Saturday, 15 June 2013

ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil

aadu ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil


ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு

ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.

வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.

                                                     

  சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இந்தத் தொழிலில் இப்படி ஒரு லாபமா என்று வியந்தவர், சென்னையில் பார்த்த வேலையைக் கைகழுவிவிட்டு, நிரந்தரமாக பாண்டிக்கே சென்றுவிட்டார். இன்று அவரிடம் பல ஆயிரம் ஆடுகள் இருக்கின்றன. இந்த வெற்றிக் கதை ஒரு புதிய வாசலை நமக்கு திறந்துவைக்கிறது. திறம்பட செய்தால் யார் வேண்டுமானாலும் லட்சம் லட்சமாக லாபம் சம்பாதிக்கலாம் என்னும் கனவை இந்தச் சம்பவம் நமக்குள் விதைக்கிறது. ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதே என்னும் கவலை வேண்டாம்.எத்தனை வகையான ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கவேண்டும், எந்த ஆட்டுக்கு என்ன நோய் வரும், அதற்கு என்ன மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப் படைத் தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல். தவிரவும், ஒரு புதிய, வெற்றிகரமான தொழில் வாய்ப்பை உங்களுக்கு இந்நூல் உருவாக்கிக்கொடுக்கிறது.


தலைசேரி ஆடுகள் / Goat தொழில்


எங்களது பண்ணையில் எந்த கலப்பினமும் இல்லாத தலைச்சேரி ஆடுகளை மட்டுமே வளர்க்கின்றோம்.
aaduvalarpu

அதனுடைய சிறப்பு அம்சங்கள் வேறு மிகச்சிறந்த சாதிஆடுகள் 2 வருடங்களுக்கு 3 முறை குட்டி போடும் ஆனால் தலைச்சேரி ஆடுகள் 4 முறை குட்டிபோடுகிறது.

பாலுக்கு சிறந்த ஆடுகள், ஒரு ஈத்துக்கு சராசரியாக 2 குட்டிகள் ஈனும், 3 குட்டிகளும் ஈனுகின்றது. தலை ஈத்து 1 குட்டியும் 2 குட்டிகளும் ஈனுகன்றது.

நன்றாக பால் கொடுத்து வளர்த்து விடுகின்றது. அதற்கு எவ்வளவு தீவனம் தருகிறோமோ அவ்வளவு எடை கூடுகின்றது. வேறு ஆடு இனங்களுக்கு இந்த சிறப்பம்சம் இல்லை.
  

            

Tellicherry Goat Farmதொழில் உலகம் 

நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.

வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.கிடா ஆடுகளின் கொட்டில் ( தொழில்)


கிடா ஆடுகளுக்கென தனியான கொட்டில் அமைத்து பாதுகாக்கவேண்டும். ஒரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.

தனி அறைக் கொட்டில் (தொழில்)0.75 மீ அகலமும் 1.2 மி நீளமும் கொண்ட மரத்தால் அல்லது உலோகத்தாலான ஒரு தனி அறை போன்ற பகுதி தனிக்கொட்டில் எனலாம். அதுவே இட அளவு 2 மீ ஆக இருந்தால் ஆடுகள் நீண்ட நேரம் தங்க வசதியாக இருக்கும்.
சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.


மேய்ச்சல் / திறந்த வெளி ( தொழில் )
12 மீ x 18 மீ அளவுள்ள திறந்த வெளி அமைப்பானது 100-125 ஆடுகளுக்குப் போதுமானது. இந்தத்திறந்த வெளியானது நன்கு கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகளைக் கொண்டிருக்கவேண்டும். நிழல் தரும் மரங்கள் ஆங்காங்கு வளர்க்கப்பட்டிருக்கவேண்டும். நிறைய கம்பிகள் கொண்டு வேலி நன்கு பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஆடுகள் வேலிகளில் உராயும் தன்மை கொண்டவை. கூர்மையான கம்பிகள், நீட்டிக்கொண்டு இருந்தால் அவை ஆடுகள் உரசும் போது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 1 x 1 மீ அளவுள்ள இரும்பாலான 60 செ.மீ உயரமுள்ள உருளை போன்ற அமைப்புகள், திறந்தவெளி மைதானத்திற்கு ஏற்றவை.

பிரித்து வைக்கும் கொட்டில்

மந்தை பெருகப் பெருக இடப்பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கென ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது பிரித்து வைப்பதற்கென 3.6 மீ x 5 மீ அகலமுள்ள ஒரு தனிக்கொட்டில் அவசியம். இதை இரண்டு அல்லது மூன்று அறைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நீர் மற்றும் தீவனத் தொட்டில்கள் அமைக்கவேண்டும்.

தீவனத் தொட்டி

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
மேய்ச்சல் முறைகள்

aaduvalarpu

கயிற்றில் கட்டி மேய்த்தல்

குறிப்பிட்ட இடத்தில் சில ஆடுகளை மேய விடுவதற்கு, இம்மேய்ச்சல் முறையே சிறந்தது. கொட்டிலின் வெளியில் வைத்து குறைந்த எண்ணிக்கையுள்ள அடுகளை மரத்திலோ அல்லது வேறு சில கட்டைகளிலோ கயிறு கொண்டு கட்டி மேய்க்கும் முறையில் அந்த இடங்களின் புற்கள் நன்கு மேயப்படுகின்றன.

இம்முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மேய்த்தல் சிறந்தது. கயிற்றின் நீளம் 35-50 செ.மீ நீளம் இருக்கவேண்டும். மற்ற மதிய நேரங்களில் கொட்டிலில் அடைத்து வைக்கலாம். இம்முறையில் நோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகள் போன்றவை பரவுவது குறைவு.

மேய்ச்சல் முறை

8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்பி இரவு நேரங்களில் மட்டும் பட்டிகளில் அடைப்பது.

கொட்டில் முறை

நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் ஆழ்கூளங்களை போட்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து விட்டு புதிய ஆழ்கூளத்தை நிரப்பினால் சிறுநீர் மற்றும் சாணத்தின் அமோனியா வாயு ஆடுகளை அதிகம் பாதிக்காது.
மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை

4-5 மணி நேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்பிப் பிறகு கொட்டகையில் வைத்துத் தேவையான பசுந்தீவனங்களையும், அடர் தீவனங்களையும் அளிக்கவேண்டும்.பயிர் வயலில் விட்டு மேய்த்தல்

மலைத்தோட்டப் பயிர்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் ஆடுகள் மேயச்சலுக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டின் கழிவுகள் வயல்களில் விழுவதால் மண்ணிற்கு நல்ல சத்துக் கிடைக்கிறது.தீவன மேலாண்மை

பிற கால்நடைகளைப் போல், ஆடுகளும் நல்ல தீவனமும் பராமரிப்பும் இருந்தால் அதிக பால் உற்பத்தி கொடுக்கும். ஆனால் கிராமங்களில் மேய்ச்சலுடன் நிறுத்தி விடுகின்றனர். சரியான அளவு அடர் தீவனங்களும், பயறு வகைகள் அளித்தால் ஆடுகளிடமிருந்து நல்ல இறைச்சியும், பாலும் கிடைக்கும்.

தீவன ஊட்டம்


ஆடுகள் தனிப்பட்ட தீவன ஊடடத்தையே விரும்புபவை. ஆடுகளுக்குக் கோடுக்கும் தீவனங்கள் அடிக்கடி மாற்றப்பட்ட, சுத்தமான, புதியவையாக இருத்தல் வேண்டும். ஏதேனும் கெட்ட துர்நாற்றத்துடனோ, அழுக்கு மண் கலந்தோ இருந்தால் அல்லது மரக்கிளை, சுவர், நட்டு வைத்த குச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டித் தொங்கவிடலாம். இவ்வாறு வைப்பதன் மூலம், புற்கள் அல்லது தழைகள் கீழே விழுந்து வீணாகாமல் இருக்கும். மேலும் அவ்வப்போது சிறிது சிறிதாக ஆடுகளுக்குத் தீவனமளிக்கலாம். அதிக அளவில் ஒரே நேரத்தில் கொடுக்கும் போது பாதித் தீவனம் ஆடுகளின் காலில் மிதிபட்டு வீணாகிறது.

