A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
Saturday, 7 November 2015
முயல் வளர்ப்பு muyal valarpu
முயல் வளர்ப்பு muyal valarpu Muyal Valarpu | Rabbit Farming | Muraigal In Tamil | Pannai | Kuttigal Virpanai | Kutti For Sale In Tamilnadu | Chennai
முயல் வளர்ப்பு muyal valarpu Muyal Valarpu | Rabbit Farming | Muraigal In Tamil | Pannai | Kuttigal Virpanai | Kutti For Sale In Tamilnadu | Chennai
முயல் வளர்ப்பு முறைகள் | பயிற்சி | வளர்ப்பது எப்படி | குட்டிகள் | கூண்டு | பண்ணை | விற்பனை | வளர்ப்பு கூண்டு
Muyal Valarpu | Rabbit Farming | Muraigal In Tamil | Pannai | Kuttigal Virpanai | Kutti For Sale In Tamilnadu | Chennai
விவசாய உபதொழில்களில் முக்கியமானது கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து லாபம் பார்த்து வரும் விவசாயிகள் அநேகம் பேர் உள்ளனர். அவற்றில் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் பண்ணைத் தொழிலில் முயல் வளர்ப்பும் அடங்கும். தற்போது, முயல் வளர்ப்பும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்... முயல் வளர்த்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள வேடல் கிராமத்தை சேர்ந்த சுந்தரகாளத்தி.
*3 மாதங்களுக்கு 1 ஈற்று
*ஒரு ஈற்றுக்கு 8 குட்டிகள்
*3 மாதத்தில் 2 கிலோ எடை
*உயிர் எடைக்கு கிலோ 180 ரூபாய்
ஒரு சிறிய பண்ணை அமைக்க
ஒரு யூனிட் ஹைபிரிட் தாய் முயல் [ 7 பெண் தாய் முயல் , 3 ஆண் முயல் ] விலை ரூ.9,000
வீட்டில் முயல் வளர்க்க
ஒரு ஜோடி (ஓரு ஆண் ,ஒரு தாய் பெண் முயல்) தேவை என்றால்
தமிழகம் முழுவதும் SETC பஸ் மூலம் அட்டை பெட்டியில் அனுப்பப்படும்.
*நாட்டு முயல்கள் 1 முதல் 3 குட்டிகள் வரை ஈனும் .
*ஹைபிரிட் முயல்கள் 5 முதல் 8 குட்டிகள் வரை ஈனும் .
*ஹைபிரிட் முயல்கள் 5 முதல் 8 குட்டிகள் வரை ஈனும் .
** 3 மாத ஹைபிரிட் குட்டிகள் (ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.1200
*சினை பருவ ஹைபிரிட் தாய் முயல் (ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.1900
*எங்களிடம் நாட்டு முயல்களும் விற்பனைக்கு உள்ளது உள்ளது .
Cash on Delivery Option Available.
முயலை ஒப்படைத்த பிறகு பணம் கொடுத்தால் போதும்.
வளர்ந்த முயல்களை கமிசின் அடிப்படையில் விற்கும் வசதி உள்ளது.
பண்ணை அமைந்துள்ள இடங்கள்
1)தருமபுரி ,பாரதிபுரம்
2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை
3)ஈரோடு,பள்ளிபாளையம் .
*இந்த பதிவை படிப்பவர்களிடத்தில் முயல் இருந்தால் உயிர் எடை
ரூ.180 - ரூ.200 க்கு பெற்றுக்கொள்ளப்படும் .
*100 முயல்களுக்கு மேல் இருந்தால் உங்கள் இடத்தில் வந்து பெற்றுக்கொள்ளப்படும் .*
முயல் வளர்ப்பு புக் தேவைப்பட்டால் புக் அனுப்பப்படும்
ரூ.100
மூன்று மாதங்களில் 3 கிலோ!
வலை கவனம்!
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.
ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
ஆண்டுக்கு 8 முறை குட்டி!
பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.
ஆண்டுக்கு 210 முயல்கள்!
5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட விற்க முடியும் என்றார்.
இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.
முயல் கறியில் உள்ள சத்துக்கள்!
10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
| ||
விவரம்
|
செலவு
|
வரவு
|
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு) | ||
தாய் முயல் |
10,000
| |
கூண்டு |
8,000
| |
மொத்தம் |
18,000
| |
நடைமுறைச் செலவுகள் | ||
அடர் தீவனம் |
44,900
| |
பசுந்தீவனம் |
2,600
| |
மருத்துவச் செலவு |
5,300
| |
முயல் விற்பனை மூலம் வரவு |
73,500
| |
மொத்தம் |
52,800
|
73,500
|
நிகர லாபம் |
20,700
|
அப்போ நெசவு... இப்போ முயல்!
“எனக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற பிள்ளையார் பாளையம். பரம்பரை, பரம்பரையா நெசவுதான் எங்க குடும்பத் தொழில். ஏழு வயசுல இருந்து நெசவுத் தொழில் செய்துட்டு இருக்கேன். நெசவுத்தொழில் முன்ன மாதிரி இல்லை. அதுல வர்ற வருமானம் போதாததால வேற தொழில் ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன். நண்பர்கள்கிட்ட பேசினப்போ, முயல் வளர்ப்பு சொன்னாங்க. உடனே, ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்துல முயல் வளர்ப்பு குறித்து பயிற்சி எடுத்தேன். ஒரு நண்பர்கிட்ட இருந்து ரெண்டு முயல்களை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கொஞ்சம் அனுபவம் கிடைக்கவும் 96-ம் வருஷம் ஐந்து முயல்களை வைச்சு பண்ணை ஆரம்பிச்சேன். அப்புறம் படிப்படியா முயல்களைப் பெருக்கிட்டேன்.
பண்ணையைப் பெருக்குனதுக் கப்பறமும் நான் பயிற்சிகள்ல கலந்துக்கிறதை நிறுத்தலை. ஒருமுறை, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்துல சந்தை வாய்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்து தெரிஞ்சுக்குறதுக்காகப் போனேன். அங்க இருந்த பேராசியர்கள் டாக்டர்.குமரவேல் சாரும், டாக்டர் கரு.பசுபதி சாரும் என்னோட ஆர்வத்தைப் பார்த்து ரொம்பவே உதவி பண்ணுனாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையிலதான் வெற்றிகரமா பண்ணையை நடத்த முடியுது” என்று முன்னுரை கொடுத்த சுந்தரகாளத்தி, தொடர்ந்தார்.
ஆரம்பிக்கும்போது 5 இப்போ 83!
“ஆரம்பத்தில் நான்கு பெண் முயல்கள், ஒரு ஆண்முயல் வைச்சுதான் ஆரம்பிச்சேன். அப்பறம் முயல்கள் பெருகப் பெருக... 600 சதுர அடியில தகர கொட்டகை அமைச்சிட்டேன். 2 அடிக்கு 2 அடி அளவுல 11 இரும்பு கூண்டுகள் இருக்கு. ஒவ்வொரு கூண்டுலயும் 4 அறைகள் இருக்கும். அதுலதான் முயல்களை வளர்க்கிறேன். இப்போ எங்கிட்ட 27 பெண் முயல்கள், 9 ஆண் முயல்கள்னு மொத்தம் 36 பெரிய முயல்கள் இருக்கு. தவிர, 47 குட்டி முயல்களும் இருக்குது. நியூசிலாந்து ஒயிட், சோவியத் சின்சில்லா, ஒயிட் ஜெயன்ட், க்ரே ஜெயன்ட், நியூசிலாந்து ஒயிட் அண்ட் பிளாக், டச்சு... னு 7 வகை முயல்களை வளர்க்கிறேன்” என்ற சுந்தரகாளத்தி வருமானம் குறித்துச் சொன்னார்.
மாதம் 60 குட்டிகள்!
“ஒரு முயல் ஒரு ஈத்துக்கு 6 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். சரியான பருவத்துல இணை சேர்த்துட்டா 75 நாளுக்கு ஒரு முறை குட்டிகள் கிடைச்சுட்டே இருக்கும். ஆனா, பருவம் வர்றதுக்கும், இணை சேர்றதுக்கும் சில நாள் முன்னபின்ன ஆகலாம். அதனால ஒரு சுற்றுக்கு மூணு மாசம்னு கணக்கு வெச்சுக்கலாம். என்கிட்ட இருக்குற 27 தாய் முயல்கள் மூலமா சராசரியா மாசத்துக்கு 60 குட்டிகள் கிடைச்சுட்டுருக்கு. குட்டிகளை 3 மாசம் வளர்த்து விற்பனை செய்வேன். 3 மாசத்துல ஓவ்வொரு குட்டியும் சராசரியா 2 கிலோ எடை வந்துடும். குட்டிகள் வளர்றப்பவே... மந்தமா இருக்குற குட்டிகளை இறைச்சிக்குனும், துறுதுறுனு இருக்குற குட்டிகளை வளர்ப்புக்குனும் பிரிச்சு வெச்சுடுவேன். பெரும்பாலும் உயிர் எடைக்கணக்குலதான் விற்பனை செய்றேன். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய்னு விலை கிடைக்கும். 60 குட்டிகள் 120 கிலோ எடை இருக்கும். அதை விற்பனை செய்றது மூலமா மாசம் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பசுந்தீவனம், அடர் தீவனம், போக்குவரத்து, சத்து டானிக், மருந்துகள்...னு எல்லாச் செலவும் போக 18 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். இறைச்சியா விற்பனை செய்தா இன்னமும் லாபம் கூடும்” என்ற சுந்தரகாளத்தி நிறைவாக,
குறைந்த இடமே போதும்!
“முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவுதான். வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அதுல முயல வளர்த்து நல்ல லாபம் எடுக்க முடியும். என் நண்பர்கள் பல பேர் முயல் வளர்க்கிறாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த தொழிலை செய்றதால வெற்றிகரமா செய்ய முடியுது. முயல் வளர்ப்புல நல்ல லாபம் எடுக்க முடியுங்கிறதுக்கு நாங்கள்தான் உதாரணம்.” முயல் குட்டிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்த படியே சொன்னார்.
காலையில் பசுந்தீவனம், மாலையில் அடர்தீவனம்!
காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 10 மணியளவில்... முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்.... என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.
கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ, உப்பு அரை கிலோ எடுத்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணியளவில் இந்த அடர் தீவனத்தை ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் குடிக்கத் தண்ணீரையும் வைக்க வேண்டும்.
கொட்டகை கவனம்!
முயல்களுக்கான கொட்டகைகளை காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. கொட்டகைக்குள் வெளிச்சம் குறைவாக இருக்குமாறு அமைக்க வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைத்தால் வெயில் காலத்தில் தகரக்கூரை மீது தென்னை ஓலைகளை பரப்பி வைக்கலாம்.
மருத்துவ குணமும் உண்டு!
முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிக புரதமும் உள்ளன. அதனால், ஆரோக்கியத்துக்கு ஏற்ற இறைச்சி இது. முயல் இறைச்சிக்கு குடல்புண், மலச்சிக்கல் ஆகியவற்றைத் தீர்க்கும் குணமுண்டு. முயல் இறைச்சியில் சோடியம் குறைவாக உள்ளதால், இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது.
ஆண் முயல்களை பிரித்து வைக்க வேண்டும்!
6 மாத வயதில் பெண் முயல் பருவத்துக்கு வரும். 8 மாத வயதில் ஆண் முயல் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேரும் பருவத்துக்கு வந்து விட்டால்... மூலையில் வலை தோண்டுவது போல கால்களால் பறிக்கும். அமைதியில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகள் மூலம் கண்டுபிடித்து இணை சேர்க்கலாம்.
பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு இரண்டு நாட்களில் பிரித்து விட வேண்டும். இணை சேரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆண் முயல்களைத் தனியாக பிரித்துதான் வைக்க வேண்டும். இணை சேர்ந்த 28-ம் நாளில் இருந்து 30-ம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டி ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயல் தன் ரோமங்களை உதிர்க்க ஆரம்பிக்கும். அந்த ரோமங்களை குவித்து அதன் மீதுதான் குட்டி ஈனும். இந்த அறிகுறியை வைத்து குட்டி ஈனுவதைக் கண்டுபிடிக்க முடியும்.
எட்டு குட்டிகளுக்கும் அதிகமாகப் பிறந்தால், நாம்தான் ஒவ்வொரு குட்டியாக எடுத்து பாலூட்ட வேண்டும். குட்டிகள் 12-ம் நாள் கண் திறக்கும். அதுவரை ஒரு பெட்டிக்குள் முயலின் ரோமங்களை வைத்து மெத்தை போன்று அமைத்து குட்டிகளை அதன் மீது படுக்க வைக்க வேண்டும். குட்டிகளுக்கு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறந்த 22-ம் நாள் வரை தாய் முயல், குட்டிகளுக்குப் பால் தரும். அதன்பிறகு குட்டிகளே இலைகளை உண்ண ஆரம்பித்து விடும். 45-ம் நாளில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து விட வேண்டும். அதன்பிறகு தாய் முயலை மீண்டும் இணை சேர்க்கலாம். நான்கு மாத வயதில்தான் பாலினம் கண்டுபிடிக்க முடியும். அந்த சமயத்தில் ஆண், பெண் முயல்களை தனித்தனியாகப் பிரித்து கூண்டுகளில் அடைக்க வேண்டும்.
காதைப்பிடித்து தூக்கக் கூடாது.
முயல்களைப் பெரும்பாலும் காதைப்பிடித்துதான் தூக்குவார்கள். ஆனால், அது தவறு. இடுப்பைப் பிடித்துதான் தூக்க வேண்டும். முயலை அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையில்லாமல் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
குடற்புழு நீக்கம் அவசியம்!
முயல்களுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை... மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தைக் கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முயல்களுக்கு சொறி நோய் தாக்கினால், வேப்பெண்ணெய் தடவ வேண்டும். வேறு நோய்கள் பெரும்பாலும் வராது.
சுத்தம் முக்கியம்!
கொட்டகையில் சிதறிக்கிடக்கும் தீவனங்கள், கழிவுகளை தினமும் தவறாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும், தண்ணீர் வைக்கும் போதும் கிண்ணங்களை சுத்தமாகக் கழுவித்தான் வைக்க வேண்டும். தினமும் முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
Rabbit farming in tamil | rabbit farming business plan | want information on rabbit farming| rabbit farming videos | rabbit farming in kerala | rabbit farming pdf |rabbit farming for meat
investment for keeping rabbit farm | start rabbit farm India
Rabbit farming in tamil | rabbit farming business plan | want information on rabbit farming| rabbit farming videos | rabbit farming in kerala | rabbit farming pdf |rabbit farming for meat
investment for keeping rabbit farm | start rabbit farm India
Friday, 6 November 2015
Suya Siru Kai Kudisai Tholil CD / DVD For Sale in Chennai Tamil Nadu | சுய தொழில் சிடிகள் விற்பனைக்கு
சுயதொழில் CD/DVD
சுய தொழில்கள்
1.கம்ப்யூட்டர் சாம்பிராணி,
2.மெழுகுவர்த்தி,
3.வாஷிங் பவுடர்,
4.கிளீனிங் பவுடர்,
5.வாசனை சொட்டு நீலம்,
6.பினாயில்,
7.சோப் ஆயில்,
8.பால் குளியல் சோப்,
9.ஷாம்பு,
10.ஓம வாட்டர்,
11.பேனா மை
3.வாஷிங் பவுடர்,
4.கிளீனிங் பவுடர்,
5.வாசனை சொட்டு நீலம்,
6.பினாயில்,
7.சோப் ஆயில்,
8.பால் குளியல் சோப்,
9.ஷாம்பு,
10.ஓம வாட்டர்,
11.பேனா மை
"11-CD/DVD யின் விலை
ரூ. 900 மட்டுமே - தள்ளுபடிவிலையில்." + (ரூ.50 கொரியர் கட்டணம்தனி)
★★★★★★★★★★★★★
"தனி CD/DVD-யின்
விலை ரூ.250+50 மட்டுமே
இதில்
1)தொழில் அறிமுகம்,
2)செய்முறை விளக்கம்,
3)பயன்பாடு,
4)வெற்றியாளர்களின் பேட்டியுடன்
5)மூலப்பொருட்கள் கிடைக்கும் முகவரியும்,
6) இயந்திரம் கிடைக்கும் முகவரியும் இருக்கிறது.
நீங்கள் சுயதொழிலாகவும் செய்யலாம்...
(அல்லது)
உங்கள் வீட்டுத் தேவைகளுக்கு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்
*தொழிலை ஆரம்பிக்க ரூ.500 முதலீடே போதுமானது...
CD/DVD தேவைப்படுவோர் ,தீபம் கிரேஷன்ஸ் .
270,பாப்பம்மாள் தெரு ,அம்மை நாயக்கனூர் ,நிலக்கோட்டை தாலுக்கா ,திண்டுக்கல் மாவட்டம் ,
, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்'
--------------------------------------------
270,பாப்பம்மாள் தெரு ,அம்மை நாயக்கனூர் ,நிலக்கோட்டை தாலுக்கா ,திண்டுக்கல் மாவட்டம் ,
9952213485
, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்'--------------------------------------------
------------------------
Thursday, 5 November 2015
Basic Qualification for doing Suya Tholil Business in Tamilnadu Chennai
ஒரு சாதாரண சேல்ஸ்மேனில் துவங்கி வங்கி மேலாளர், ஹோட்டல் நிறுவனர், தொழில் முனைவோர் என எவ்வித நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியமான விஷயங்கள் இருக்கும். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் போது வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மற்ற வேலைகளில் இருப்பவர்களை விடச் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் கட்டாயம் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
1.திட்டமிடல்!
சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் என்ன வேலை உள்ளது, அந்த வேலைகளில் எதைக் கட்டாயம் முடிக்க வேண்டும், எந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அட்டவணைப்படுத்திக் கொள்வது அவசியம். அதாவது தன்னுடைய வேலைகளை டைரியில் அல்லது கேட்ஜட்களில் அதில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.
2. கருவிகள்
இன்றைய சூழ்நிலையில் அனைத்து வேலைகளையுமே வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால்கூடிய வெற்றி வாய்ப்பு உங்களின் கையை விட்டுப் போகக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை எப்போதுமே வைத்திருப்பது நல்லது. அதாவது லேப்டாப், செல்போன், சேல்ஸ் கிட் என தேவையானவற்றை நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. உடை!
சொந்தமாகத் தொழில் செய்யும் போது பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவலக உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங்களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் என நினைக்கத் தோன்றும். தொழில் முனைவோர் கோட், சூட் வைத்துக்கொள்ள நல்லது. சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது இதை அணிவது சிறப்பு. மேலும் அதற்கேற்ப உங்களுடைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
சொந்தமாகத் தொழில் செய்யும் போது பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவலக உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங்களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் என நினைக்கத் தோன்றும். தொழில் முனைவோர் கோட், சூட் வைத்துக்கொள்ள நல்லது. சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது இதை அணிவது சிறப்பு. மேலும் அதற்கேற்ப உங்களுடைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
4. பிசினஸ் கார்ட்ஸ்
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரும் உங்களை நினைவு வைத்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் பிசினஸ் கார்ட் வழங்குவது முக்கியம். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாகத் தொடர்பு பிசினஸ் கார்ட் அவசியம் தேவை.பிசினஸ் கார்ட் என்பது வேறு ஒன்றும் இல்லை, விசிட்டிங் கார்ட்தான்.
