Friday 20 June 2014

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!
ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!
விற்பனையில் 15% லாபம்
''வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்' என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால்  வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.  
ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.
ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.

தயாரிக்கும் முறை  கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.


ஃபைனான்ஸ்
சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.
மூலதனம்  
இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

ஆட்கள்
முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.


இயந்திரம்
இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

வார்ப்பு அளவுகள்
கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.
4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.
4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)
6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)
8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம்
சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.

ரிஸ்க்
தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.
-பானுமதி அருணாசலம்
படங்கள்:  பா.காளிமுத்து
குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்
காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள 'உமையாம்பிகை ஹாலோ பிளாக் தயாரிப்பு யூனிட்’ உரிமையாளரான பார்வதி தன்னுடைய தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கட்டட கான்ட்ராக்டர்களே இடம் தேடிவந்து ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப சப்ளை செய்வோம். சில நேரங்களில் அவர்களே வாங்கிச் செல்வதும் உண்டு. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்துவிடுவதும் இதன் கூடுதல் சிறப்பு.  அச்சு வார்ப்புகளுக்கு ஏற்பதான் கற்கள் வரும். கவனமாக எடுத்துச் சென்று வெயிலில் காய வைக்க வேண்டியதுதான் நமது முக்கியமான வேலையே. விற்பனையைத் தனியாக கவனித்துக் கொள்கிறோம்.
சாதாரணமாக 4,000 கற்கள் தயாரிக்க தேவைப்படும் தொகை:
அவல் ஜல்லி ஒரு லோடு (3 யூனிட்) - 6,500 ரூபாய்
50 மூட்டை சிமென்ட் - (மூட்டைக்கு 280 வீதம்) - 14,000 ரூபாய்.
கிரஷர் மண் ஒரு லோடு- (3 யூனிட்) - 3,500 ரூபாய்.
மொத்தம் 24,000 ரூபாய்வரை செலவாகிறது.
ஒரு ஹாலோ பிளாக் 9.50 முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.  இயந்திரம் மூலம் மட்டுமின்றி சாதாரணமாக கைகளாலும் தயாரிக்க முடியும். இருந்தாலும் இயந்திரத்தை  உபயோகித்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், நேரம் குறையும், நமக்கும் நல்ல லாபம்தான். 80,000 ரூபாய் விலையில் இந்த இயந்திரம் கிடைக்கிறது.
இந்த தொழிலுக்கே உள்ள சிரமம் என்னவென்றால் கற்கள் மேடைக்கு வந்தவுடன் அதனை இழுப்பதுதான். கொஞ்சம் கடினமாக இருக்கும் அதை இழுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு பேராவது தேவைப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இதை குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்,  அதனால் அதிக லாபம் பார்க்கிறோம். சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்த்தால் இவ்வளவு லாபம் பார்க்க முடியாது என்றார் பார்வதி.
- ச. ஸ்ரீராம்

Pakku Mattai Plate Machine Price - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு

Pakku Mattai Plate Machine Price - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 


பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 

     



து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா.பிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.

இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில்  காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?

4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது
கடுமையாக உழைத்தேன்.

பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.

இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள விநாயக பிளாட்ஸ்  என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.



நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.


5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்

                1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
               2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines   ----- ரூ .90,000
           3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
          4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000

                     *மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும்


 ஒவ்வொரு யூனிட் பொருத்தும் அதன் உற்பத்தி திறன் மாறுபடும் 


சிறப்பம்சங்கள் 
                               *இலவச ட்ரைனிங் 
                               *ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ் 
                    *அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை                 தயாரித்து தரப்படும் .





இத்தாலிய தேனீ வளர்த்து தேன்

தேனீ வளர்த்து தேன்

    

தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
                   

    தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.தேனீ பெட்டிகள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கிடைக்கும். அனைத்து தரப்பு விவசாயிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்மூலம் நல்ல லாபம் பெறலாம்.
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. எனவே தேனீ வளர்ப்புக் கலையை நாம் கற்றுக்கொண்டால் மறைமுகமாக இயற்க்கை அன்னையை பாதுகாத்துக்கொள்கிறோம். எனவே துணிந்து தேனி வளர்ப்பு தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது.
உற்பத்தி முறை
தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோபெட்டிகளில்வளர்க்கலாம்.
தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்

கூடு : இதுஒரு  நீளமான சாதாரண பெட்டியாகும்இதன் மேல் வாட்டில்,பல அடுக்குகளை கொண்டுள்ளதுதோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீஅகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையதுஇந்த பெட்டியின் மொத்தம்செ.மீ ஆகும்தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடையஓட்டைகளை கொண்டுள்ளதுமேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டைஅமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும்சுமார்1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானதுதேனீக்கள் தேன் கூட்டை கட்டஏதுவாகஅடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல்நல்லது.

புகைப்பான் : இது தேனீ வளர்ப்பில்,  இரண்டாவது முக்கிய உபகரணம்ஆகும்இதைசிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம்இதனைதேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல்இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

துணி : நாம் வேலை செய்யும் பொழுதுநம் கண்கள் மற்றும் மூக்குகளைபாதுகாக்க உதவும்.

கத்தி : மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளைபிரிக்கவும் பயன்படுத்தலாம்.

இறக்கை : தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறபடுத்துவதற்கு

இராணி தேனீ பிரிப்பான்
தீப்பெட்டி

தேன்கூடுகளை நிறுவும் முறை
·         தேன் வளர்க்கும் இடமானதுநல்ல வடிகால் வசதியையுடைய திறந்தஇடங்களாகவும்குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும்மேலும்நிறைய மதுரம்மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும்இருக்க வேண்டும்.
·         சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும்ஏனெனில்அப்பொழுதுதான்மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.
·         தேன் கூட்டிற்குள் எறும்பு ஏறுவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள்தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாறு இருத்தல் வேண்டும்.
·         வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின்காலனிகளைகிழக்கு திசை நோக்கி அமையுமாறு தேன் கூட்டை அமைக்கவேண்டும்.
·         தேனீக்களின் காலனிகளைகால்நடைகள்ஏனைய விலங்குகள் ,பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில்அமைக்க வேண்டும்.

தேனீ காலனிகளை அமைக்கும் முறை
·         தேனீ காலனிகளை அமைக்க  இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களைமாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்யவேண்டும்.
·         இதற்கு முன்புபெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோஅல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானதுதேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.முடிந்தால்இராணீ  தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால்இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
·         சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம்  பெட்டியுனுள்வேகமாககூட்டினை கட்ட இயலும்.

காலனி நிர்வாகம்
·         தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில்வாரம் ஓரு முறை அதிகாலைவேளையில்பெட்டிகளை கண்காணிப்பது  அவசியம்.
·         பெட்டியினைகூரைஉற்பத்தி அறைதளம் என்ற முறையில் சுத்தம்செய்ய வேண்டும்.
·         வலிமையான ராணீ தேனீஉற்பத்தி மேம்பாடுதேன் மற்றும் மகரந்தசேகரிப்புராணீ தேனீயின் அறைதேனீக்களின் வலிமைமற்றும் ஆண்தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க  தேனீக்களின்காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
·         கீழே உள்ளதேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதாஎன்று சோதிக்கவேண்டும்.
மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழுபட்டு வலைகளை நீக்க வேண்டும்.
மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.

மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில்நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டுபிரேம் மற்றும் தரைகளைசுத்தம் செய்ய வேண்டும்.


தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
·         தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றிஇளம்வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
·         தேவைப்பட்டால் தடுப்பு போர்டுகளை பயன்படுத்தவும்
·         ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
·         ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில்  சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
·         எல்லா காலனிகளுக்கும்ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டைதவிர்க்கலாம்.

தேன் நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
·         இக்காலத்திற்கு முன்னரேகாலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்துஇருக்க வேண்டும்
·         தேன் கூடு அமைக்கத் தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும்இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடையே  தகுந்த இடைவெளி அளிக்கவேண்டும்
·         இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாறு,தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம்தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளைஇடவும்
·         காலனி வாரம் ஒரு முறை சோதித்துதேன் அதிகமுள்ள பிரேம்களை தேன்கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்குஎடுத்துசெல்ல வேண்டும்எந்த ஒரு பிரேமில், 3 பாகம் தேன், 1 பாகம் மூடப்பட்டஅறைகள்இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியேஎடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2 மூடப்பட்டுஇருக்கிறதோஅவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்.


தேனீக்கள்  மட்டும்தானா?...சுறுசுறுப்பு, அதை வளர்க்கும் இந்த.... இல்லத்தரசியும் படு சுறுசுறுப்புத்தான். இயற்கை எழிலுடன் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவையை அடுத்த சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள மலை மந்திரிபாளையம் கிராமத்து பண்ணை வீட்டில், தேன்பண்ணை தொழிலில் வருமானம் நல்ல தேடும் இல்லத்தரசியாக திகழ்பவர் ரேவதி (வயது26). கணவர் திருஞான சம்பந்தம் (33) துணையோடு, வீட்டில் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை தாண்டி பிற மாவட்டங்களிலும் சீசனுக்கு தகுந்தாற்போன்று தேனீ பெட்டிகளை வைத்து, வருமானம் ஈட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரே மகன் திருநாவுக்கரசு (6). தேனீ...தேன்...பற்றி அவரிடம் கேட்ட போது தேனாக பேசத்தொடங்கினார். அது பற்றி பார்க்கலாம்:–
தேனீ வகைகள்
இந்தியாவில் தேனீ வளர்ப்பில் கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மற்றும் வெளிநாட்டு வகையான இத்தாலி தேனீ என 5 வகை தேனீக்கள் உள்ளன. இதில் தற்போது இத்தாலி ரக தேனீதான் தேனீ வளர்ப்பில் லாபகரமாக உள்ளது.இந்த இத்தாலி ரக தேனீக்கள் அந்த நாட்டில் இருந்து முதன் முறையாக கடந்த 1060–ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இதன் பின்னர் 2006–ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டது. தற்போது இந்த தேனீ வளர்ப்பு ராஜ பாளையம், அரவக்குறிச்சி, கோவை பகுதிகளில் விறுவிறுப்பாக காணப்படுகிறது. சுமார் 130 பெட்டிகளில் இத்தாலிய தேனீக்களை வைத்து வளர்த்து வருகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் நாட்டு தேனீக்களை வைத்து வளர்த்தோம்.
ஆனால் அவற்றில் தாய்–சேய் புரூடு வைரஸ்நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த தேனீக்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து. இதனால் தேன் உற்பத்தியின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் இந்த நாட்டு தேனீக்கள், கூட்டில் நன்றாக தேன் இருக்கும் போது திடீரென அந்த தேனீக்கள் பெட்டியை விட்டு விட்டு ஓடிப்போய்விடும். இதற்கு காரணம் வைரஸ் நோய் தாக்குதல் தான். ஒரு கூட்டில் வைரஸ் நோய்தாக்கி இறக்கும் தேனீக்களை பார்த்ததும், மற்ற தேனீக்கள் அங்கிருக்காமல் பறந்து விடும். இதபோன்ற நெருக்கடி நிலை நாட்டு தேனீ வளர்ப்பில் இருந்தது. இதனால் எங்களுக்கு ஆரம்ப கால தேன் உற்பத்தி லாபகரமாக இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி படைத்தது
இந்த நிலையில் இத்தாலி தேனீயில் நோய் பற்றிய பிரச்சினை எதுவும் கிடையாது. இந்த வகைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இதை கோவை வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ததால் அதைவாங்கி வளர்க்க தொடங்கினோம். இதனால் எங்களின் தேன் பண்ணை தொழில் விறுவிறுப்பானது. இந்த தேனீக்களை பொறுத்தவரை நோய் பிரச்சினை இருந்தது இல்லை. ஆனால் தீவனம் அதிகம் தேவைப்படுகிறது. இதற்காக தேன் அதிகமாக இருக்கும் இடங்களில் அவற்றை வைத்து வளர்க்க வேண்டும். குறிப்பாக பூக்கள் அதிகம் உள்ள இடங்களில் வைத்து வளர்த்தால் தேன் அதிகமாக கிடைக்கும். எங்கள் தோட்டம் தவிர மற்ற விவசாயிகளின் தோட்டங்களில் குறிப்பாக முருங்கை, சூரிய காந்தி, கடுகு போன்ற பயிர்கள் வளரும் தோட்டங்களில் இத்தாலி தேனீ பெட்டிகளை வைத்து நாங்கள் தேன் எடுத்து வருகிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுவதால் பயிர்விளைச்சல் அமோகமாக உள்ளது.
மேலும் இத்தாலி தேனீக்கள் எந்த சூழ்நிலையிலும் பெட்டியை விட்டு ஓடிவிடாது. ஆனால் எறும்பு, குழவி பிரச்சினை இருந்தால் நம் நாட்டுரக தேனீக்கள் பெட்டியை விட்டு ஓடிப்போகும். அதற்கு தீவனம் இல்லாத கால கட்டத்தில் கரும்பு ஜூஸ் வைத்து கொடுப்போம். இந்த ஜூசை தேனீக்கள் வளரும் பெட்டியின் ஒரு பகுதியில் வைத்து விடுவோம். அதை தேனீக்கள் வந்து குடிக்கும். சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் போது பாக்டீரியா நோய்கள் வந்துவிடும். ஆகவே அதை தவிர்த்து விடுவோம். இது தவிர குளுக்கோ விட்டா கொடுக்கலாம். ஆனால் அது அதிக விலை என்பதால் தொடர்ந்து கொடுக்க முடியாது. முருங்கை, கொத்துமல்லி தேன் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் இவைகளின் சீசன் காலங்களில் ஆண்டுக்கு 3 மாதங்கள் தான் தேன் எடுக்க முடியும். கொத்த மல்லி ஒரு மாதத்தில் தான் எடுக்க முடியும்.
ரூ.1 லட்சம் வருமானம்
3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலிய தேனீப்பெட்டி ஒன்றின் விலை ரூ.6,500. இதனை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் 1½ அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ஸ்டாண்டுகள் உண்டு. ஒரு பெட்டிக்கும், அடுத்த பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில் எறும்பு, பல்லி, போன்றவை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாக மாறும். இந்த காலகட்டத்துக்கு பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒவ்வொரு முறை சேகரிக்கும் போதும், 2 கிலோ அளவுக்கு குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதில் இருந்து அடுத்த பெட்டியை உருவாக்கி கொள்ள முடியும். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2,500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவுக்கு தேன்கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்தால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்த பகுதியில் பூக்கள் அதிகமாக உள்ளதோ? அதை தெரிந்து கொண்டு போய் பெட்டிகளை வைக்க வேண்டும். அப்போது தான் ஆண்டு முழுவதும் வருமானம் பெற முடியும். முருங்கை கொத்தமல்லி, கடுகு, சூரிய காந்தி,பந்தல் பயிர்கள், தென்னை ஆகியவற்றில் அதிகளவில் தேன் கிடைக்கும். பொங்கலூர், சுல்தான் பேட்டை பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகளில் பூக்கிற பருவத்தில் பெட்டிகளை வைச்சு தேன் எடுப்போம். ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 5 கிலோ தேன் கிடைக்கும். நாங்கள் சுமார் 130 பெட்டிகள் வரை வைத்துள்ளோம். இதன் மூலம் சராசரியாக மாதம் 5 ஆயிரம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்கிறோம். இந்த தொழிலில் நான், மற்றும் எனது கணவர், மற்றும் மாமனார் வேலுச்சாமி, மாமியார் அன்னப்பூரணி என 4 பேர் ஈடுபடுகிறோம். இதனால் எங்களின் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதற்காக நாங்கள் எங்களிடம் வருகிற அனைவருக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
இத்தாலிய தேனீக்களை வீடுகளில் கூட வளர்த்து லாபம் சம்பாதிக்க முடியும். வீட்டு கொல்லை புறத்தில் ஒரு பெட்டி வைத்தால் மாதம் 4 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் குறைந்த பட்சம் ரூ.250 ஆகும். ஒரு பெட்டியில் இருந்து வாரா வாரம் தேன் எடுக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1000 வரை வருமானம் கிடைக்கும். பெட்டி வைக்கும் இடம் கிராமப்புறமாக, விவசாய நடைபெறும் பகுதியாக இருந்தால் நல்லது. நகரத்தில் வசிப்பவராக இருந்தால் பெட்டிகளை வைக்க மரங்கள் அதிமாக உள்ள பகுதியாக இருக்க வேண்டும். இதற்கு முதலீடு என்பது பெட்டி வாங்கும் செலவுதான். ஒரு பெட்டிக்கு ரூ.6,500 ஆகும்.
மகரந்தம் கிலோ ரூ.2000
தேனீக்கள் கொட்டுவது அக்கு பஞ்சர் வைத்தியத்தில் நல்லது என்கிறார்கள். மூட்டு வலி, நரம்பு வலிகள் வராது. ஒரு சில ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைக்காக செயற்கையாக தேனீக்களை கொட்ட வைக்கின்றனர். இது தவிர தேன் பெட்டிகளில் தேனீக்கள் தங்கள் கால்களில் எடுத்து வரும் மகரந்தத்தை சேரிக்கும் முறையை கையாள்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் மகரந்தம் கிலோவுக்கு ரூ.2000 என நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. இந்த மகரந்தம் பெண்களுடைய நோய்களுக்கு சிறப்பான மருந்தாக உள்ளது. இதை தினசரி சாப்பிட்டு வந்தால் தலைவலி, மூட்டு வலி, உடல் வலிகள் இருக்காது. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதை நாங்ள் சாப்பிட்டு வருகிறோம். தேனை பொறுத்தவரை உள்நாட்டு தேவைக்கே பற்றாக்குறையக உள்ளது. இருந்தாலும் எங்களிடம் தேனை வாங்கி நண்பர் ஒருவர் ஏற்றுமதி செய்கிறார். நல்ல தேன் கிடைப்பது தற்போது அரிதாக உள்ளது. நல்ல தேனாக இருக்கிறதா? இல்லையா என்பதை அறிய ஒரு டம்ளரில் தேனை சிறிது ஊற்றினால் அது கீழே போய் கரையாமல் இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறிது அளவு தேனை கொடுத்தால் ஒன்றும் பாதிப்பு இருக்காது. தேனில் வைட்டமின், மினரல்ஸ், தாதுப்பொருட்கள் உள்ளன. சத்துக்கள்இருப்பதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.