   

ஆடுகளும் அசை போட்டு உண்ணக்கூடியவை. இவை பயறு வகைத் தாவரங்களை அதிகம் விரும்பி உண்கின்றன. இவை சோளம், கம்புச் சோளம், பதப்படுத்தப்பட்ட தீவனங்கள், வைக்கோல் போன்றவற்றை விரும்பவதில்லை. இவை காட்டுப்புற்களை அதிகம் உண்பதில்லை. ஆனால் குதிரை மசால், துவரை, நேப்பியர் புல், தர்ப்பைப்புல், சோயாபீன், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் நன்கு உண்கின்றன. இவைத் தவிர புளியமரம், வேம்பு, இலந்தை போன்றவற்றின் தழைகளையும் முங்பீன் போன்ற பயிறுகளையும் உண்ணும் இயல்புடையவை.

தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளுக்கு 3 முக்கியக் காரணங்களுக்காக ஊட்டசத்துத் தேவைப்படுகிறது. அவை பராமரிப்பு உற்பத்தி (பால், இறைச்சி, உரோமங்கள்) மற்றும் சினைத் தருணத்தில் தேவைப்படுகிறது.

பராமரிப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளின் பரிணாம வளர்ச்சிக்கு கால்நடைகளை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே ஆடுகளுக்கு 25-30 சதவிகிதம் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. பராமரிப்புத் தேவை 0.09 சதவிகிதம் செரிக்கக்கூடிய பண்படாத புரதம் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கலவையாக இருக்கலாம். மற்ற மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மட்டுமே மிக அதிகமாக அதன் உடல் எடையில் 6.5 - 11 சதவிகிதம் அளவ உணவு எடுக்கக்கூடியது. மற்ற கால்நடைகள் அவற்றின் உடல் எடையில் 2.5-3 சதவிகிதம் வரை மட்டுமே தீவனம் உட்கொள்ளும். எனவே சரியான அளவு தீவனம் கொடுத்தால் மட்டுமே வெள்ளாடுகள் அதன் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

3 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லிட்டர் பாலை உற்பத்தி செய்ய 43 கிராம் செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 200 கி ஸ்டார்ச்சும் தேவை. அதே போல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லி பாலை உற்பத்தி செய்ய 60 கி செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 285 கிராம் ஸ்டார்ச் சத்துக்களும் தேவைப்படுகிறது.

50 கிலோ எடையுள்ள 2 லி பால் (40 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன்) உற்பத்தி செய்யக்கூடிய ஆட்டிற்கு 400 கிராம் அடர் தீவனமும், 5 கிலோ குதிரை மசால் போன்ற தீவனங்கள் அளிக்கவேண்டும். 12-15 சதவிகிதம் புரதச் சத்துள்ள தீவனங்கள், உலர் புற்கள் அளிக்கப்படவேண்டும்.

தாதுக்கலவை
தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில் மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.

சாதாரண உப்பு

சாதாரண உப்பு பாலில் சோடியம், குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம். விட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள்

விட்டமின், ஏ, ஈ மற்றும் டி போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை. வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான விட்டமின்களைத் தயாரித்துக் கொள்ளும். அது போக பசும்புற்களில் விட்டமின் ஏ நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற விட்டமின்களைத் தரும். வளரும் கன்றுகளுக்கு விட்டமின்கள் மிகவும் அவசியம்.

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.
பராமரிப்பு முறைகள்


      

Aatupannai

வயதைக் கண்டறிதல்

பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயம் செய்யலாம். பற்களில் தற்காலிகப்பற்கள், நிரந்தரப் பற்கள், பால் பற்கள் எனப் பலவகை உண்டு. ஆடுகளில் மேல் தாடையில் பற்கள் காணப்படுவதில்லை. எனவே கீழ்த்தாடைக் பற்களின் எண்ணிக்கையை வைத்து வயதைக் கணிக்கலாம். கீழ்க்கண்ட அட்டவணை ஆடுகளின் வயதை பற்களின் எண்ணிக்கையை வைத்து அறிய உதவும் தொழில்.

வயது பற்களின் அமைப்பும், எண்ணிக்கையும்
பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம் கீழ்த்தாடையின் முன்புறம் 8 முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
ஒன்றரை வயது நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்.
இரண்டரை வயது நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
மூன்றரை வயது ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
4 வயது எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
6-7 வயது பற்கள் விழுந்துவிடும்


அடையாளம் இடுதல்

ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம்.
1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல்
2. வாலில் பச்சை தொழில் குத்துதல்

3.காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல்
போன்ற முறைகளைக் கையாளலாம். இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

கொம்பு நீக்கம் செய்தல்

கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.

கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும். காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

காயடித்தல்

இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம். கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும்.

பயன்கள்
1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும்.
2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.
3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும்.
4. அமைதியாக இருக்கும்.

பயிற்சி

ஆடுகள் ஆரோக்கியமாக வளர அவைகளுக்குப் பயிற்சி அவசியம். கொட்டிலில் அடைத்து அல்லது கட்டி வளர்க்கப்படும் ஆடுகள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரமாவது திறந்த வெளியில் திரிய அனுமதிக்கவேண்டும். திறந்த வெளி எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு பயிற்சிக்கு ஏற்றது. பனித்துளி இருக்கும் போதும், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பும் மேய விடுதல் கூடாது. ஈரமான புற்களில் மேயும் போது குடல் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு.

நகங்களை வெட்டுதல்

ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும். இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும். 30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்.

பெட்டை ஆடுகளை தெரிவு செய்தல்

நல்ல இலாபம் தரக்கூடிய மந்தையில் இனப்பெருக்கத்திற்கு பெட்டையத் தேர்வு செய்தல் அவசியம். பெட்டை ஆடுகளின் நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு அவை நல்ல உடல் அமைப்பு பெற்றிருக்கவேண்டும். உடல் நல்ல வளர்ச்சியுடன் தோற்றத்திற்கு ஆரோக்கியமானதாகவும் நான்கு கால்களையும் நன்கு ஊனி நிற்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பக்கவாட்டில் உடல் நீள முக்கோண வடிவமாகவும் கால்கள் வளையாமல் நேராகவும் தோள் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும். இடுப்புக்குழி எந்தளவு குழிந்துள்ளதோ அந்தளவுக்கு தீவனம் அதிகமாக உட்கொள்ளும். உடல் எடைக்குத் தகுந்தவாறு, மடி அதிகம் தொங்காமல் அடிவயிற்றின் பின்பகுதியில் நன்கு உலகம் இணைந்திருக்கவேண்டும்.

ஆட்டின் தோல் நன்கு தளர்ச்சியாக, வழவழப்பாக, மிருதுவாக இருக்கவேண்டும். சில இனங்களில் நல்ல பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் சதைப்பற்று குறைவாக இருக்கும். கழுத்து மெலிந்து தலையுடன் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும். பெட்டை ஆடுகள் சாதுவாகவும் பெண்மைத் தோற்றத்துடனும், இருக்க வேண்டும். மடி சதைப்பற்றின்றி மென்மையாக நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும். காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையானதாகவும் இருக்கும்.

கிடா ஆடுகள் தேர்வு செய்தல்

கிடாக்கள் நல்ல உடல் தொழில் அமைப்பும் வலுவும் பெற்றிருக்கும். நாம் தெரிவு செய்யும் கிடா நல்ல இனப்பெருக்கத் திறனுடையதாக இருக்கவேண்டும். விலா எலும்புகள் நல்ல ஆழத்துடனும் கால்கள் நேராக உடலை நன்கு தாங்கக்கூடியதாக இருத்தல்வேண்டும். பொதுவாக கிடா ஆடுகள் கொம்பு நீக்கப்பட்டவையாக இருத்தல் நலம். மேலும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த ஒட்டுண்ணிகள் பாதிப்புமின்றி இருத்தல்வேண்டும். கிடாவனாது நல்ல பால்தரக்கூடிய இனத்திலிருந்து தேர்வு செய்தல் அவசியம். கிடாக்கள் அதிக சதைப்பற்றுடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருத்தல் வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட கிடாவை அதன் முதல் இனச்சேர்க்கை காலத்தில் 5-6 பெட்டை ஆடுகளுடன் சேர்க்கலாம் (6 மாத வயதில்) 18-24 மாதக் காலத்தில் 25-30 பெட்டைகள் வரை சினைப்படுத்தும் திறனும், நன்கு முதிர்ந்த, நல்ல இனப்பெருக்க காலத்தில், 50-60 ஆடுகளுடன் இனச்சேர்க்கை செய்யும் திறனும் பெற்றது.

இனச்சேர்க்கை காலம்


ஆடுகள் பொதுவாக சூட்டிற்கு வரும் போது உலகம் அவைகளிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும்.

வாலை அடிக்கடி ஆட்டுதல், பாலுறுப்புகள் சிவந்து காணப்படுதல், சிறிது மியூகஸ் திரவம் வழிதல், ஆடு அமைதியின்றிக் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அலறுதல் . சூட்டில் இருக்கும் காலம் 18-21 வரை நாட்கள் வேறுபடும். பெட்டை ஆடு சூட்டிற்கு வந்த இரண்டாவது நாளில் இனச்சேர்க்கை செய்தல் நலம். ஏனெனில் சூட்டிற்கு வந்தபின் 22-48 மணி நேரம் வரை தான் அணுக்கள் உயிருடன் இருக்கும். நல்ல தீவனம் அளித்து முறையாகப் பராமரித்தால் இறப்பு விகிதம் குறைந்து, சினைப்பிடித்தல் அதிகரிக்கும். இனச்சேர்க்கை அல்லது கருவூட்டல் நேரமானது தட்பவெப்பநிலை, இடம், இனம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

பெட்டை ஆடுகள் கருவூட்டம்

பெட்டை ஆடுகள் 1 வயதிலிருந்தே கருவூட்டலுக்குத் தயாராகிவிடும். பொதுவாக 10-15 மாதத்தில் கருவூட்டல் செய்தால் 15-20 வது மாதத்தில் முதல் குட்டி ஈனும் சினைக்காலம் 151+3 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை கருவூட்டல் செய்தல் நலம். சில இனங்கள் 2 வருடத்திற்கு 3 முறை அதாவது 18 மாதங்களுக்கொரு முறை குட்டி ஈனும் 5-7 வருடங்களில் அதிகக் குட்டிகள் ஈனும். சில இனங்கள் 12 வயது வரை கூட நிறையக்குட்டிகள் ஈனும் திறன் பெற்றுள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட ஆடானது அடுத்த குட்டி ஈனுவதற்கு முந்தைய மாதம் வரை பால் கறக்கக்கூடியதாக இருக்கும். சினை ஆட்டை சரியான தீவனமளித்து, நன்கு பாதுகாக்கவேண்டும். மழை, வெயிலிருந்தும் ஒட்டுண்ணிகளிடமிருந்தும் முறையாகப் பராமரித்தால் சிறப்பான கன்றுகளைப் பெற முடியும்.

சினைப் பருவம்

பால் சுரத்தல் தற்காலிகமாக அதிகரிப்பதே ஆடு சினை அடைந்ததன் முதல் அறிகுறியாகும். ஓஸ்டிரஸ் திரவம் வழிவது நின்று விடும். சினைப் பிடித்த முதல் 3 மாதங்களில் குட்டியின் உடல் உருவாகத் தொடங்கும். 6-8 வாரங்களில் குட்டியின் தலைப் பாகம் உருவாகும். கன்று ஈனும் பெட்டை ஆடானது உருவத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படும். சில சமயங்களில் வயிறு புடைப்பதும் தெரியாது. குட்டி ஈனுவதற்கு முன் 6-8 வாரங்களில் மடி உப்பிக் காணப்படும். ஆனால் இதை மட்டும் வைத்து ஆடு சினைப்பிடித்துள்ளதாக எண்ணிவிட முடியாது. சில சமயங்களில் சினைப் பிடிக்காத போதும் மடியிலிருந்து பால் சுரக்கும்.

ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். ஆனால் குட்டிகள் எந்தளவு குறைவாக ஈனுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான குட்டிகளாக இருக்கும். குட்டிகளின் எண்ணிக்கை ஆட்டு இனம். தட்பவெப்பநிலை, சினைப் பிடிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. ஹிசார் பண்ணையில் பீட்டல் இனமானது 35 சதவிகிதம் ஒரு குட்டியும் 54 சதவிகிதம் இரு குட்டிகளும், 6.3 சதவிகிதம் 3 குட்டிகளும் 0.4 சதவிகிதம் 4 குட்டிகளும் போடும் திறன் பெற்றது. ஜமுனாபுரியியல் இரட்டைக் குட்டி ஈனும் சதவீதம் 19-50 சதவிகிதம் 19-50 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது. இதுவே பார்பரியில் 47-70 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது.


வெள்ளாடுகள் கவனிப்பும் பராமரிப்பும்

சினை ஆடுகள் பராமரிப்பு
1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.
2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.
3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.
6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.

பிறந்த குட்டிகளின் பராமரிப்பு
 குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
 பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும்.
 குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
 தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும். தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
 தொப்புள் கொடியின் மறு நுனியை டின்ச்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.

 முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.

 புதிதாகப் தொழில் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
 தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
 முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
 முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
 கிடா குட்டிகள் இனச்சேர்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ள வற்றை காயடித்து விட டவேண்டும்.
 சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.

குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம் அதோடு பண்ணைப் பதிவேடுகளில் அடையாளமிட்டுக் குட்டிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முறையாகப் பராமரிக்கவேண்டும்.


ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விடல்

பால் கறக்கும் போது கவனிக்க வேண்டியவை

பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்கவேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்கவேண்டும். கறப்பதற்கு முன், மடி மற்றும் காம்புகளை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கைவிரல்களை நன்கு மடித்துக் கறக்கவேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.

இளம் பெட்டை ஆடுகளின் பராமரிப்பு தொழில்


நல்ல தரமுள்ள பசும்புல் மற்றும் அடர் தீவனங்களை உலகம்  சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.கலப்புச் செய்ய வேண்டிய ஆடுகளை வாரா வாரம் சரிபார்த்துப் பதிவேட்டில், குறித்துக் கொள்ளவேண்டும்.ஒவ்வொரு 18-24 நாட்களுக்கு ஒரு முறை பெட்டை ஆடு சூட்டிற்கு வரும். இந்தச்சூடானது 2-3 நாட்கள் வரை இருக்கும். சராசரி சினைக்காலம் 151+3 நாட்கள் ஆகும்.


      

44 comments:

 1. இது நல்ல பயனுள்ள தகவல் , ஆனால் இதுபோன்ற தகவல்கள் இன்றுவரை கிராமப்புறங்களுக்கு சென்றடையவில்லை என்பதுதான் வருத்தப்பட வைக்கின்றது .

  ReplyDelete
 2. Nalla aadukal enku kidaikum, nan aadu valarkka virumpukiren,thayavu seithu theriya padutunkal,

  ReplyDelete
 3. என்னிடம் (செம்மறி) ஆடுகள் உள்ளது.

  கறிக்காக எடை 20 முதல் 25 கிலோ விற்க 100 ஆடுகள் உள்ளது

  மிக குறைவான விலை கைபேசி: .7502128383 & 9944746858

  ReplyDelete
 4. ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil

  ReplyDelete
 5. ஆடு வளர்ப்பு முறை தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை’ இப்பொழுது பிரபலம் ஆக உள்ளது.விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து அறுவடை செய்துவருகிறார்கள்.
  ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு? சொல்பவர் வாயில் ஆப்பு?

  ReplyDelete
 6. ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் EPPADI SEIYA VENDUM ENGU SENDRU PARAKKA VENNDUM.. EN IDAM 3 ACRES NILLAM ULLADHU..

  ReplyDelete
 7. entha vagai aadu valarppil labam athigam

  ReplyDelete
 8. Hai i have idea to do the business so can you provide me the details,my native is thiruvarur district,i execepting your valuable ideas,knoweldges.initially how much moned need to start the farm,my email id is ksaran.saran@gmail.com

  ReplyDelete
 9. என்னிடம் (வெள்ளாடு) ஆடுகள் உள்ளது.

  கறிக்காக எடை 20 முதல் 35 கிலோ விற்க 100 ஆடுகள் உள்ளது

  ReplyDelete
 10. என்னிடம் ( வெள்ளாடு ) ஆடுகள் உள்ளது.

  கறிக்காக எடை 20 முதல் 35 கிலோ விற்க 100 ஆடுகள் உள்ளது

  மிக குறைவான விலை கைபேசி: .9943122018 & 7373916488

  ReplyDelete
 11. adu kutti engu kidaikum solluga pls

  ReplyDelete
 12. ஆடு வளர்ப்பவர்களுக்கு நல்தொரு பயனுள்ள தொகுப்பு

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. ஆடுகள் வளர்க்க இடம் வாடகைக்குக்

  கிடைக்கும்.

  இடம்: தஞ்சாவூர் மாவட்டம்,

  சுவாமிமலை

  9843799358

  ReplyDelete
  Replies
  1. vadagai enna idam evalavu
   9962534093

   Delete
  2. How much land u have and rent details pls tell me my no 7299222897

   Delete
  3. 2400ச அடி. வாடகை 3000 ரூபாய்.

   Delete
 15. Good morning, i have an idea to do a small business. And i do have empty land about 5000 sqft in Karanodai. Can you provide me the following details,i excepting your valuable ideas,acknowledges.initially how much money need to start the farm,what what would the profit.Pl mail me to balachandar1973@gmail.com

  ReplyDelete
 16. Good morning, i have an idea to do a small business. And i do have empty land about 5000 sqft in Karanodai. Can you provide me the following details,i excepting your valuable ideas,acknowledges.initially how much money need to start the farm,what what would the profit.Pl mail me to balachandar1973@gmail.com Anyone has worth full ideas pl share with me. Just give me missed call 9941030010

  ReplyDelete
 17. Hi this is kalaiarasan from thanjavur, I have agri land in thanjavur. Have water facilities and labour facilities. I would like to start this business or related business. Can share your valuable ideas for me to start good business mail I'd ; kalaiarasan.j@gmail.com, 8939664751

  ReplyDelete
 18. Hi this is kalaiarasan from thanjavur, I have agri land in thanjavur. Have water facilities and labour facilities. I would like to start this business or related business. Can share your valuable ideas for me to start good business mail I'd ; kalaiarasan.j@gmail.com, 8939664751

  ReplyDelete
 19. AADU KUTTI I NEED CALL ME 9626067172

  ReplyDelete
 20. dear sir


  eppadi vartha aadukalai virpanai seiyalam

  ReplyDelete
 21. aattu pannaiyil mudhaleedu syya nalla aaatupannai detail thevai

  ReplyDelete
 22. dear sir vardha aadukalai eppadi virpanai seiyalam

  ReplyDelete
 23. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

  ReplyDelete
 24. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

  ReplyDelete
  Replies
  1. Sir panjakavya nattu marunthu ullathu thevai endral angavum dharmadurai 9787234294 nanri

   Delete
 25. Aadu valarka idam kidaikum. Gali manai. 2400 sq.ft.
  Swamimalai. 9843799358. Advance 30000. Rent 3000.

  ReplyDelete
 26. ஆடு வளர்க்க காலி மனை உள்ளது. 2400ச.அடி.
  30000முன்பணம். 3000 வாடகை. 9843799358. சுவாமிமலை.

  ReplyDelete
 27. aadu dheevana purkal vithaigal vaithu ullavarkal alaikkavum 9655704376

  ReplyDelete
 28. Sir panjakavya marunthu ullathu thevai endral angavum 9787234294

  ReplyDelete
 29. நல்ல முரையில் செய்த பஞ்சகாவியம் மருந்து எங்களிடம் விற்பனைக்கு உள்ளது.தேவை படுபவர்கள் அனுகவும் தர்மதுரை 9787234294 நன்றிநன்றி...

  ReplyDelete
 30. ஆடுகள் வளர்க்க இடம் வாடகைக்குக்

  கிடைக்கும்.

  இடம்: தஞ்சாவூர் மாவட்டம்,

  திருநாகேஸ்வரம்

  9786789619

  ReplyDelete
 31. ஆடுகள் வளர்க்க இடம் வாடகைக்குக்

  கிடைக்கும்.

  இடம்: தஞ்சாவூர் மாவட்டம்,

  திருநாகேஸ்வரம்
  காற்றோட்டமான தென்ணந்தோப்பு 10000 ச.அடி
  9786789619

  ReplyDelete
 32. சுய தொழில் மூலம் கூட்டாக சோடா கம்பெனி துவங்க உள்ளோம். அதற்கான jeera கலவை யாரேனும் சோல்லி தர இயலுமா

  ReplyDelete
 33. Aattuk kutti yangu kedaikum , thorayamana vilai & ragam , thanthuthava mudiyuma?

  ReplyDelete
 34. i hve 3 ackers land anybody intrested come on partnership for valarpu aadu
  contact 9786860047
  7010525998

  ReplyDelete
 35. i hve 3 ackers land anybody intrested come on partnership for valarpu aadu
  contact 9786860047
  7010525998 in thiruvannamalai

  ReplyDelete