5. கற்பனை திறன்!
ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம்.
ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம்.
6. விடாநம்பிக்கை
தொழிலில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நஷ்டம் ஏற்படும் போது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அந்தச் சூழ்நிலையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் உங்களின் உற்பத்தி பொருளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
அதுமட்டும் இல்லாமல் உங்களின் உற்பத்தி பொருளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
7. எதிர் கால இலக்கு
தொழிலில் எப்போதுமே எதிர்கால இலக்குகளை வைத்திருக்க வேண்டும். அதாவது அடுத்த ஒருவருடத்தில் நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும். லாபம் எவ்வளவு இருக்க வேண்டும், உற்பத்தி அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே இலக்குகளைத் தீர்மானிப்பது அவசியம். இலக்குகளை அதை நோக்கிய பயணச் செய்வது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
8. சுய அறிவு..!
தொழில் குறித்து எடுக்கும் முடிவுகள் என்பது உங்களின் முடிவாக இருப்பது அவசியம். அதாவது நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலின் பேரில் எந்தவிதமான முடிவையும் எடுக்கக் கூடாது.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவு சரியாக இருக்குமா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவு சரியாக இருக்குமா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது.
Tuesday, 3 November 2015
அசைவப் பிரியர்கள்… ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். அதனால், காடைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஜப்பான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு பலர், நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன்.
காடைக் குஞ்சுப் பொறிப்பகத்தில், இன்குபேட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைச் சந்தித்தோம்.
”முன்னாடி மாற்றுமுறை வைத்தியம் செய்துக்கிட்டிருந்தேன். அதுல பெருசா வருமானம் இல்லாததால, கூடுதல் வருமானத்துக்காக ‘லவ் ஃபேர்ட்ஸ்’ வாங்கி வளர்த்து விற்பனை செய்துக்கிட்டிருந்தேன். அதுலயும் நிறைய சிக்கல்கள். இதனால வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு மாறினேன். கூடவே, கறிக்கோழியையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல மனைவிக்கு வேலை கிடைச்சு, வெளியூருக்குப் போக வேண்டி இருந்ததால, அந்தத் தொழிலையும் விட்டுட்டேன்.
கொஞ்ச நாள் கழிச்சு, எங்க ஊருக்கே மாற்றலாகி வந்து, ஈமு கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல 7 லட்சம் ரூபாய் நஷ்டமாகிடுச்சு. அதுல இருந்து மீளமுடியாம துவண்டு கிடந்தப்போதான், நண்பர் ஒருத்தர் ஜப்பான் காடை பத்திச் சொன்னார். நாமக்கல், கால்நடைக் கல்லூரியில இருந்து 50 காடைக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச முட்டைகள் மூலமா பெருக்கி, 200 தாய்க்காடைகளை உருவாக்கி, குஞ்சுகளை எடுக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு வளர்ந்த குஞ்சுகளை எங்க பகுதியில விற்பனை செஞ்சப்போ, நல்ல வரவேற்பு… நல்ல வருமானம். இதனால, தாய்க் காடைகளோட எண்ணிக்கையை ஐநூறா அதிகரிச்சிட்டேன். இப்போ 350 பெட்டை, 150 ஆண் காடை வெச்சுருக்கேன். இது மூலமா நாள் ஒன்றுக்கு 250 முட்டைகள் கிடைக்குது. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, ஒரு நாள் குஞ்சாவும், 28 நாள் வளர்ந்த காடையாவும் விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கேன்” என்ற ராஜேந்திரன், வளர்ப்பு முறைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
இறப்பைத் தடுக்கும் கோலி குண்டுகள்!
‘காடை வளர்ப்புக்குக் குறைவான இடம் இருந்தாலே போதுமானது. ஆரம்பத்தில் காடையைக் கறிக்காக வளர்ப்பதுதான் நல்லது. கொஞ்சம் அனுபவம் கிடைத்த பிறகு, குஞ்சு உற்பத்தியில் இறங்கலாம். ‘நாமக்கல் கோல்ட்’ காடை ரகம், ‘நந்தனம் ஜப்பானியக் காடை’ என இரண்டு ரகங்கள் உள்ளன (இவர் நாமக்கல் காடையை வளர்க்கிறார்). ஒரு நாள் காடைக் குஞ்சுகளைத்தான் வளர்ப்புக்காக வாங்கவேண்டும். தீவனம் எடுக்க ஆரம்பித்துவிட்ட குஞ்சுகளை வாங்கினால், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கொண்டு செல்லும்போது இறப்பு விகிதம் அதிகமாகும். ஒரு நாள் குஞ்சுகளை புரூடரில் (5 அடி விட்டம், ஓரடி உயரத்துக்கு தகரத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு) விட்டு… அதன் மையத்தில், கங்கு நிரப்பிய பானையை வைத்து வெப்பமூட்ட வேண்டும். குஞ்சுகள் பானையை நோக்கி வந்தால்… நெருப்பை அப்படியே பராமரிக்கலாம். தகரத்தை நோக்கிச் சென்றால், சூடு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, நெருப்பைக் குறைக்க வேண்டும்.
முதல் ஒரு வாரத்துக்கு கடைகளில் கிடைக்கும் குஞ்சுத் தீவனத்தைக் கொடுக்கலாம். 100 குஞ்சுகளுக்கு தினமும் 150 கிராம் முதல் 250 கிராம் வரை தீவனம் தேவைப்படும். தினமும் காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து ஒரு டப்பாவில் நிரப்பி, புரூடருக்குள் வைக்கவேண்டும். காடைக் குஞ்சு தண்ணீர் டப்பாவில் விழுந்து, இறக்க வாய்ப்புள்ளதால்… முதல் இரண்டு நாட்கள் வரை தண்ணீர் டப்பாவில் கோலி குண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும். அந்த வண்ணத்தைப் பார்த்து பயந்து, குஞ்சுகள் தண்ணீரில் இறங்காது.
நோய் வாராமல் தடுக்கும் பஞ்சகவ்யா!
ஒரு வார வயதுக்குப் பிறகு குஞ்சுகளை புரூடரிலிருந்து கூண்டுகளுக்கு மாற்றலாம். கறிக்காக வளர்க்கப்படும் குஞ்சுகள் என்றால், வளரும் பருவத்தில், 100 குஞ்சுகளுக்கு 2 கிலோ வரை தினமும் தீவனம் தேவைப்படும். முட்டைக்காக வளர்ப்பதென்றால், இதைவிட குறைவாகவே தீவனம் கொடுக்கலாம். காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வீதம் பஞ்சகவ்யா கலந்து வைக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், 28 நாட்களில் இருந்து 30 நாட் களில் ஒரு காடை, 200 முதல் 220 கிராம் எடை வந்துவிடும். இந்தசமயத்தில் விற்பனை செய்யலாம். பஞ்சகவ்யா கலந்த தண்ணீரைக் கொடுக்கும்போது காடைகளுக்கு நோய்த்தாக்குதல் குறைவதுடன், கறியும் சுவையாக இருக்கும்.
6 பெட்டைக்கு 3 ஆண்!
