A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Friday, 27 June 2014
சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.
ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர் வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.
வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.
தயாரிப்பது எப்படி?
கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.
தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment