாத வரவு 30,000 (20X60X25 = 30,000).
செலவுகள்!
அலுமினிய பெட்டிகளை பாலிதீன் கவரில் அடைத்து, அட்டைப் பெட்டியில் பேக் செய்ய ஒரு பாக்ஸுக்கு 10 காசுகள் செலவாகும். இதன்படி 1,500 ஃபாயில்கள் என்கிற கணக்கில் அட்டைப்பெட்டியில் அடைப்பதற்கு  ஒரு மாதத்துக்கு பேக்கிங் செலவு ரூ.45,000.  
இந்தத் தொழிலை செய்வதற்கான பயிற்சியை சென்னையில் உள்ள எம்எஸ்எம்இ மூலமாக பெற முடியும்.

(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம், சென்னை. (MSME Development Institute).
ஆர்டர் தொடர்ச்சியாக கிடைக்கிறது!
சிவராஜ் மோகன்குமார், எக்கோபாய் அலுமினியம் இண்டஸ்ட்ரி, திருப்பூர்.
''நான் எம்பிஏ முடித்திருக்கிறேன். சொந்தமாக தொழில் தொடங்குவதில்தான் ஆர்வம் இருந்தது. இந்தத் தொழிலுக்குத் தேவை இருப்பதை அறிந்து இதில் இறங்கினேன். வெளிமாநிலங்களில் அதிக முதலீடுகளில் மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்வதால் இங்கு குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள்.
ஆனால், நான் உள்ளூர் கடைகள் மற்றும் ரயில்வே கேன்டீனில் ஆர்டர் வாங்கி சப்ளை செய்கிறேன். பெரிய அளவில் முதலீடுகள் போட்டால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது."  

3 comments:

  1. Can you guide me in this regard?

    ReplyDelete
  2. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete