Tuesday 19 February 2013

தொழில் வரி வசூல்

தொழில் வரி வசூல்

சொத்து வரி

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.100ன் படி, நியாய வாடகை மதிப்பின் அடிப்படையில் அரையாண்டு சொத்துவரி விதிக்கப்படுகிறது. வாடகை மதிப்பானது, அடிப்படைக் கட்டணம் மற்றும் பரப்பளவு மற்றும் குடியிருப்பு/குடியிருப்பு அல்லாத பகுதி என்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வரி வசூல் செய்யும் முறைகள்

காலத்திற்கேற்றாற்போல் பிளாக் பெரி மற்றும் கையடக்கக் கருவி போன்ற நவீன சாதனங்களைக் கையாண்டும், வரி செலுத்துவோர் சென்னை மாநகராட்சிக்கு எளிதில் வரிகளை செலுத்திட ஆன் லைன் பேமன்ட், இசிஎஸ் பேமன்ட், பெசிலிடேஷன் கவுன்ட்டர் போன்ற ஏற்பாடுகளை செய்தும் சொத்து வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது.

தொழில் வரி

தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தொழில் வரி செலுத்துவோரின் வகைப்பாடு பின்வருமாறு
  • தனி நபர்கள்
  • தனியார் நிறுவனங்கள்
  • மத்திய அரசின் ஊழியர்கள்
  • மாநில அரசின் ஊழியர்கள்
  • சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்விவரங்களைப் பதிந்த பின்னர் சென்னை மாநகராட்சியால் அவர்களுக்குத் தனியே தொழில் வரியினை செலுத்தும் வசதிக்காக தனியே எண் ஒன்று வழங்கப்படும்.
    அரையாண்டு வருமானம் மற்றும் அரையாண்டு தொழில் வரி விவரம் பின்வருமாறு
வரிசை எண்.அரையாண்டு வருவாய் அரையாண்டு தொழில் வரி
1ரூ.21,000/- வரைஏதுமில்லை
2ரூ.21,001,/- முதல் ரூ.30,000/- வரைரூ.100/-
3ரூ. 30,001/- முதல் ரூ.45,000/- வரைரூ.235/-
4.ரூ.45,001/- முதல் ரூ.60,000/- வரைரூ.510/-
5ரூ.60,001/- முதல் ரூ.75,000/- வரைரூ.760/-
6ரூ. 75,001/-க்கு மேல்

கம்பெனி வரி

சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு எண்.110ன்படி கம்பெனி வரி வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919 பிரிவு எண். 110ன் படி கம்பெனி வரி வசூலிக்கப்படுகிறது :
முதலீடு அரையாண்டு வரி (ரூபாயில்)
அ.ஒரு லட்சத்திற்குள் 100
ஆ.ஒரு லட்சத்திற்கு மேல் இரண்டு லட்சத்திற்குள் 200
இ.இரண்டு லட்சத்திற்கு மேல் மூன்று லட்சத்திற்குள் 300
ஈ.மூன்று லட்சத்திற்கு மேல் ஐந்து லட்சத்திற்குள் 400
உ.ஐந்து லட்சத்திற்கு மேல் பத்து லட்சத்திற்குள் 500
ஊ.பத்து லட்சத்திற்கு மேல் 1000
நிறுவனத்தின் தலைமை/முதன்மை அலுவலகம் சென்னை மாநகர எல்லைக்குள் இல்லாமல் இருப்பின் ஈட்டும் வருவாயின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கம்பெனி வரி செலுத்திடவேண்டும்
முதலீடு அரையாண்டு வரி (ரூபாயில்)
ஐந்தாயிரத்திற்கு மிகாமல25
ஐந்தாயிரத்திற்கு மேல் பத்தாயிரத்திற்கு மிகாமல் 50
பத்தாயிரத்திற்கு மேல் இருபதாயிரத்திற்கு மிகாமல் 100
இருபதாயிரத்திற்கு மேல் 1000க்கு மிகாமல்

தொழில் உரிமம் :

எளிமையான முறையில் தொழில் உரிமம் பெறுதல் வியாபாரிகளுக்கு தொழில் உரிமம் வழங்கும் நிகழ்வில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட கடுமையான முறையை மாற்றியமைத்து, மிகவும் எளிமையாக்கப்பட்டு, தொழில் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தங்களது பெயர், தொழில் விவரம், தொழில் நடத்துமிடத்தின் முகவரி, ரூ.20/= முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்கான உறுதி மொழி ஆகிவற்றினை அளித்தால், விரைவில் தொழில் உரிமம் வழங்கப்படும்.

சொத்துவரி செலுத்தல் :

சென்னை மாநகராட்சியானது கீழ்க்கண்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது
அ) சொத்துவரி பெயர் மாற்றம்
ஆ) உட்பிரிவு பெயர் மாற்றம்
இ) தொழில் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம்.
மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களைக் கணிணி வழியாக விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே இன்ட்டர்நெட் மூலம் இலவசமாக பெற்றிடவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரையாண்டு துவக்கத்தின் 15 நாட்களுக்குள் சொத்துவரியினை செலுத்திட வேண்டும். சொத்துவரியினை இணைய தளத்தின் மூலமாகவோ, மண்டல அலுவலகத்தில் உள்ள கணிணி மையங்கள் மூலமாகவோ, வரி வசூலிப்பாளர் மூலமாகவோ சென்னை மாநகராட்சிக்கு செலுத்திடலாம்.
வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலை வாயிலாகவோ அல்லது கேட்பு காசோலை வாயிலாகவோ சொத்துவரியினை செலுத்திடலாம்.

Monday 18 February 2013

தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 மதுரையில் மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் புதிய தொழில்நுட்பம், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது


மேலும், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், அட்வான்ஸ்டு எக்செல் லெவல் 1, 2, மொபைல்போன், யு.பி.எஸ்., இன்வெர்டர் பழுது நீக்கும் பயிற்சி, ஆர்.ஓ., சிஸ்டம், பேப்பர் கப், காகித பொருள் தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.சுயதொழில் தொடங்குவது குறித்த இலவச கருத்தரங்கு ஜூலை 5ம் தேதி நடக்க உள்ளது.

 மேலும் விபரங்களுக்கு 96004 56495ல் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் என்.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Sunday 17 February 2013

இந்தியாவின் தொழில் வளர்ச்சி

இந்தியாவின் தொழில் வளர்ச்சி

இந்தியாவின் தொழில் வளர்ச்சி
டெல்லி: இந்தியாவின் தொழில்வளர்ச்சி படு மோசமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10.6 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி, இந்த ஆகஸ்ட் மாதம் 5.6 சதவீதமாக குறைந்து போய் விட்டது.தொழிற் பிரிவுகளிலேயே மிகவும் மோசமான வளர்ச்சியைக் கண்டிருப்பது உற்பத்திப் பிரிவுதான். இது கடந்த ஆண்டு10.6 சதவீதமாக இருந்தது.
 
 
தற்போது 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. சுரங்கப் பிரிவின் வளர்ச்சி கடந்த ஆண்டு 11 சதவீதமாக இருந்தது. தற்போது இது 7 சதவீதமாக இறங்கியுள்ளது.மின் உற்பத்திப் பிரிவின் வளர்ச்சி கடந்த 10.6 சதவீதமாக இருந்தது. தற்போது 9.6 சதவீதமாக குறைந்து நிற்கிறது.
 
அதிக அளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் பிரிவும் கூட சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இது 6.1 சதவீதமாக இருந்து இது இப்போது 1.2 சதவீதமாக இறங்கிப் போய் விட்டது.இருப்பினும் மொத்தம் உள்ள 17 தொழிற் பிரிவுகளில் 14 பிரிவுகள் சாதகமான வளர்ச்சியில் உள்ளன. இது ஆறுதல் தரும் விஷயமாகும்.
 
 

Friday 15 February 2013

தொழில் நுட்பம் Wi-Fi ஏற்படுத்தியுள்ள புதிய அச்சுறுத்தல்கள்!

தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ள புதிய அச்சுறுத்தல்கள்!

ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும் நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதள இணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்த கம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாக பரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்த விதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள் வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப் டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகி வருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலான விரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில் நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின் கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள் சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின் பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்கு இட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன் வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம் நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.