காளான் வளர்ப்பு

வீட்டில் இருந்ததே காளான் வளர்ப்பு பயிற்சி பெறலாம்.

[1]காளான் விதைகள் சாம்பிள் 1கிலோ , [2] CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கைபாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே

போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலைரூ.200. தேவைக்கு ,உங்கள் முகவரியை மெசேஜ் /SMS / What's Appஅனுப்பவும்

--> 9566354046 பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு,தர்மபுரி, விழுப்புரம் மற்றும் மேட்டூர். மேலும் தகவல்களுக்கு கிளிக் செய்யவும் www.kalanpannai.com

Thursday, 18 May 2017

siru suya thozhil tholil kadan bookஇன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!

சிறு தொழில் சம்பந்தமான மற்ற புத்தகங்கள் 
1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete