Tuesday, 19 February 2013

தொழில் வரி வசூல்

தொழில் வரி வசூல்

சொத்து வரி

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.100ன் படி, நியாய வாடகை மதிப்பின் அடிப்படையில் அரையாண்டு சொத்துவரி விதிக்கப்படுகிறது. வாடகை மதிப்பானது, அடிப்படைக் கட்டணம் மற்றும் பரப்பளவு மற்றும் குடியிருப்பு/குடியிருப்பு அல்லாத பகுதி என்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வரி வசூல் செய்யும் முறைகள்

காலத்திற்கேற்றாற்போல் பிளாக் பெரி மற்றும் கையடக்கக் கருவி போன்ற நவீன சாதனங்களைக் கையாண்டும், வரி செலுத்துவோர் சென்னை மாநகராட்சிக்கு எளிதில் வரிகளை செலுத்திட ஆன் லைன் பேமன்ட், இசிஎஸ் பேமன்ட், பெசிலிடேஷன் கவுன்ட்டர் போன்ற ஏற்பாடுகளை செய்தும் சொத்து வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது.

தொழில் வரி

தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தொழில் வரி செலுத்துவோரின் வகைப்பாடு பின்வருமாறு
  • தனி நபர்கள்
  • தனியார் நிறுவனங்கள்
  • மத்திய அரசின் ஊழியர்கள்
  • மாநில அரசின் ஊழியர்கள்
  • சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்விவரங்களைப் பதிந்த பின்னர் சென்னை மாநகராட்சியால் அவர்களுக்குத் தனியே தொழில் வரியினை செலுத்தும் வசதிக்காக தனியே எண் ஒன்று வழங்கப்படும்.
    அரையாண்டு வருமானம் மற்றும் அரையாண்டு தொழில் வரி விவரம் பின்வருமாறு
வரிசை எண்.அரையாண்டு வருவாய் அரையாண்டு தொழில் வரி
1ரூ.21,000/- வரைஏதுமில்லை
2ரூ.21,001,/- முதல் ரூ.30,000/- வரைரூ.100/-
3ரூ. 30,001/- முதல் ரூ.45,000/- வரைரூ.235/-
4.ரூ.45,001/- முதல் ரூ.60,000/- வரைரூ.510/-
5ரூ.60,001/- முதல் ரூ.75,000/- வரைரூ.760/-
6ரூ. 75,001/-க்கு மேல்

கம்பெனி வரி

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.110ன்படி கம்பெனி வரி வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919 பிரிவு எண். 110ன் படி கம்பெனி வரி வசூலிக்கப்படுகிறது :
முதலீடு அரையாண்டு வரி (ரூபாயில்)
அ.ஒரு லட்சத்திற்குள் 100
ஆ.ஒரு லட்சத்திற்கு மேல் இரண்டு லட்சத்திற்குள் 200
இ.இரண்டு லட்சத்திற்கு மேல் மூன்று லட்சத்திற்குள் 300
ஈ.மூன்று லட்சத்திற்கு மேல் ஐந்து லட்சத்திற்குள் 400
உ.ஐந்து லட்சத்திற்கு மேல் பத்து லட்சத்திற்குள் 500
ஊ.பத்து லட்சத்திற்கு மேல் 1000
நிறுவனத்தின் தலைமை/முதன்மை அலுவலகம் சென்னை மாநகர எல்லைக்குள் இல்லாமல் இருப்பின் ஈட்டும் வருவாயின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கம்பெனி வரி செலுத்திடவேண்டும்
முதலீடு அரையாண்டு வரி (ரூபாயில்)
ஐந்தாயிரத்திற்கு மிகாமல25
ஐந்தாயிரத்திற்கு மேல் பத்தாயிரத்திற்கு மிகாமல் 50
பத்தாயிரத்திற்கு மேல் இருபதாயிரத்திற்கு மிகாமல் 100
இருபதாயிரத்திற்கு மேல் 1000க்கு மிகாமல்

தொழில் உரிமம் :

எளிமையான முறையில் தொழில் உரிமம் பெறுதல் வியாபாரிகளுக்கு தொழில் உரிமம் வழங்கும் நிகழ்வில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட கடுமையான முறையை மாற்றியமைத்து, மிகவும் எளிமையாக்கப்பட்டு, தொழில் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தங்களது பெயர், தொழில் விவரம், தொழில் நடத்துமிடத்தின் முகவரி, ரூ.20/= முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்கான உறுதி மொழி ஆகிவற்றினை அளித்தால், விரைவில் தொழில் உரிமம் வழங்கப்படும்.

சொத்துவரி செலுத்தல் :

சென்னை மாநகராட்சியானது கீழ்க்கண்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது
அ) சொத்துவரி பெயர் மாற்றம்
ஆ) உட்பிரிவு பெயர் மாற்றம்
இ) தொழில் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம்.
மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களைக் கணிணி வழியாக விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே இன்ட்டர்நெட் மூலம் இலவசமாக பெற்றிடவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரையாண்டு துவக்கத்தின் 15 நாட்களுக்குள் சொத்துவரியினை செலுத்திட வேண்டும். சொத்துவரியினை இணைய தளத்தின் மூலமாகவோ, மண்டல அலுவலகத்தில் உள்ள கணிணி மையங்கள் மூலமாகவோ, வரி வசூலிப்பாளர் மூலமாகவோ சென்னை மாநகராட்சிக்கு செலுத்திடலாம்.
வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலை வாயிலாகவோ அல்லது கேட்பு காசோலை வாயிலாகவோ சொத்துவரியினை செலுத்திடலாம்.

No comments:

Post a Comment