தாய்க்காடைகள், 50-ம் நாளுக்குமேல் முட்டை இட ஆரம்பிக்கும். அதன் பிறகு, ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம் இருக்கும் கூண்டில், 6 பெட்டைக்கு, 3 ஆண் காடை என்கிற கணக்கில், அடைத்து வைக்கவேண்டும். ஒரு கிலோ தீவனத்துக்கு
50 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து கொடுக்கவேண்டும். 100 காடைகளுக்கு தினமும் 2 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு வயதுக்குப் பிறகு முட்டையிடும் தன்மை குறைவதால், ஓர் ஆண்டுக்குப் பிறகு தாய்க்காடைகளைக் கழித்து வரவேண்டும். இந்தக் காடைகளுக்கு அடைகாக்கும் தன்மை கிடையாது. அதனால், இன்குபேட்டர் மூலம்தான் பொரிக்க வைக்க வேண்டும். இன்குபேட்டரில் 17 நாட்களில் முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும்.’
மாதம் 80 ஆயிரம்!
வளர்ப்பு முறை பற்றி விளக்கிய ராஜேந்திரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார். ”350 பெட்டைகள் மூலமா நாளன்றுக்கு சராசரியா 250 முட்டைகள்னு ஒரு மாசத்துக்கு 7 ஆயிரத்து 500 முட்டைகள் கிடைக்குது. இதில் ஆயிரம் முட்டைகளை ஒரு முட்டை 2 ரூபாய் வீதம் விற்பனை செய்றதுல, 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
6 ஆயிரத்து 500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, சராசரியா 3 ஆயிரத்து 550 குஞ்சுகள் வரை கிடைக்கும். இதுல ஆயிரம் குஞ்சுகளை ஒரு நாள் குஞ்சுகளா விற்பனை செய்துடுவேன். ஒரு குஞ்சு 7 ரூபாய்னு விற்பனை செய்றதுல 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
மீதியிருக்கிற 2 ஆயிரத்து 550 குஞ்சுகளை 28 நாள் வரை வளர்த்து விற்பனை செய்றேன். இதை இறைச்சிக்காக வாங்குறாங்க. ஒரு காடை 28 ரூபாய்னு விற்பனை செய்றப்போ… 71 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கிது. ஆக மொத்தம், ஒரு மாசத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், பராமரிப்பு செலவு, மின்சாரக் கட்டணம்னு எல்லாச் செலவும்போக… மாசம் 30 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ராஜேந்திரன், செல்போன்: 97861-02973
ஜப்பானியக் காடை வளர்ப்புக்குத் தடையில்லை!
கடந்த 2011-ம் ஆண்டின் இறுதியில் வனவிலங்குகள் சட்டப்படி காடை இனங்களைக் கொல்வதோ… வேட்டையாடுவதோ… தண்டனைக்குரிய குற்றம் என மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடை விதித்தது. இது ‘ஜப்பானியக் காடை’ இனத்தை பண்ணைகளில் வளர்த்த விவசாயிகளுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தியது. இதனால், தற்போது, ஜப்பானியக் காடை ரகங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடைகள் உற்பத்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர். பாபு, ”தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை இனங்கள், வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை.
கால்நடைப் பல்கலைக்கழகம், ஜப்பானியக் காடை இனங்களை ஆராய்ச்சி மூலம் இனப்பெருக்கம் செய்து… நந்தனம் ஜப்பானிய இறைச்சிக் காடை, நாமக்கல் கோல்ட் இறைச்சிக் காடை என இரண்டு ரகங்களை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பண்ணை களில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை ரகங் களுக்கும், இந்தியக் காடுகளில் இருக்கும் காடை இனங் களுக்கும் தொடர்பு இல்லை என தேவையான விளக்கங் களையும், ஆவணங்களையும் மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் சமர்பித்தார்கள். இதையடுத்து, 2013-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையில்… கோட்நிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica) என்கிற ஜப்பானியக் காடை (Japanese quail) இனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பண்ணையாளர்கள் நம்பிக்கையுடன் காடை வளர்ப்பில் இறங்கலாம். மேலும், சந்தேகங்கள் இருந்தால், உங்கள் பகுதிகளில் இருக்கும் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களை அணுகலாம்” என்றார்.
Subscribe to:
Posts (Atom)