Monday, 22 July 2013

தொழில் வளர்க்க உதவுகிறோம்! | Tamil nadu Government Loan Scheme For Small Business

Tamil nadu Government Loan Scheme For Small Business


தொழில் வளர்க்க உதவுகிறோம்!

தொழில் வளர்க்க உதவுகிறோம்!
தொழில்
லட்சுமி வெங்கடேசன்... தொழில் தொடங்கும் ஆசையில் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள ‘பாரத் யுவசக்தி டிரஸ்ட்’ (பி.ஒய்.எஸ்.டி.) என்ற அகில இந்திய தன்னார்வ அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர். இதன் தற்போதைய தலைவர் ராகுல் பஜாஜ். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) நட்புடன் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பி.ஒய்.எஸ்.டி! டெல்லியில் வசிக்கும் லட்சுமி வெங்கடேசன் சமீபத்தில் சொந்த மண் சென்னைக்கு வந்திருந்தார். கிண்டி பகுதியில் வேளச்சேரி சாலையில் உள்ள சி.ஐ.ஐ. அலுவலகத்தில்தான் இந்த அமைப்பின் செயல்பாடுகளும் நடக்கின்றன. அந்த அலுவலகத்தில் சந்தித்த போது...


‘‘வருங்காலத்தில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைவிட சுயதொழில் தொடங்கத்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதை நோக்கித்தான் எங்கள் அமைப்பின் திட்டங்கள் இருக்கின்றன’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘வங்கிகள், சிறு தொழில் சேவை அமைப்புகள் எல்லாம் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கி வருகின்றன. அதிலிருந்து உங்கள் அமைப்பு எப்படி மாறுபடுகிறது?’’
‘‘நாங்கள் வெறுமனே ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளைப் பார்த்துவிட்டு கடன்களை வழங்குவதில்லை. ஒருவர் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் எங்களை அணுகினால், அவருக்கு அந்தத் தொழில் பற்றிய தெளிவு, ஆர்வத்தையும் ஆராய்கிறோம். அதில் திருப்தி ஏற்பட்டால் அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். அவரது தொழில் தேவையைப் பொறுத்து அதிக பட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் வழங்குவோம்.
அதோடு எங்கள் கடமை முடிவதில்லை... அவருடைய தொழில் துறையில் அனுபவம் மிக்க ஒரு ஆலோசகரை நியமிப்போம். அவருக்கு ‘மென்டார்’ என்று பெயர். ஐ.ஐ.எம். போன்ற மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில்தான் இதுபோன்ற அணுகுமுறை இருக்கிறது. உற்பத்தி பொருளின் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிவது, தொழில் மேம்பாட்டுக்குத் தேவையான பிற வெளியுலகத் தொடர்புகளை உருவாக்கித் தருவது, தேவைப் பட்டால் தொழில்முனைவோர் மேலும் பயிற்சி பெறச் சரியான நிறுவனத்தை அடையாளம் காண உதவுவது என்று இந்த மென்டார் அந்த தொழில் முனைவோருக்குத் தேவைப்படும் எல்லாவித ஆலோசனைகளையும் வழங்குவார்.
பணத்தேவை ஒருபக்க மென்றால், வெற்றிக்கான இந்த வழிகாட்டுதலும் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும். கடந்த காலங்களில் கடன் பெற்று தொழில் தொடங்கியவர்களில் 95% தொழில் முனைவோரிடம் இருந்து நாங்கள் கடன்தொகையைத் திரும்பப் பெற முடிந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்!’’
‘‘இந்த மென்டார்கள் யார்..? அவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’’
‘‘நடுத்தர அல்லது சிறு தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துபவர்கள் (75%), கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றும் அனுபவம் பெற்றவர்கள் (15%), புரொஃபஷனல் கல்வித் தகுதியுடன் பல்வேறு சேவைத் தொழில்களில் பணியாற்றுபவர்கள் (10%) போன்றோர்தான் மென்டார்களாக இருக்கிறார்கள். இவர்களின் பணி, ஒரு சேவை போலதான். வளர்ந்துவரும் இளைய தொழிலதிபர்களுக்கு உதவும் திருப்தி, இதன்மூலம் பெரிய தொழிலதிபர்களுடன் ஏற்படும் நெருக்கம் இதெல்லாம்தான் மென்டார்களுக்குக் கிடைக்கும் சிறு பலன்கள்.
தற்போது எங்களிடம் 3,000 பேர் மென்டார்களாக இருக்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டில் இந்த எண்ணிக்கையை முப்பதாயிரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.’’



இந்த பக்கத்தில் கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் பெயர் மற்றும் மாவட்டம், உங்கள் மெயில்   ஐடியை பதிவு செய்து , உங்கள் மாவட்டத்தில் சிறு தொழில் கடன் வழங்க உதவும் அமைப்பை உங்கள் மெயில்  ஐடி யில் பெற வேண்டுகிறோம் .

To Know Business Loan Details in Your District Please Comment Below in Comment Box.
‘‘உங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?’’
‘‘எங்களிடம் கடன் வாங்கித் தொழிலைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்காக கூடுதல் கடன் பெற நினைக்கும் போது வங்கிகளில் பல சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில், ‘பி.ஒய்.எஸ்.டி. குரோத் ஃபண்ட்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். அதற்காக உலக வங்கியின் துணை அமைப்பான ‘இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனி’டம் (ஐ.எஃப்.சி.) 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 13.5 கோடி ரூபாய்) கடனாகப் பெற இருக்கிறோம். ஆரம்பத்தில் எங்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்ற பலர், இன்று பத்து லட்சத்தைத் தாண்டி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் சின்ன டெய்லராக தொழிலைத் தொடங்கி, இன்று பெரிய தொழில் நிறுவனங்கள் பலவற்றுக்கு யூனிஃபார்ம்கள் தைத்துக் கொடுக்கும் ராஜா என்பவர் எங்களிடம் உதவி பெற்று தொழிலைத் தொடங்கியவர். இப்போது ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் அளவுக்குத் தன் தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறார். அவர் போன்ற பலர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அளவில் சென்னை, ஹைதராபாத், புனே போன்ற நகரங்கள், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சில கிராமப்புற பகுதிகள் என்று ஆறு இடங்களில் எங்கள் அமைப்பு சேவை செய்கிறது.?கூடிய விரைவில் இந்தியா முழுக்கப் பரவலாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் ஒரு அம்சம்தான் 30 ஆயிரம் மென்டார்கள் நியமனம். அதோடு பிஸினஸ் ஐடியா போட்டிகளை நடத்தி, அதன் அடிப்படையிலும் கடன் வசதி, மென்டார் நியமனம் போன்றவற்றைச்செய்யப் போகிறோம். சமீபத்தில் காஞ்சி புரத்தில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை நடத்தி ஆயிரம் ஐடியாக்களைப் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறது’’ என்று முடித்தார்.
அட்டைப் பெட்டி செய்யும் தொழிலில் ஆரம்பித்து, சிப்ஸ் போன்ற உணவுப் பொருள் வரை சகல பொருட்களின் உற்பத்திக்கும் இவர்கள் கடன் தருகிறார்கள். கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
திறமை இருந்தும் திசை தெரியாமல் திகைத்து நிற்பவர்களுக்கு வெற்றித்திசை காட்டுகிற பி.ஒய்.எஸ்.டி.-யைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!




இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!

பி.ஒய்.எஸ்.டி. பின்னணி!
ங்கிலாந்தில் இருந்து கிடைத்த திட்டம் இது.
மார்கரெட் தாட்சர் இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரத்தில் அங்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. அப்போது, அந்த நாட்டு இளைஞர்கள் இளவரசர் சார்லஸை சந்தித்து, ‘நாங்கள் வேலை தேடுவதைவிட தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு சரியான வழிகாட்டிகள் இல்லை. அதற்கு நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்என்று கோரிக்கை வைத்தனர். இந்த யோசனை சார்லஸுக்கு பிடித்துப் போக, இங்கிலாந்து தொழிலதிபர்களை வைத்து, ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் யூத் பிஸினஸ் டிரஸ்ட்என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இந்த டிரஸ்ட் உருவானபோது, லண்டனில் இருந்தார் லட்சுமி. இந்தியா திரும்பியதும், அதே போன்ற திட்டத்தை இங்கும் செயல்படுத்த விரும்பினார். ஜே.ஆர்.டி.டாடா, ஹெச்.பி.நந்தா போன்ற ஜாம்பவான்கள் பலரும் லட்சுமிக்கு ஆதரவுக்கரம் நீட்ட... 1991-ம் ஆண்டு டெல்லியில் பி.ஒய்.எஸ்.டி. உருவானது. இந்த அமைப்பின் முதல் தலைவராக தொடங்கியபோது ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். அமைப்பில் .சி.முத்தையா, சுரேஷ் கிருஷ்ணா என்று நம்மவர்களும் டிரஸ்டிகளாக இருந்திருக்கிறார்கள்.
பி.ஒய்.எஸ்.டி. முயற்சியால் இன்று வரை சுமார் 1,000 புதிய தொழிலதிபர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பி.ஒய்.எஸ்.டி. இந்தியாவில் மிகச்சிறப்பாக பணியாற்றியிருப்பதாக கருதி சீனா, நேபாளம், பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் இந்த முயற்சியைப்? பரிசோதிக்க ஆரம்பித்துள்ளன.